திங்கள், 2 நவம்பர், 2009

புதிய சமுத்திரத்தை உருவாக்கவுள்ள எதியோப்பியாவின் பிளவு.




பூமியில் தற்போது உள்ள சமுத்திரங்களின் எண்ணிக்கை இன்னும் சில காலத்தில் மேலும் ஒன்றால் அதிகரிக்கும் சாத்தியங்கள் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

20 அடி அகலமான இவ் பிளவு 2005 இல் உருவானது தற்போது இவ் பிளவு புதிய சமுத்திரம் ஒன்று உருவாக வழி ஏற்படு்த்தலாம் என்னும் கருத்து பரவலாக எழுந்துள்ளது.
ஆனாலும் இது இன்றுவரை முரண்பாடான கருத்துக்களையும் ஏற்படுத்தி வருகின்றது என்பதுடன் இது வரை இவ் பிளவு பற்றிய சரியான தகவல்கள் தரவுகள் முழுமையாக திரட்டப்படவில்லை என்பது முக்கியமான விடையம் என் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.
இதே போல் பிறிதொரு பிளவு செங்கடலையும் இரு கூறுகளாக பிரிக்கும் செயற்பாட்டை மிக மெதுவாக செய்து வருவதாகவும் பிறிதொரு ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

அதே நேரம் எதியோப்பியாவில் உருவாகியுள்ள இப் பிளவு அதன் மொத்த நீளமான 35 மைலுக்கும் ஒரே நாளில் நகர்ந்துள்ளதுடன் இதன் வடமுனையில் உள்ள "டபுகு" எரிமலை வெடித்து அதன் குளம்பு பிளவின் ஊடாக பாய்ந்து பிளவு மீண்டும் ஒட்டிக் கொள்வதை தடத்துள்ளதையும் தற்போது அவதானித்துள்ளதாக விஞ்ஞானிகள் குழு அறிக்கை இட்டுள்ளது.இதன்அடிப்படையில் அவர்கள் முன்மொழிந்துள்ள கருத்தே புதிய சமுத்திர உருவாக்கத்தை தெரிவித்துள்ளது.

அதாவது கடல் நீரோட்டங்களை பூமியில் நிலப்பரப்பிள் புகுந்து விடாமல் தடுத்து வைத்துள்ள பாறை வரம்புகள் இவ்வாறான பிளவுகளுக்குள் எரிமலைக் குழம்புகள் செல்லும் போது உருவாகி நீரோட்டஙக்ள தடுத்து பெரும் அளவு நீரை தேக்கி சமுத்திர உருவாக்கத்துக்கு காரணியாகி விடும் என்பது அவர்கள் கருத்து.
அதே போல் சமுத்திர தட்டுகள் கண்டத் தட்டுகளின் எல்லைகளில் அமைந்துள்ள தொழிற்படு நிலையில் உள்ள எரிமலைகள் வெடித்து புவித் தட்டுகள் பிரதான தட்டில் இருந்து சிறிது சிறிதாக பிரிந்து செல்லும் வாய்புகள் பற்றியும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவகள் பிளவுகள் ஏற்படும் பகுதியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மிகவும் ஆழமான நிலப்ப்ரப்பில் நடைபெற்றுள்ள மாற்றங்கள் என்ன என்பது பற்றி ஆராய்வதை நோக்காக கொண்டு விஞ்ஞானிகள் எதியோப்பியாவில் முகாமிடத் தொடங்கியுள்ளார்கள்.
ஆபிரிக்க அரேபிய கணடத்தட்டு எதியோப்பியாவில் உள்ள ஆபார் பாலை வனத்தில் சந்திக்கும் இவை இரண்டும் ஒன்றில் இருந்து ஒன்று கடந்த 30 மில்லியன் வருடங்களாக ஆண்டுக்கு 1 அங்குலம் என்னும் வேகத்தில் பிளவு பட்டு வந்துள்ளன.
இவ் தரவுகள் மற்றும் நில அதிர்வுகள் அடிப்படையிலான தருவுகள் கணிப்புகள் கொண்டு கருத்து வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் அரேபியன் கடலில் தற்போது 186 மைல் நீளமான தாழ்வு ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக தெரிசித்துள்ள விஞ்ஞானிகள் செங்கடல் இன்னும் மில்லியன் ஆண்டுகளினுள் புதிய ஒரு கடலிற்குள் நகரும் என்னும் கருத்தை முன்வைத்துள்ளனர். இத்துடன் செங்கடல் ஏடன் விரி குடாவையும் இணைக்கும் புதிய சமுத்திரமாகவும் அரேபியன் கடலின் தொடுவாயாகவும் அரேபியன் குடாநாட்டில் யேமனுக்கு இடையிலும் சோமாலியாவுக்கு கிழக்கிலும் உருவாகலாம் என்னும் முன்மொழிவை வெளியிட்டுள்ளனர்.தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக