ஒவ்வொரு மனிதனும் தனது பிறப்புரிமை தொடரை தானே அறிந்து கொள்ள அதை சேமித்து வைக்க அதன் பால் உள்ள தகவல்களை அறிந்து கொள்ளும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது வளர்க்கப்பட்டுள்ளது என செய்து காட்டியுள்ளது கலிபோர்நியாவை மையமதாக கொண்டு இயங்கும் உயிர்
நுட்பவியல் நிறுவனம் ஒன்று.
1700 அமெரிக்க டொலர் கட்டணத்தில் இந்த சேவையை செய்ய தயாராகிவிட்டது அந்த நிறுவனம்.அதாவது மனித பிறப்புரிமை தொடரை வரை படமாக்கி அதில் உள்ள தகவலிகளின் ஒப்பீட்டு தரவுகளை பெற்றுக் கொள்ளும் வகையான சேவை ஒன்றை அது செய்ய முன்வந்துள்ளது.
இதுவரை இவ்வாறான இரண்டு பிறப்புரிமை தொடர் வரை படங்கள் அந் நிறுவனத்தால் செய்து முடிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் ஒரு வரை படத்துக்கான கட்டளையை தாம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த திட்டம் International HapMap project என்னும் பெயரால் அழைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது அந் நிறுவனம் இணைய வழியிலான பதிவுகளை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அதில் இவர்கள் பிறப்புரிமை பொருள் மாதிரி ஒன்றையும் சிறிது பணத்தையும் அனுப்பி வைக்கும் படிகோரியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
2000 ஆம் ஆண்டு ஒரு மனித பிறப்புரிமை தொடரை அறிய வரைபடமாக்க செலவான தொகையான 100 மில்லியன் டொலருடன் ஒப்பிடும் பொது தற்போது இச் சேவை மிகவும் கைக்கு எட்டிய பெறுமதியில் கிடைக்கும் பாக்கிம் பெற்றுள்ளதால் வரும் காலங்களில் பல தீராத பிறப்புரிமை பிறள்வுகளால் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகளும் குணமாக்கும் வழிகளும் கண்டறியப்படவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மருந்துவ உலகு மகிழ்ச்சியில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக