ஞாயிறு, 8 நவம்பர், 2009

சொந்த பிறப்புரிமை தொடரை அறிய உதவுகின்றத அமெரிக்க நிறுவனம்







ஒவ்வொரு மனிதனும் தனது பிறப்புரிமை தொடரை தானே அறிந்து கொள்ள அதை சேமித்து வைக்க அதன் பால் உள்ள தகவல்களை அறிந்து கொள்ளும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது வளர்க்கப்பட்டுள்ளது என செய்து காட்டியுள்ளது கலிபோர்நியாவை மையமதாக கொண்டு இயங்கும் உயிர்
நுட்பவியல் நிறுவனம் ஒன்று.

1700 அமெரிக்க டொலர் கட்டணத்தில் இந்த சேவையை செய்ய தயாராகிவிட்டது அந்த நிறுவனம்.அதாவது மனித பிறப்புரிமை தொடரை வரை படமாக்கி அதில் உள்ள தகவலிகளின் ஒப்பீட்டு தரவுகளை பெற்றுக் கொள்ளும் வகையான சேவை ஒன்றை அது செய்ய முன்வந்துள்ளது.
இதுவரை இவ்வாறான இரண்டு பிறப்புரிமை தொடர் வரை படங்கள் அந் நிறுவனத்தால் செய்து முடிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் ஒரு வரை படத்துக்கான கட்டளையை தாம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த திட்டம் International HapMap project என்னும் பெயரால் அழைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது அந் நிறுவனம் இணைய வழியிலான பதிவுகளை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அதில் இவர்கள் பிறப்புரிமை பொருள் மாதிரி ஒன்றையும் சிறிது பணத்தையும் அனுப்பி வைக்கும் படிகோரியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
2000 ஆம் ஆண்டு ஒரு மனித பிறப்புரிமை தொடரை அறிய வரைபடமாக்க செலவான தொகையான 100 மில்லியன் டொலருடன் ஒப்பிடும் பொது தற்போது இச் சேவை மிகவும் கைக்கு எட்டிய பெறுமதியில் கிடைக்கும் பாக்கிம் பெற்றுள்ளதால் வரும் காலங்களில் பல தீராத பிறப்புரிமை பிறள்வுகளால் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகளும் குணமாக்கும் வழிகளும் கண்டறியப்படவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மருந்துவ உலகு மகிழ்ச்சியில் உள்ளது.

திங்கள், 2 நவம்பர், 2009

புதிய சமுத்திரத்தை உருவாக்கவுள்ள எதியோப்பியாவின் பிளவு.




பூமியில் தற்போது உள்ள சமுத்திரங்களின் எண்ணிக்கை இன்னும் சில காலத்தில் மேலும் ஒன்றால் அதிகரிக்கும் சாத்தியங்கள் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

20 அடி அகலமான இவ் பிளவு 2005 இல் உருவானது தற்போது இவ் பிளவு புதிய சமுத்திரம் ஒன்று உருவாக வழி ஏற்படு்த்தலாம் என்னும் கருத்து பரவலாக எழுந்துள்ளது.
ஆனாலும் இது இன்றுவரை முரண்பாடான கருத்துக்களையும் ஏற்படுத்தி வருகின்றது என்பதுடன் இது வரை இவ் பிளவு பற்றிய சரியான தகவல்கள் தரவுகள் முழுமையாக திரட்டப்படவில்லை என்பது முக்கியமான விடையம் என் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.
இதே போல் பிறிதொரு பிளவு செங்கடலையும் இரு கூறுகளாக பிரிக்கும் செயற்பாட்டை மிக மெதுவாக செய்து வருவதாகவும் பிறிதொரு ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

அதே நேரம் எதியோப்பியாவில் உருவாகியுள்ள இப் பிளவு அதன் மொத்த நீளமான 35 மைலுக்கும் ஒரே நாளில் நகர்ந்துள்ளதுடன் இதன் வடமுனையில் உள்ள "டபுகு" எரிமலை வெடித்து அதன் குளம்பு பிளவின் ஊடாக பாய்ந்து பிளவு மீண்டும் ஒட்டிக் கொள்வதை தடத்துள்ளதையும் தற்போது அவதானித்துள்ளதாக விஞ்ஞானிகள் குழு அறிக்கை இட்டுள்ளது.இதன்அடிப்படையில் அவர்கள் முன்மொழிந்துள்ள கருத்தே புதிய சமுத்திர உருவாக்கத்தை தெரிவித்துள்ளது.

அதாவது கடல் நீரோட்டங்களை பூமியில் நிலப்பரப்பிள் புகுந்து விடாமல் தடுத்து வைத்துள்ள பாறை வரம்புகள் இவ்வாறான பிளவுகளுக்குள் எரிமலைக் குழம்புகள் செல்லும் போது உருவாகி நீரோட்டஙக்ள தடுத்து பெரும் அளவு நீரை தேக்கி சமுத்திர உருவாக்கத்துக்கு காரணியாகி விடும் என்பது அவர்கள் கருத்து.
அதே போல் சமுத்திர தட்டுகள் கண்டத் தட்டுகளின் எல்லைகளில் அமைந்துள்ள தொழிற்படு நிலையில் உள்ள எரிமலைகள் வெடித்து புவித் தட்டுகள் பிரதான தட்டில் இருந்து சிறிது சிறிதாக பிரிந்து செல்லும் வாய்புகள் பற்றியும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவகள் பிளவுகள் ஏற்படும் பகுதியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மிகவும் ஆழமான நிலப்ப்ரப்பில் நடைபெற்றுள்ள மாற்றங்கள் என்ன என்பது பற்றி ஆராய்வதை நோக்காக கொண்டு விஞ்ஞானிகள் எதியோப்பியாவில் முகாமிடத் தொடங்கியுள்ளார்கள்.
ஆபிரிக்க அரேபிய கணடத்தட்டு எதியோப்பியாவில் உள்ள ஆபார் பாலை வனத்தில் சந்திக்கும் இவை இரண்டும் ஒன்றில் இருந்து ஒன்று கடந்த 30 மில்லியன் வருடங்களாக ஆண்டுக்கு 1 அங்குலம் என்னும் வேகத்தில் பிளவு பட்டு வந்துள்ளன.
இவ் தரவுகள் மற்றும் நில அதிர்வுகள் அடிப்படையிலான தருவுகள் கணிப்புகள் கொண்டு கருத்து வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் அரேபியன் கடலில் தற்போது 186 மைல் நீளமான தாழ்வு ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக தெரிசித்துள்ள விஞ்ஞானிகள் செங்கடல் இன்னும் மில்லியன் ஆண்டுகளினுள் புதிய ஒரு கடலிற்குள் நகரும் என்னும் கருத்தை முன்வைத்துள்ளனர். இத்துடன் செங்கடல் ஏடன் விரி குடாவையும் இணைக்கும் புதிய சமுத்திரமாகவும் அரேபியன் கடலின் தொடுவாயாகவும் அரேபியன் குடாநாட்டில் யேமனுக்கு இடையிலும் சோமாலியாவுக்கு கிழக்கிலும் உருவாகலாம் என்னும் முன்மொழிவை வெளியிட்டுள்ளனர்.தெரிவித்துள்ளனர்.

புதன், 28 அக்டோபர், 2009

20 வருடத்தில் புலிகள் அழிந்துவிடும் ஆபாயம்.





தற்போது மிகப் பெரும் ஆபத்தில் உள்ள வனவிலங்குகளில் ஒன்றான புலிகள் சரியான காப்பு நடவடிக்கைகளை விரைவு படுத்தாவிடின் இன்னும் 2 தசாப்தங்களில் அழிந்துவிடும் என் எச்சரிக்கின்றனர் வனவிலங்கு வல்லுனர்கள்.
தற்போதைய கணிப்பின் படி 12 ஆசிய நாடுகளில் 3500 வரையான புலிகள் வாழ்ந்து வருவதாகவும் இது கடந்த நூற்றாண்டில் 100000 ஆகா காணபட்டதாகவும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரு்டா வருடம் பல புலிகள் சட்ட விரோதமான முறையில் கொல்லப்படுவதாகவும் அவற்றின் உடல் பாகங்கள் விற்பதன் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வரையான வியாபாரம் நடைபெறுவதாகவும் இன்ரப்போல் அறிக்கை இட்டுள்ளது.புலித் தோல் விலையுயர் அலங்கார ஆடையுற்பத்திக்காக பெரும்பாலும் விற்கப்படுகின்றது. குறிப்பாக ஒரு புலித் தோல் சீனா போன்ற நாடுகளில் 20000 டொலர் பெறுமதியில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இவற்றின் காரணமாக புலிகள் வேகமாக அழிந்து செல்வதாகவும் இதை விட ஆசியாவில் அவற்றின் இயற்கை வாழிடங்கள் அவற்றின் இரைகளுக்கான அதாவது மேச்சல் விலங்குகளுக்கான வாழிடங்கள் அழிக்கப்பட்டுச் செல்வதாலும் இது நடைபேறுகின்றதாக தெரிவித்துள்ள வனவிலங்கு பாதுகாவலர்கள் உடனடி நடவடிக்கை மூலம் புலிகள் அருகிச் செல்வதை தடுக்க பலரது ஒத்துளைப்பு தேவை எனத் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தியா வங்காளதேசம் கம்போடியா பூட்டான் சீனா இந்தியா இந்தோனேசியா லாவோஸ் மலேசியா மியான்மார் நேபாளம் ருஸ்யா தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் புலிகள் தற்போது உள்ளன.

பூமியின் ஒவ்வொரு மூலையிலும் மனிதர்கள் குழந்தைகள் பெண்கள் என வேறுபாடு இன்றி பல வழிகளில் இறக்க காரணமாகும் சுயநலம் பிடித்தவர்கள் வாழும் இந்த பூமியில் அழகிய விலங்கு ஆனாலும் புலிகள் வாழ சுயநலம் கொண்டவர்கள் முன்வந்து வழிவிடுவார்களா?

இராட்சத கடல் வாழ் அங்கியின் சுவடுகள்


இராட்சத அங்கின் உருவமும் அதன் ஏனைய அங்கிகளுடன் ஆன ஒப்பீடும்


கடலில் வாழ்ந்ததாக கருதப்படும் இராட்சத அங்கி ஒன்றின் வன்கூடுகள் எச்சங்களாக கண்டறியக்கட்டுள்ளதாக பிரித்தானியா ஆய்வுக் கழகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்டுள்ள தாடை என்புகள்.
இதன் நீளம் மட்டும் 8 அடி அதாவது 2.4 மீற்றர் நீளம் கொண்டுள்ளதாகவும் இதன் மொத்த நீளம் ஏறத்தாள 16 மீற்றர் அதாவது 54 அடியாக இருக்கலாம் எனவும் அவ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது முதளை உருவாகதாக இருக்கலாம் என்றும் ஒரு நேர உணவுக்கே டைனோசர்களில் ஒன்றான Tyrannosaurus rex இனை உண்ணும் அளவில் அவற்றின் உணவு உண்ணும் வினைத்திறன் காணப்பட்டிருக்கும் என்னும் ஆரம்பக் கட்ட ஆய்வின் பின்னர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நான்கு வருட தொடர் ஆராய்ச்சியின் பின்னர் இதை கண்டறிந்துள்ள தொல் பொருள் மற்றும் சுவட்டு ஆய்வாளர் இது பிரித்தானியாவின் தெற்கு கடற்கரையில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என்றும் பிலியோசரஸ் எனப்படும் வகுப்பினுள் உள்ளடக்கப்படும் அங்கியின் சுவடு என்றும் தெரிவித்துள்ளார்.
7 தொடக்கம் 12 தொன்வரையான நிறைகொண்டிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ள இவ் சுவட்டு ஆதாரமே இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளதில் மிகப் பெரிது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் இவ் சுவட்டு ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் கடல் பிரதேசத்தில் மேலும் இவ்வகையான சுவட்டு ஆதாரங்கள் ஏதாவது கிடைக்கின்றனவா எனத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.நான்கு அவயவங்கள் கொண்டுள்ளதாகவும் வேகமாக நீந்தும் தன்மை கொண்டதாகவுமு் இவ் அங்கி இருந்துள்ளது என்றும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில் வருடங்களுக்கு முன்னர் நோர்வேயில் கண்டெடுக்கப்பட்ட இரை கெளவ்வி ஒன்றின் வன்கூடும் 2002இல் மெக்சிக்கொவில் கண்டெடுக்கப்பட்ட அராம்பெரி இராட்சத அங்கியின் வன்கூடும் ஒரே அளவுடையதாக கருதப்படுகின்றது.


கணிணி வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அங்கியின் உருவம்
பூமியில் மனிதன் இன்று ஆட்சியாக இருந்தாலும் வெவ்வேறு சூழல் தொகுதிகளில் வெவ்வேறு மிருகங்கள் முன்னைய காலத்தில் ஆட்சியாக வாழ்ந்து அழிந்துள்ளன என்பதற்கு மீண்டும் ஒரு பலமான ஆதாரம் கிடைத்துள்ளமை இட்டு ஆராச்சி உலகு மீ்ண்டும் ஒருமுறை சந்தேசப்பட்டுள்ளது.

நன்றி பிபிசி மற்றும் ரைம்ஸ்

திங்கள், 26 அக்டோபர், 2009

ஆப்பிரிக்க யானை இனம் 15 ஆண்டுகளுக்குள் அழியும் அபாயம்


ஆப்பிரிக்க யானை இனம், இன்னும் 15 ஆண்டுகளில் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பன்னாட்டு விலங்குகள் நல அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான அரிய வகை விலங்குகள் வசிக்கின்றன.
இவற்றில், ஆப்பிரிக்க யானைகள் மிகவும் பலம் பொருந்தியவை. அகன்ற காதுகள், மிக நீளமான தும்பிகைகளுடன் இவை தோற்றமளிக்கும்.
தற்போது அதன் தந்தங்களே அந்த யானை இனத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்து விட்டது. ஆப்பிரிக்க யானைகளின் விலை மதிப்பற்ற தந்தங்களுக்காக அவற்றை பல சட்டவிரோத கும்பல்கள் வேட்டையாடி வருகின்றன.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சட்ட விரோதமான சில பகுதிகளில் ஆபிரிக்க யானைத் தந்தங்கள், அதிக விலைக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அவற்றை வேட்டையாடும் போக்கு அதிகரித்து வருகிறது. இது குறித்து பன்னாட்டு விலங்கு கள் நல நிதியம் தெரிவித்துள்ளதாவது,
சர்வதேச அளவில் போதைமருந்து, ஆயுத கடத்தல் ஆகிய சட்ட விரோத வியாபாரம் தான் மிக அதிக விலை மதிப்பிற்கு நடக்கிறது.
இவற்றுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது யானைத் தந்தம் வியாபாரம், ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபா அளவுக்கு இந்த வியாபாரம் சர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கிறது. தினமும் 104 யானைகள் தந்தங்களுக்காக வேட்டை யாடப்படுகின்றன.
இந்த போக்கு தொடர்ந்தால் இன்னும் 15 ஆண்டுகளில் ஆப்பிரிக்க யானை இனமே முழுவதுமாக இல்லாமல் அழிந்து விடும்

நன்றி விக்கி நியூஸ்

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

விவசாயத்தில் நனோ தொழில் நுட்பம்.



விவசாயத்திலும் நனோ தொழில் நுட்டபத்தினை புகுத்திவிட முயன்றுவரும் ஆராய்ச்சியாளர்கள் தற்போது அதன் முதல் மைல் கல்லை எட்டியுள்ளார்கள்.
தக்காளியை தமது பரிசோதனைக்கு உட்படுத்தி அதில் ஒரு வெற்றியை பெற்றுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தக்காளி விதைகளை காபன் நுண் குழாய்களுடன் இணைத்து நன்கு கலந்து ஊறவைத்து விதைத்தபோது அவர்கள் பெற்ற அவதானங்கள் வரும் காலத்தில் நனோதொழில் நுட்பம் கொண்ட விவசாய பிரயோகத்தில் ஏற்படப்போகும் சாத்தியங்கள் புரட்சிகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தலைமுடியில் தடிப்பில் 1/50000 என்னும் தடிப்பு கொண்ட காபன் நுண்குழாய்கள் கலந்து விதைக்கப்பட்ட தக்காளி வித்துக்கள் சாதாரண வித்துக்களை விட வேகமாக முளை விட்டு வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆர்கானாஸ் பல்கலைக்ழககத்தின் விஞ்ஞானிகள் தக்காளி விதைகளை காபன் துண் குழாய்கள் carbon nanotubes உடன் சேர்ந்து சிறிதளவு மன் மற்றும் பாறை துகள்கள் உட் சேர்த்து விதைத்து பரீட்சித்தபோது அது விதையின் உயிரியல் ரீதியான செயற்பாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதை அவதானித்துள்ளனர்.
இதில் முளைக்கும் போதான தாவர வித்துக்கள் அகத்துறிஞ்சும் நீரின் அளவை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.
சாதாரணமாக 38.9 சதவீதமான நீரை வித்துக்கள் முளைக்கும் பொது அகத் துறிஞ்சுவதாகவும் ஆனால் காபன் சிறு குழாய்கள் கலந்து முளைக்கவிடப்பட்ட குழாய்கள் 57.6 வீத நீதை அகத்துறிஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.



இதன் தொடர்ச்சியான விதைகள் சாதாரண நிலையைவிட இரு மடங்கு வேகமாக முளைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது வரை அவ் நுண் குழாய்கள் நீர் உள்ளீட்டை அதிகரிப்பதில் செலுத்தும் சரியான தாக்கம் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதில் விஞ்ஞானிகள் சிரமத்தை எதிர்நோக்கி வந்தாலும் இவ் விஞ்ஞான அடைவு வெகுவிரைவில் விவசாயத்தில் பெரும் புட்சியை உருவாக்கலாம் எனதெரிவித்துள்ளனர்.


நன்றி போக்ஸ் நியூஸ்

சனி, 24 அக்டோபர், 2009

மலாவியில் மனித தோற்றம் இடம் பெற்றுள்ளதா?




தென்மேற்கு ஆபிரிக்க நாடான மலாவியில் மனித இனம் தோற்றம் பெற்றிருக்காலம் என்னும் சந்தேகங்கள் எழுப்பக்கூடிய சில சுவட்டு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.




அங்கு அண்மையில் அகழ்வாராட்சிக்கு உட்படத்தப்பட்ட பகுதி ஒன்றில் இருந்து புராதன ஆயுதங்கள் மற்றும் எச்சங்கள் ஆதாரமாகக் கொண்டு இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.மலாவியில் வட நகரான கரோங்காவின் பின்தங்கிய இடம் ஒன்றில் இவ் மானிடவியல் அகழ்வு இடம் பெற்றுள்ளதாகவும்.இவ் கண்டற்கை தற்போது உள்ள ஆபிரிக்காவின் பெரிய "றிவ்ற்" பள்ளத்தாக்கு மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் மனித இனம் தோன்றியதற்கான இடம் என்னும் கொள்கையை வலுப்படுத்துவதாகவும் அத்துடன் இவ் பரப்பில் மலாவியை இனி இணைக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இவ் பகுதியில் டைனோசர்கள் போன்ற 100 தொடக்கம் 140 மில்லியன் ஆண்டுகள் வரை வாழ்ந்த அங்கிகளின் எச்சங்களை கொண்டு இருந்துள்ளதாகவும் அதேபோல் 6 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மனித மற்றும் மரவாழ் மூதாதைகளையும் கொண்டிருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தன்சானியாவில் மனித முதாதைகள் தோன்றியுள்ளது என்னும் கருத்தும் அதற்கான ஆதாரங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் தன்சானியா எல்லையில் உள்ள இவ் மலாவியில் அதேவகையிலான அகழ்வின் மூலம் மனித மூதாதை எச்சங்கள் வாழிட சுவடுகள் கண்டிறியப்பட்டுள்ளதை மனித இனம் தோன்றியது பற்றிய பல வினாக்களுக்கு விடைதரும் என எதிர்பார்க்கப்படுகின்றது


நன்றி றொய்ரர்ஸ்

வெள்ளி, 23 அக்டோபர், 2009

பட்டினிச்சாவின் விளிம்பில் 6 மில்லியன் எதியோப்பியர்




எதியோப்பியாவில் 6 மி்ல்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி இருப்பதாகவும் தமக்கு உடனடியான உணவு தேவையை பூர்த்தி செய்யும் படியும் ஏதியோப்பியா கோரியுள்ளது.கடந்த காலங்களில் அங்கு நிலவிய பொதுவுடைமை கொள்கைகள் காரணமாக முதலாளித்துவ நாடுகளால் ஒதுக்கப்பட்டு இருந்த எதியோப்பியாவில் தற்போது வரைக்கு மில்லியன் மக்கள் பட்டிணியால் இறந்துள்தை சுட்டிக்காட்டியுள்ளது அத்துடள் அந் நாடு பாரிய தொண்டு நிறுவனற்களின் உடனடியான நிவாரணப் பணியையும் கோரியுள்ளது.
தற்போது ஆபிரிக்காவின் சில நாடுகளில் நிலவி வருகின்ற மிகப் பெரும் வறட்சியும் இதற்கு காரணமாகியுள்ளதை தொடர்ந்து அங்கு மிக்ப் பெரும் பட்டினிச் சாவு நிலைமை தோன்றியுள்ளது.ஏற்கனவே கென்யா மற்றும் சூடான் என்பன கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன.தொடரும் வறட்சி காரணமாக 60 வீதமான மக்கள் தமது வாழிடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் பல விளை நிலங்கள் கைவிடப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.தற்போதைய நிலையில் 8.5 மில்லியன் எதியோப்பியர்களில் 4.5 மில்லியன் எரியோப்பியர்களுக்கு உடனடியாக உணவு உதவி தேவை என்றும் உதவியாக தமக்கு 121 மி்ல்லியன் அமெரிக்க டொலர் தேவை என்றும் எதியோப்பிய விவசாய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த பலகாலமாக சக்கரச் செயற்பாடாக நிகழும் வறட்சி காரணமாக எதியோப்பியா தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் 1984 இல் நிகழ்ந்த பாரிய வறட்சி காரணமான தாக்கங்கள் உலக கவனத்தை ஈர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போதும் அதே நிலைமையை ஒத்த நிலைமை உருவாகி வருகின்றதாக தொண்டு பணியாளர்கள் தெரிவித்துள்ளார்கள் அத்துடன் தற்போது ள்ள உணவு விலையும் அங்குள்ள மக்களை மேலும் பட்டினி இட்டுச் செல்கின்றதாகவும் தெரிவித்துள்ள தொண்டு நிறுவனங்கள் எதியோப்பிய அரசின் கணிப்பை விட அங்கு பட்டிணியை எதிர்நோக்கியுள்ள மக்கள் தொகை அதிகமாக இருக்க கூடும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளது.இவ் பட்டினி நிலைமை போசாக்கு இன்மை காணைமாக சிறியவர்கள் பெரியவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக அவர்களின் அவயவங்கள் மெலிந்து ஒட்டிய நிலையில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படகிறன்றது.

குறிப்பு: இயற்கையால் விளைந்த வினை இது ஆனால் செயற்கையாகவும் இவ்வாறான நிலைமைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளன.இது நமது கண்ணின் முன்னே நடைபெற்றுக் கொண்டுள்ளது. சில விடயங்கள் மறைக்கப்பட்டு அதை அறியும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

எனவே இது போலவே உள்ள பல உலக சமூகங்கள் உதவிக்கு ஏங்கி நிற்கின்றன என்பதை புரியவேண்டும் உரியவர்கள் .உங்களில் நாங்கள் என சொல்லித் திரிபவர்கள்.

திங்கள், 19 அக்டோபர், 2009

சூரியக்குடும்பத்துக்கு வெளியே 32 புதிய கோள்கள் கண்டறியப்பட்டன


புவியும் மற்றய பல கோள்களும் அடங்கியுள்ள எமது சூரியக்குடும்பத்துக்குவெளியே சுற்றொழுக்கில் சுற்றி வருகின்ற புதிய கோள்கள் 32 இனை ஐரேப்பிய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.ஐரோப்பிய தென் கண்காணிப்பு தொலைநோக்கியின் ஊடாக அவதானித்தததில் இவ் கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவற்றில் எவையும் புவியின் அளவிலோ அல்லது உயிர் வாழக்கூடிய நிலையிலோ இருப்பதற்கான சான்றுகளை தொலைக்காட்டி காட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ் புதிய கோள்கள் அவதானிக்கப்பட்டதுடன் சூரிய மண்டலத்துக்கு வெளியே மொத்தமாக 400 மேற்பட்ட கோள்கள் அவதானித்துள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவற்றில் 6 கோள்கள் புவியை விட பெரியனவாகும் அவை சுப்பர் ஏர்த் அதாவது மிகை பூமிகள் என அழைக்கப்படுகின்றன.ஏனையவற்றில் பெரும்பாலானவை பூமியை விட சிறியனவாக உள்ளதாகவும் சில வியாழன் போன்று மிகப் பெரிதாக உள்ளதாயும் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவ் கோள்களின் கண்டறிகையானது கோள்கள் தோன்றியுள்ளதாக கருதப்படும் கொள்கையை பலப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் புவிபோன்ற பலகோள்கள் அண்டத்தில் பரந்திருப்பதை தம்மை நம்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இயற்கை வெறும் வெற்றிடம் இல்லை அங்கு அண்டம் இருந்தால் அங்கு கோள்கள் பரந்து கிடக்கின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ் 32கோள்கள் கண்டறியப்பட்டது ஒரு சாதனை என்றும் கோள்கள் கண்டறிவதில் ஐரோப்பிய வானவியலாளர்கள் முன்னோடிகள் என்பதை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஐரோப்பிய வானவியலாளர்கள் தாம் உயர் துல்லியம் மிக்க ஆரைவேகக் கோள்கள் தேடும் பொறிமுறை கொண்ட சில்லியில் அமைந்துள்ள தொலைநோக்கியால் இவ் கண்காணிப்பை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டறிவைச் செய்தது கார்ப HARPS எனப்படும் தொலை நோக்கி எனவும் இது இதுவரை 75 வரையான வேறு சூரிய மண்டலக் கோள்களை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

நன்றி
http://www.eso.org/

சனி, 17 அக்டோபர், 2009

கடலுக்கடியில் நாடாளுமன்றக் கூட்டம்




கடந்த 16 .09.2009 அன்று உலகில் ஒரு வினோதத்தை நிகழ்த்தி காட்டியுள்ளனர் மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது பலருக்கு வினோதமாக பட்டாலும் மாலைதீவாரை பொறுத்தவரையில் அது ஒரு வாழ்வாதார மனிதாபிமான பிரச்சினை.
மாலைதீவின் சிறிய நாடாளுமன்றின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஒரு சூழல் சம்பந்தப்பட்ட ஓப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். அனால் அவர்கள் அதற்கு தெரிவு செய்துள்ள இடம்தான் பலரை மலைக்க வைத்துள்ளனது.
மாலை தீவுகளில் உள்ள படைத்துறைப்பளிகளில் ஒன்றான கிறிபியூசி என்னும் களப்பில் நீருக்கு அடியில் 20 அடி அதாவது 6 மீற்ரர் ஆழத்தில் இவ் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அது மட்டுமல்லாமல் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவ் கூட்ம் நடைபெற்றது இங்கு குறிப்படத்தக்கது தீவிரவாதிகளுக்கோ அல்ல பிற ஊடுருவல் காரருக்கோ பயந்து அல்ல மீன்களுக்கு பயந்து.

மாலைதீவின் ஜநாதிபதி மற்றும் அமைச்சர்கள் 13 பேர் இணைந்து தமது நாட்டை பாதுகாக்குபடியும் அதற்கு புவி வெப்பமாவதற்கு காரணமான பச்சையில்ல வாயுக்களை வெளியிடுவதை குறைக்க நாடுகள் முன்னவரவேண்டும் எனக் கோரும் ஒப்பந்தத்தில் இவ்வாறு நீருக்கடியில் அவர்கள் கூடி கையொப்பம் இட்டுள்ளனர்.
1192 சிறிய தீவுகளை கொண்ட 350000 மக்கள் தொகை கொண்ட இந்து சமுத்திரத்தின் அழகிய தீவு நாடு மாலைதீவு
தற்போது அதிகரித்துவரும் புவி வெப்பமாதல் மற்றும் அதன் தொடர்ச்ச்சியான கடல் மட்டம் உயர்வால் முதலில்
பாதிக்கப்படபோவது அதாவது மூழ்கப்போவது இதுவே.
இதனை அடிப்படையாக கொண்டு மாலைதீவின் வரலாற்றில் முதன் முறையாக நிறுவப்பட்டுள்ள ஜனநாயக அரசு பலவிதமான நடவடிக்கைகளை தேற்கொண்டு வருகின்றது.
வரும் மார்கழியில் கோப்பன்காகனில் நடைபெறவுள்ள காலநிலை மாநாட்டில் முன்வைக்கவென்று இவ்கோரிக்கையை அவர்கள் தயார் செய்துள்ளர்.

வெள்ளி, 16 அக்டோபர், 2009

உயிரி எரிபொருளாலும் ஆப்பா. என்ன செய்யும் உலகு.


தற்போது ஏற்பட்டுள்ள புவியின் காலநிலை மற்றும் மாசுப்பிரச்சினைக்கு முக்கிய காரணம் சுவட்டு எரிபொருள் பாவனை என்றும் அதற்கு மாற்று வழி தெரிவு செய்யப்படின் காபனீரொட்சைட்டை வெளியிடுவது குறைந்து புவியின் மாசாக்க வீதம் குறைவதால் காலநிலைப்பிரச்சினை இல்லாமல் போய் விடும் இல்லை குறையும் என முன்னர் கூறி வந்த கருத்துக்கே விஞ்ஞானிகள் தற்போது மறு கருத்து வெளியிட்டு வருகின்றனர்.தற்போதைய நிலையில் இவ் உயிரி எரிபோருட்களே காபனீரொட்சைட் வெளியீட்டுக்கு காரணமாகிவிட்டது என்னும் திடுக்கிடும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதில் இருந்து அவதானமாக இருக்கும் படி கோரிக்கையும் விடுத்துள்ளனர்.பல விதாமன ஆராய்ச்சிகளை பல நாடுகளில் நடாத்தியதன் பின்னர் அதாவது இவ் உயிர் எரிபொருட் பாவனையால் காலநிலை சூழல் நிலம் நீர் விவசாயம் ஆகியவற்றில் ஏற்படும் தாக்கம் என்ன என்று ஆராயந்த விடத்தில் அது பயனுள்ளதாக இருந்தாலும் பெருமளவு காபனீரொட்சைட்டை வெளியிடுவதை தடுத்தாலும் வேறுபல பிரச்சினைக்கு காரணமாகி விடுகின்றது கண்டறியப்பட்ள்ளது.குறிப்பாக காடழித்து அந்த நிலத்தில் பயிர்களை வழர்த்து அதன் மூலம் பெறப்படும் உயிரி எரிபொருட்கள் பூமிக்கு தாக்கம் விழைவிக்கின்றதாக தெரிவிக்கின்றனர்.அதாவது பெருமளவு காட்டு பரப்புகள் அழிக்கப்படுவதால் நிலத்தில் இருந்தான காபன் சக்கரம் தடைப்டுவதுடன் காட்டு தாவரங்கள் அளவில் இவ் உயிரி எரிபொருளுக்கான தாவரங்கள் காபனீரொட்சைட்டை பதிக்காது போவதால் இது ஏற்படுகின்றது.தற்போதைய தரவுகளின்படி சுவட்டு எரிபொருள் பாவனையால் வெளிவிடப்படும் காபன் அளவை விட இவ் காடழித்தல் மூலம் தேங்கும் காபன் 2000 மடங்கால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதாவது உயிரி எரிபொருட்களை பாவிக்கும் போது அவை சாதாரண சுவட்டு எரிபொருட்களை விட 80 வீதத்தால் காபன் வெளியீட்டை குறைக்கின்றன ஆனால் அவை காடழித்து பயிர் செய்யப்பட்டு பெறப்பட்டால் காபன் வெளியீட்டை 800 வீதத்தால் கூட்டுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது மட்டுமல்லாமல் பூமியில் தற்போதைய போக்குவரத்து தேவையின் 10 வீதம் உயிரி எரிபொருளால் நிரப்ப பனய்தரு நிலத்தில் 41 சதவீதம் தேவைப்படுகின்றது இதனால் பெருமளவு விழை நிலங்கள் விழுங்கப்படலாம் என்பதும் பிறிதொரு கருத்துஎனவே பூமியைக் காக்க திட்டங்கள் வேறு வகையில் அமுல் படுத்தினாலும் அது பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக உள்ளது.ஆனால் இதற்கும் மாற்றுவழி தேடும் வல்லமை மரபணுப் பொறியலாளர்களின் கையில் உள்ளது. என்பது உண்மை.அதாவது பாழ்பட்டுப்போய் உள்ள நிலங்களில் விழையக்கூடிய பயிர்களை தேடி மரபணுப் பொறயியலில் உருவாக்கினால் எல்லாம் சரிவரும் பார்ப்போம் எத்தனையூ பண்ணி விட்டார்கள் இதையும் பண்ணுவார்கள் விஞ்ஞானிகள் என எதிர்பார்த்து

வியாழன், 15 அக்டோபர், 2009

10 வீத தாவரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்கா



கியூ தாவரவியல் பூங்கா

பிரித்தானியாவின் தாவரவியலாளாளர்களால் பிரித்தானியாவின் கியூ தாவரவியல் பூங்கா மூலம் புதிய சாதனை ஒன்று நிலைநாட்டப்பட்டுள்ளது. பூமியில் உள்ள தற்போது வாழ்ந்து வருகின்ற ஆபாயத்தில் உள்ள தாவரங்களில் விதைகள் சேகரிக்கப்பட்டு அவை அழிந்து விடாது பாதுகாக்கும் திட்டம் ஒன்றின் மூலம் 10 வீத புவி வாழ் தாவரங்கள் பாதுகாக்கப்பட்ள்ளது .54 நாடுகளில் இயங்கும்
பிரித்தானிய றோயல் தாவரவியல் பூங்காக்கள் என்னும் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் கிளைகள் மூலம் இதை செய்துள்ளனர் தாவரவியலாளர்கள்.

பாதுகாக்கப்படும் தாவரம் ஒன்று

முக்கியமாக அழிவின் அபாயத்தில் உள்ள தாவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளன இன்னும் சேகரிக்கப்பட்டுக் கொண்டுள்ளன.இத் திட்டம் மூலம் 2020 இவ் புவியில் வாழும் தாவர இனங்களில் 25 வீதமானவற்றை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் 60000 தொடக்கம் 100000 வரையான தாவரங்கள் அழிவின் அபாயத்தி்ல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது முக்கியமாக மனித செயற்பாடுகள் மூலம் இது நடந்தேறி வருகின்றது.கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 3.5 பில்லியன் விதைகள் செகரிக்கப்பட்டு அந்தந்த நாடுகளிலும் மற்றும் பிரித்தானியாவின் ஆடிங்லி என்னும் இடத்திலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நீங்களும் வேண்டுமானால் உங்கள் இடத்தில் உள்ள அருகி வரும் ஆபாயத்தில் உள்ள இனங்களை பாதுகாக்கும் பணியில் இணையாலாம்.
http://www.kew.org/

மிகக்குறைந்த விலையில்




Compaq? Hewlett-Packard acquired the venerable computer company way back in 2002, but it's kept the name alive as a secondary brand ever since, mainly relegating Compaq to overseas markets (Compaq is particularly popular in Asia) and as second-tier PCs sold on the cheap at warehouse-style stores.
But now HP is looking to breathe a little new life into the Compaq brand, positioning it not just as a label for extremely cheap computer equipment but also as one with mainstream appeal in the U.S.
Today the company is announcing the rollout of a line of ultra-inexpensive PCs, both laptops and desktops, with extreme budgets in mind.
Consider first the Compaq CQ61z (pictured), a 15.6-inch laptop with an AMD Sempron CPU, 2GB of RAM, DVD burner, 160GB hard drive, and discrete graphics. Running Windows 7 Home Premium, the machine costs a nearly unfathomable $399. That price point probably sounds familiar -- it's the usual cost for your average netbook, which in comparison offers a tiny screen, minimal hard drive, and an ultra-low-power Atom CPU.
With the $400 laptop's arrival, Compaq wants potential buyers to ask: Why not jump up to a much larger and more capable system for exactly the same price? I'm having a hard time seeing any reason not to. Seriously, it even has a numeric keypad.
Even better bargains abound for desktop shoppers. The attractive Compaq Presario 4010f has similar specs (with a 250GB hard drive) and starts at just $309 after a $100 rebate.
Both systems are available on Windows 7 launch day, October 22.
Compaq's aggressively inexpensive hardware -- particularly the $399 laptop -- could have massive ramifications for the computer market. Will netbooks finally feel the pinch that they've been giving to standard laptops for two years now? And what kind of pressure will machines like this bring to bear on more expensive notebook PCs? Price war in 3... 2... 1...

புதன், 14 அக்டோபர், 2009

அழிவின் விளிம்பில் அபூர்வமான இந்தியத் தாமரை


Wikinews தளத்திலிருந்து



உலகெங்கும் இல்லாத வகையில், இந்தியாவில் மட்டுமே இருக்கும் ஒரு வகை அபூர்வமான தாமரை மலர்ச் செடி அழிவை நோக்கிச் செல்கிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்குக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்மிட் எனும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஒரு குட்டையிலேயே இந்த அரிய வகை தாமரை மலர்ச் செடிகள் உள்ளன. அதுவும் தற்போது 15-20 செடிகளே உள்ளன.

இவற்றைப் பெருக்குவதிலும் பார்க்கப் பாதுகாப்பது இப்போது மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது.

பேராசிரியர் பிரமோத் டாண்டன்
பொதுவாக லில்லி செடியை ஒத்த இந்த வகை தாமரை மலரின் செடியை பாதுகாத்து அதைப் பெருக்கும் நடவடிக்கைகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று பிரபல தாவரவியல் வல்லுநரும், ஷில்லாங்கில் இருக்கும் வடகிழக்கு மலைப்பகுதி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான பேராசிரியர் பிரமோத் டாண்டன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அரிய தாவரங்கள் மற்றும் மலர்ச் செடிகள் அழிந்து வருவது உலகளாவிய ஒரு பிரச்சினை என்றும், அதை எதிர்கொள்ள உலகளவில் ஒரு செயற்திட்டம் தேவை என்றும் பேராசிரியர் டாண்டன் கூறுகிறார். உலகளவில் தகுதியும் திறமை வாய்ந்தவர்களும் ஒருங்கினைந்து செயற்படவேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
"நிம்ஃபியா டெட்ரோகொனா" (Nymphaea tetragona) எனும் அந்த அரிய வகை தாமரைச் செடியை பாதுகாக்க இந்திய அரசு ஓரளவு நிதி ஒதுக்கீட்டை செய்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
மூலம் Wiki News

செவ்வாய், 13 அக்டோபர், 2009

மீண்டும் பறக்கும் தட்டா மொஸ்கோவில் அதிசயம்.


மொஸ்கோவின் வான் பரப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காண அரிய காட்சி ஒன்று தென்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அதன் இரகசியம் புலப்பட்டதாக தெரியவில்லை.மேல் உள்ள புகைப்படத்தை பார்த்தால் அது என்னவென்று ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம்.இது முகிலா இல்லை வேறு பொருளா என்பதில் இன்றும் மர்மம் நீடிக்கின்றது.முதலில் இரு கணிணி வடிவமைப்பு என்று நம்பிய ரஷ்ய வாநிலை நிலையம் தற்போது இல்லை இது அவ்வாறான கணினி கிராப்பிக்சால் உருவாக்கப்படவில்லை என ஏற்றுக் கொண்டுள்ளது.ஆனால் அது என்ன என்பது இன்னும் பலப்படவில்லை என்றே தெரிவித்து வருகின்றது. வானத்தில் அவ்வாறு வளையமாக தோன்றியது அடையாளப்படுத்தப்படாத வெளியுலக பொருளா அல்லது முகிலா என்னும் சந்தேகங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.உலகின் மர்மங்கள் பல இன்னும் புலப்படாமல் உள்ள நிலையில் குறிப்பாக சோவியத் ரஷ்யாவின் மர்மங்கள் இன்னும் பலப்படாமல் உள்ள நிலையில் இன்னும் ஒரு மர்மம். ஏதொ வெளியுலகப் பொருள் எனில் இன்னும் புதினங்கள் வரும் வரும் போது தரக் காத்திருக்கின்றேன்.

சலனப் படத்தை பார்க்க சொடுகவும்.