திங்கள், 31 ஆகஸ்ட், 2009

மீண்டும் எழும் அமெரிக்கா?






செப்ரெம்பர் 11 என்றால் 2001 இன் பின்னர் அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல உலகிற்கும் ஒவ்வோர் பிரஜைக்கும் ஏக்கம் கலந்த நாளாக மாறியுள்ளது மாற்றப்பட்டுள்ளது. இதை பலர் உணர்ந்துள்ளார்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டும் உள்ளார்கள்.



அமெரிக்காவை பல வழிகளிலும் தலைநிமிர்த்தி வைத்திருந்த பலவற்றில் அவர்களின் பொருளாதாரத்தினை பலகாலமாக தாங்கி வைத்திருந்த தூணாக காணப்பட்டுள்ளது உலகம் மறக்க முடியாத உலக வர்த்தக மைய கட்டம்.அதை தற்போது அமெரிக்கா மற்றும் பல நாடுகள் உணர்ந்துள்ளன.



அந்த வகையில் 2001 செப்ரெம்பர் 11 தூசு படலமாக மாறிய உலக வர்த்தக மையம் தற்போது மீண்டும் நிமிர ஆரம்பித்துள்ளது.



அதன் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்ற.



தற்போது அடித் தளத்தின் வேலைகள் பூர்த்தியாகி மாடிக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



அமெரிக்கர்கள் சரிவில் நிற்கும் தனது பொருளாதாரத்தை மீட்க பல வழிகளிலும் போராடிவரும் வேளையில் இதையும் ஒரு கருவியாக பாவிக்க தலைப்பட்டுள்ளார்களோ?






கரப்பான் உலகசாதனையில்



உலக சாதனை பூச்சி


அவுஸ்ரேலியாவில் கண்டறியப்பட்டுள்ள கரப்பான் பூச்சி ஒன்று உலக சாதனைக்காக பிரேரிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட கரப்பான்களை விட பெரிதாக உருவம் கொண்டுள்ள இவ் கரப்பானை உலகின் மிகப் பெரிய பூச்சி ஆக்கிவிட முனைகின்றனர் அவுஸ்ரேலிய ஆராய்சியாளர்கள்.


30 தொடக்கம் 35 கிராம் நிறைகொண்டுள்ள இது 85 மில்லி மீற்றர் வரை நீளம் கொண்டுள்ளது.


இதன் அடிப்படையில் இவ் கரப்பான் உலகின் பெரிய கரப்பான் மற்றும் உலகின் பெரிய பூச்சி ஆகிய சாதனைக்காக தற்போது போட்டி போட்டுக் கொண்டுள்ளதுடன் அதிகாரிகளின் முடிவுக்காகவும் காத்துக் கொண்டுள்ளது.அவுஸ்ரேலியாவை பொறுத்த வரையில் உலகின் ஏனைய இடங்களை விட அங்கு உயிர் பல்வகைமை அதிகமாக உள்ளதுடன் அவற்றின் உருவவியல் மற்றும் உயிரியலின் பகுதிகளில் பல வேறுபாடுகளை காணப்படுகின்றன.


இதன் அடிப்படையில் அண்மையில் கண்டறியப்பட்டுள்ள இவ் கரப்பானும் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்ததாக உள்ளமை குறிப்படத்தக்கது




செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

சூரிய வெளிச்சம் உடல் பருமனைக்குறைக்க உதவும் ஆராய்சி முடிவுகள்.



சூரிய வெளிச்சம் உடல் பருமனைக்குறைக்க உதவும் ஆராய்சி முடிவுகள்.


சூரிய வெளிச்சம் மனித உடலில் பருமனைக்கட்டுப்படுத்த உதவும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. நீள் துயில் கொள்ளும் (கும்பகர்ணன் போன்று பல மாதங்களை துயிலில் கொள்ளும் )விலங்குகள் மற்றும் பிறந்த சில நாட்களான குழந்தைகளில் அதிகம் காணப்படும் பிறவுண் அடிப்போஸ் கலங்கள் எனப்படும் ஒருவகை கொழுப்பு கலங்களினை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதில் இவ் வியத்தகு கண்டு பிடிப்பு நடைபெற்றுள்ளது.இவ் கொழுப்பு கலங்களே எமது உடலின் வெப்ப பிறப்பாக்கத்தில் அதிக செல்வாக்கு செலுத்துவன.முன்னர் நடைபெற்ற ஆய்வுகளனின் படி இவ் கொழுப்பு கலம் மனித உடல் பருமனைக்கட்டுப்படுத்துவதில் தொடர்பு பட்டது என்றும் இதன் அளவை கட்டுப்படுத்தும் போது உடல் பருமன் கட்டுப்படுத்த பட்டதாகவும் இன்னும் சிலரில் குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


5 காலநிலை பருவங்களை தேடும் அவுஸ்ரேலியா.








5 காலநிலை பருவங்களை தேடும் அவுஸ்ரேலியா.



அவுஸ்ரேலியா வேறுபட்டுவரும் சூழல் நிபந்தனைக்கு ஏற்ப தனது நாட்டு அன்றாட நடவடிக்கைக்கான கட்டமைப்பை இலகு படுத்த 5 காலநிலைப்பருவங்களை அமைக்க வேண்டிய நிலைக்கு சென்றுள்ளதுடன் அதற்கான காலநிலைப்பருவங்களை வரையறுக்கும் வேலையிலும் இறங்கியுள்ளது.தற்போது உள்ள பிரித்தானியாவினை பின்பற்றி கொண்டுள்ள 4 காலநிலைப்பருங்வங்களில் இருந்து விடுபட்டு 5 காலநிலைப்பருவங்கள் என்னும் நிலைக்குள் வெகுவிரைவில் பிரவேசிக்கவுள்ளது.சிட்னியில் உள்ள றோயல் தாவரவியல் பூங்காவின் தலைவர் தற்போது அவுஸ்ரேலியா தேடிவரும் காலநிலைப்பருவங்களுக்கு “SPRUMMER” எனப்படும் இலை உதிர் மற்றும் கோடைகாலத்துக்கு இடைப்பட்ட காலநிலைப்பருவத்தையும்.“SPRINTER” ஸ்பிறின்ரர் எனப்படும் முன் இலையுதிர் காலநிலைப்பருவத்தினையும் முன் மொழிந்துள்ளார்.இவ் புதிய காலநிலைப்பருவங்கள் மக்கள் தமது சூழலைப்புரிந்து காலநிலையில் மாற்றங்களை உணர்ந்து தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இதுவரை இருந்து வந்த ஐரேப்பா மாதிரியான மூன்று மாதங்கள் கொண்ட நான்கு காலநிலை பருவங்கள் எமது வாழ்வியலின் சிறப்பு உணர்திறன் ஒன்றையும் ஏற்படுத்துவதில்லை எனத் தொவித்துள்ள சிட்னி தாவரவியல் பூங்கா தலைவர் அவுஸ்ரேலியாவின் சில பாகங்களில் உள்ள பழங்குடியினர் 8 காலநிலைப்பருவங்களை வருடத்துக்கு அறிவித்து நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.இது சம்பந்தமாக பொதுமக்கள் கருத்து கேட்கப்படவுள்ளதுடன் சூட்டப்பட்டுள்ள பெயர்ககும் பொதுமக்கள் கருத்துக்கு விடப்படவுள்ளன.மத்திய கோட்டை அண்மித்துள்ள நாடுகள் பல இன்னனும் கோடை மற்றும் மாரி என்னும் காலநிலைப்பருவங்கிளில் தங்கியுள்ள நிலையில் பூமியில் வேகமாக மாறிவரும் காலநிலை பிற சில பகுதிகளை எந்த அளவில் அன்னறாடம் பாதிக்கின்றது என்பதற்கு இது நல்ல சான்றாகும்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

முகிலில் இருந்து வான் நோக்கிய மின்னல் அதிர்ச்சியில் விஞ்ஞான உலகம்.










முகிலில் இருந்து வான் நோக்கிய மின்னல் அதிர்ச்சியில் விஞ்ஞான உலகம்.




இதுவரை முகிலில் இருந்து பூமிநோக்கி பாயும் ஒளிக் கீற்றாக மின்னலை அவதானித்து அறிந்து வைத்திருந்த அனைவருக்கும் அண்மையில் கிடைத்துள்ள விஞ்ஞான பூர்வமான ஆதார பூர்வமான தகவல் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது மின்னல் எப்போதும் முகிலில் இருந்து தரை நோக்கி பாய்வதில்லை மாறாக வான் நோக்கியும் பாயும் என்பதை புகைப்பட ஆதாரமாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு இவ்வாறு ஒரு மின்னல் அவதானிக்கப்பட்ட போது அது பிரமை என் எண்ணிய பலர் தற்போது அது புகைப்பட ஆதாரமாகியதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்."ஜிகான்ரிக் ஜெட் "எனச் பெயர் சூட்டப்பட்ட இவ் வான் நோக்கிய மின்னல் சாதார மி;னனல் போன்ற குணாம்சங்களை கொண்டுள்ளது.முகிலில் இருந்து புறப்படும் இவ் வான் நொக்கிய மின்னல் அது மின் வலுவை இழக்கும் வரை வானில் நீழ்வதாகவும் அதாவது வானின் வாயுமண்டல எல்லையில் காணப்படுகின்ற அயன்கோளம் வரை நீழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.அதாவது மின் ஏற்றங்கள் கொண்ட இவ் அயன் மண்டல பகுதியில் இவ் மின்னல் மின்னிறக்கம் அடையும் வரை இது வானில் நீழ்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த 2001 இல் இருந்து 11 இவ்வாறான மின்னல்கள் அவதானிக்கப்பட்டுள்ள போதும் இது புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் தடைவை.

சனி, 22 ஆகஸ்ட், 2009

புறக்கும் தட்டுகள் பற்றிய புதிய தகவல்கள்.




புறக்கும் தட்டுகள் பற்றிய புதிய தகவல்கள்.




புறக்கும் தட்டுக்கள் என்னும் பிறகோள் வாகனங்கள் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் இறுதியாக பறக்கும் தட்டுக்களின் பகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பொருட்களை தாம் கண்டுள்ளதாக கசகஸ்தான் வாசிகள் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளனர்.இது பற்றி அவர்கள்; தெரிவிக்கையில் அதிகாலை மூன்று மணியளவில் தாம் தமது விவசாய நிலங்களுக்கு அருகாமையில் இருக்கையில் வானத்தில் மஞ்சள் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களிலான ஒளிர்வை வெளியிட்டவாறு பொருள் ஒன்று பூமியை வந்தடைவதை கண்டதாக கூறியுள்ளனர்.அவ் பொருள் 60 சென்ரிமீற்றர் வரையான விட்டம் கொண்ட கோள உருவாக காட்சி தந்ததாகவும் பளபளப்பாக இருந்த அப் பொருளில் ஒரு சிறிய துவாரம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.உள்ளுர் வாசிகள் சிலர் அப் பொருளை உடைத்து பார்க்க முற்பட்ட பொது அது வளையவே அல்லது உடையவே இல்லை எனவும் நெருப்பு பொறிகள் அதில் இருந்து கிளம்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ் பொருள் எங்கிருந்த வந்தது இவ் பொருளால் மனித உடல் நடலத்துக்கு ஏதாவது கேடா என்றும் ஆயு;வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள ர~;யாவின் விண் ஆய்வு மையம் இவ்வாறான பொருள் ஒன்று பூமியை அடைந்துள்ளது இதுவே முதல் தடைவை என்றும் இது மனிதனால் உருவாக்கப்பட்ட வான் கலம் ஒன்றின் குணாம்சங்களை கொண்டுள்ளதாகவும்


வியாழன், 20 ஆகஸ்ட், 2009

உச்சத்தினை தொட்டு நிற்கும் சமுத்திர நீர் வெப்பநிலை.




உச்சத்தினை தொட்டு நிற்கும் சமுத்திர நீர் வெப்பநிலை.




கடந்த மாத சமுத்திர நீர் வெப்பநிலை ஏறத்தாள 130 வருடங்களின் பின்னர் உச்சத்தினை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்க தேசிய காலநிலை தகவல் மையத்தின் கருத்து படி கடந்த மாதம் சமுத்திர நீர் வெப்பநிலை 62.6 பரனைற் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அவ் நிறுவனத்தின் கருத்துப்படி இம் மாதம் இன்னும் வெப்பநிலை அதிகரித்து தொடர்ந்தும் அதிகரித்து செல்லலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.முன்னதாக பசுபிக் சமுத்திரத்தில் பலமான எல்-நினோ காலநிலை நிலவியபோது 1998 ஆம் ஆண்டு; உயர் சமுத்திர வெப்பநிலை கடந்த நூற்றாண்டில் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவ் மையம் ஆகக் குறை வெப்பநிலையாக 59.3 பரனைற் 1909 ஆம் ஆண்டு அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.தற்போதைய இவ் நிலை ஒரு பாரிய எல்- நினோ பூமியின் மனித வாழ் சூழலை கடுமையா பாதிக்கவும் பூமியை பரந்த அளவில் வெப்பப் படுத்தவும் தயாராவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளதுடன் முருகைக் கற்பாறைகள் மற்றும் சமுத்திர உயிரிகள் என்பனவற்றை பாதிக்கவும் பாரிய சுழல் மற்றும் துருவப் பனி உருகலுக்கும் வழி சமைக்கும் நிலையை ஏற்படுத்தும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.மேக்சிக்கோ வளை குடாவில் ஆவியாகும் நீர் பெரும் சூறாவளிகளை உருவாக்கலாம் என்றும் அங்கு வெப்பநிலை நிலை 90 பாகை அளவில் காணப்படலாம் என்றும் எச்சரிக்கை வெளிளியிடப்பட்டுள்ளது.இவ் உணர் வெப்பநிலை பசுபிக் மற்றும் இந்து சமுத்திரத்தில் தனது ஆட்சியை செலுத்தும் என்றும் மத்திய கோடு 3 பாகையால் வெப்ப நிலை அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவித்துள்ள ஆராய்சியாளர்கள் வட அரைக் கோளத்தின் நீர் பரப்புகளின் நீர் வரும் காலத்தில் முன்னரை விட அதிகரித்த வேகத்தில் ஆவியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.இதே வேளை இவ் வெப்ப அதிகரிப்பு சில இடங்களில் 10 பாகை வரைக்கும் வெப்ப நிலையை அதிகரிக்கும் எனவும் ஆழமான துருவப் பனிப்பாறைகளை உருக்கும் எனவும்; காலநிலை சம்பந்தப்பட்ட ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

ஆனால் நீரின் தன் வெப்ப கொள்ளளவு அதிகம் என்பதால் சடுதியாக மாற்றம் உடனடியாக அவதானிக்கப்பட மாட்டாது என்றும் ஆனால் மெதுவாக வெப்பமான நீர் பின்னர் குளிரவும் காலம் எடுக்கும் என்பதால் இவ் விடயத்தினை அதிக அவதானத்துடன் அணுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர் காலநிலை பௌதீகவியலாளர்கள்.மனித செயற்பாட்டால் பூமி அழிவுப் பாதையில் செல்கின்றது என்பதற்கு பல சான்றுகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் இவ் அறிவிப்பு பூமியின் நிலைத்திருக்கும் கால எல்லை பற்றிய கேள்விகளை அதிகரித்துள்ளதுடன் நாம் நமது வாழ் நாள் முடிய முன்னர் பூமியின் பெரும்பகுதியை இயற்கைக்கு கொடுத்து விடுவோமா என்னும் அச்சமும் தோன்ற ஆரம்பித்துள்ளது

இரண்டாயிரம் லட்சம் கோடி டொலர்கள் அறவிடப்பட்ட சிகரட் கொள்வனவு.


இரண்டாயிரம் லட்சம் கோடி டொலர்கள் அறவிடப்பட்ட சிகரட் கொள்வனவு.
கடன் அடடை மூலம் சிகரட் பெட்டி ஒன்றை கொள்முதல் செய்த பிரித்தானிய வாசி ஒருவர் அதற்காக அறவிடப்பட்டிருந்த பணத் தொகையை கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.வீதியோர நடமாடும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஒரு பெட்டி சிகரெட்டை வாங்கி அதற்கு கடன் அட்டை மூலம் பணம் செலுத்திய பின்னர் அருகில் உள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் ஒன்றின் மூலம் தனது கணக்கை சரிபார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.அவர் கௌ;வனவு செய்த அவ் வெண்சுருட்டுக்கு அறவிடப்பட்டிருந்த பணம் இரண்ண்டாயிரத்து முன்நூற்றி பதின்நான்கு லட்சம் கோடி டொலர்கள்.(23,148,855,308,184,500 )இதை குவட்ரில்லிஜன் என்பர் .மன்சஸ்ரர் என்னும பகுதியைச் சேர்ந்த அவர் இவ் சம்பவம் பற்றி கருத்து வெளியிடுகையில் தான் இவ் பற்றுச் சீட்டை பார்த்து அதிர்ந்து போனதாகவும் தனது கடன் அட்டையை கொண்டு யாரோ ஐரோப்பாவை விலைக்கு வாங்கியதாக தான் கருத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து தான் உடனடியாக குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் சென்று விழக்கியபோது அவர்கள் உதவ முடியாத நிலையில் இருந்ததாகவும்; தெரிவித்துள்ள அவர் தனக்கு கடன் அட்டை தந்த அமெரிக்க வங்கியுடன் தொடர்பு கொண்டு இரண்டு மணிநேரம் உரையாடிய பின்னர் தான் தனது பிரச்சினைக்கு முடிவு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.இது பற்றி தெரிவித்துள்ள அவ் கடன் அட்டை நிறுவனம் அன்றைய தினம் தமது கணிணி வலையமைப்பில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இவ் தவறான பதிவுகள் இடம் பெற்றதாகவும் மாறாக தமது நிறுவனத்துக்கு பணப்பற்றாக்குறை எதுவும் இல்லை எனத் கூறியுள்ளதுபுல நாடகளின் பாதீடுகள் ( பட்ஜெட்டுகள்) கூட இவ் தொகையை கண்டிருக்காது.கவனம் கடன் அட்டை பாவனையாளர்கள். பாவிப்பது இலகு பின்னர் மாத இறுதியில் சிட்டை வரும் போது தலையை பிய்க்;காது கவனமாய் இருங்கள்.

முக உணர்வு வெளிப்பாடுகள் உலகில் அனைவருக்கும் பொதுவானது அல்ல.


முக உணர்வு வெளிப்பாடுகள் உலகில் அனைவருக்கும் பொதுவானது அல்ல.
முக உணர்வு வெளிப்பாடுகள் உலகில் அனைத்து பகுதிகளுக்கும் மக்களுக்கும் பொதுவானது அல்ல.முகத்தின் உணர்ச்சி மற்றும் தோற்ற வெளிப்பாட்டை வேறு வேறாக உலகத்தின் வேறு வேறு பகுதியைச் சார்ந்த மக்கள் புரிந்து கொள்ளவதாகவும் இதுவரை நிலவி முக உணர்வு வெளிப்பாடுகள் பற்றிய கருத்துக்கள் தவறு என்றும் சில ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.கிழக்காசிய மற்றும் மேற்கு நாடுகளின் மக்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் இவ் முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..ஐக்கியராச்சியத்தின் கிளஸ்கோ பல்கலைக்கழகம் நடாத்திய ஆராய்ச்சியில் கிழக்காசிய மக்கள் முக வெளிப்பாடுகளை உணர்வதில் கடும் பிரச்சினைகளை அனுபவித்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பெரும்பாலும் கண்ணினால் காட்டப்படும் சைகை மாற்றங்கள் மற்றும் பார்வை வேறுபாடுகளை வைத்தே முக உணர்வுகள் வெளிப்பாடுகளை உணர்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மேற்கத்தேய மக்கள் முழு முகத்தின் தோற்றத்தினை கொண்டு அதாவது கண் உட்பட முகத்தின் அத்தனை பகுதிகளின் தேர்றங்களை அவதானித்து உணர்வு வெளிப்பாடுகளை கண்டறிவதாகவும் அவ் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.இக்; கண்டறிவானது இதுவரை இருந்து வந்த முகத்தோற்ற வெளிப்பாடுகள் உணர்ச்சி வெளிப்பாடுகள் பற்றிய சர்வதேச பொதுக்கொள்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.கிழக்காசிய மக்கள் கோபம் ஆச்சரியம் பயம் நோய் போன்ற முக தோற்ற வெளிப்பாடுகளை சரியாக உணர்ந்து கொள்ள தவறியதாகவும் இவற்றை உணர்ந்து கொள்வதில் அவர்கள் குழப்ப நிலையை காண்பித்த தாகவும் தெரிவித்துள்ள ஆராய்ச்சி முடிவுகள் இது அவர்களின் வேறுபட்ட கலாச்சார பண்பாட்டு வேறுபாடுகiளால் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.அவர்களின் கலாச்சார குழுமங்களின் பழக்கங்களுக்கு ஏற்ப உடலின் வேறு பட்ட பாகங்களின் தோற்ற வெளிப்பாடுகளை உணர்ந்து கொள்வதற்கு அவர்கள் கற்று இருப்பதால் முகத் தோற்றப்படுகளை கண்டறிவதில் குழப்;பங்களை ஆனுபவிப்பதாக தெரிவித்துள்ளனனர்.வேளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் மொழி தெரியாத நம்மவர்கள் இதை நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும் மாறாக அவர்கள் தவறாக புரிந்து கொள்ளும் முக சைகைகளை காண்பித்து வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அவர்களின் முக தோற்ற வெளிப்பாடுகளை அறித்து கொள்ளல் நன்று.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

பூமியில் முதல் உயிர் அங்கி தோன்றியதற்கான மூலப்பொருள் வால் நட்சத்திரத்தில்.

பூமியில் முதல் உயிர் அங்கி தோன்றியதற்கான முலப் பொருள் வால் நட்சத்திரத்தில்.
பூமியில் முதல் உயிர் தோன்றியதற்கு காரணம் என்ன என்னும் விவாதம் விஞ்ஞான மற்றும் ஆன்மீக ரீதியில் முட்டி மோதி வரும் நிலையில் வால் நட்சத்திரம் ஒன்றில் இருந்து பூமியில் முதல் உயிரி தோன்றக்காரணமானதாக கருதப்படும் அமினோ அமிலம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
கிளைசீன் எனப்படும் அமினோ அமிலம் ஒன்றே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஒரு வால் நட்சத்திரத்தில் இவ்வாறு ஒர் அமினோ அமிலம் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் தடைவை எனவும் இவ் ஆராய்;ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இக் கண்டறிவானது இதுவரை கருத்தளவில் இருந்து வந்த உயிர் முலப் பொருட்கள் முதலில் அண்டத்தில் தோன்றி பின்னர் அண்ட பொருட்களான வால் நட்சத்திரங்கள் மற்றும் விண் கற்கள் மூலம் பூமியை அடைந்துள்ளன என்றும் கூற்றை பலப்படுத்தியுள்ளது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
“வைல்ட்-2” என்னும் வால் நட்சத்திரத்தில் இருந்து கடந்த 2004 இல் சேகரிக்கப்பட்ட சில மாதிரிகள் வாயுக்களை ஆராய்ந்ததில் இவ் உயிர் அங்கிகள் உருவாக காரணமான அடிப்படை பதார்த்தமான கிளைசீன் கண்டறியப்பட்டுள்ளமை விஞ்ஞான உலகில் ப+மியின் முதல் உயிரி எவ்வாறு தோன்றியது அதன் பின்னான கூர்ப்புகள் மூலம் இன்றைய பல்வகைமை எவ்வாறு பெருகியது என்னும்; பலவேறு பட்ட சர்ச்சைகளுக்கும் வினாக்களுக்கு விடை கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
இதுவரை கடலடி எரிமலைகள் மூலமாகவும் மின்னல் தாக்கங்கள் மூலமாகவும் உருவாகிய சேதனங்கள் ஒன்றாகி கடலில் முதல் உயிர் மூலக்கூறு உருவானதாக விஞ்ஞான உலகம் கூறிவருகையில் ஆன்மீக உலகு கடவுளால் உயிர் அங்கிகள் சிருஸ்டிக்கப்பட்டு பூமியில் உலாவ விடப்பட்டுள்ளன எனக்கூறிவருகின்றது இவை அனைத்துக்கும் தீர்க்கமான முடிவு வரும் காலங்களில் பாடப்புத்தகங்களில் ஒர் ஆங்கவரலாம்.