வியாழன், 20 ஆகஸ்ட், 2009

உச்சத்தினை தொட்டு நிற்கும் சமுத்திர நீர் வெப்பநிலை.




உச்சத்தினை தொட்டு நிற்கும் சமுத்திர நீர் வெப்பநிலை.




கடந்த மாத சமுத்திர நீர் வெப்பநிலை ஏறத்தாள 130 வருடங்களின் பின்னர் உச்சத்தினை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்க தேசிய காலநிலை தகவல் மையத்தின் கருத்து படி கடந்த மாதம் சமுத்திர நீர் வெப்பநிலை 62.6 பரனைற் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அவ் நிறுவனத்தின் கருத்துப்படி இம் மாதம் இன்னும் வெப்பநிலை அதிகரித்து தொடர்ந்தும் அதிகரித்து செல்லலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.முன்னதாக பசுபிக் சமுத்திரத்தில் பலமான எல்-நினோ காலநிலை நிலவியபோது 1998 ஆம் ஆண்டு; உயர் சமுத்திர வெப்பநிலை கடந்த நூற்றாண்டில் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவ் மையம் ஆகக் குறை வெப்பநிலையாக 59.3 பரனைற் 1909 ஆம் ஆண்டு அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.தற்போதைய இவ் நிலை ஒரு பாரிய எல்- நினோ பூமியின் மனித வாழ் சூழலை கடுமையா பாதிக்கவும் பூமியை பரந்த அளவில் வெப்பப் படுத்தவும் தயாராவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளதுடன் முருகைக் கற்பாறைகள் மற்றும் சமுத்திர உயிரிகள் என்பனவற்றை பாதிக்கவும் பாரிய சுழல் மற்றும் துருவப் பனி உருகலுக்கும் வழி சமைக்கும் நிலையை ஏற்படுத்தும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.மேக்சிக்கோ வளை குடாவில் ஆவியாகும் நீர் பெரும் சூறாவளிகளை உருவாக்கலாம் என்றும் அங்கு வெப்பநிலை நிலை 90 பாகை அளவில் காணப்படலாம் என்றும் எச்சரிக்கை வெளிளியிடப்பட்டுள்ளது.இவ் உணர் வெப்பநிலை பசுபிக் மற்றும் இந்து சமுத்திரத்தில் தனது ஆட்சியை செலுத்தும் என்றும் மத்திய கோடு 3 பாகையால் வெப்ப நிலை அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவித்துள்ள ஆராய்சியாளர்கள் வட அரைக் கோளத்தின் நீர் பரப்புகளின் நீர் வரும் காலத்தில் முன்னரை விட அதிகரித்த வேகத்தில் ஆவியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.இதே வேளை இவ் வெப்ப அதிகரிப்பு சில இடங்களில் 10 பாகை வரைக்கும் வெப்ப நிலையை அதிகரிக்கும் எனவும் ஆழமான துருவப் பனிப்பாறைகளை உருக்கும் எனவும்; காலநிலை சம்பந்தப்பட்ட ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

ஆனால் நீரின் தன் வெப்ப கொள்ளளவு அதிகம் என்பதால் சடுதியாக மாற்றம் உடனடியாக அவதானிக்கப்பட மாட்டாது என்றும் ஆனால் மெதுவாக வெப்பமான நீர் பின்னர் குளிரவும் காலம் எடுக்கும் என்பதால் இவ் விடயத்தினை அதிக அவதானத்துடன் அணுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர் காலநிலை பௌதீகவியலாளர்கள்.மனித செயற்பாட்டால் பூமி அழிவுப் பாதையில் செல்கின்றது என்பதற்கு பல சான்றுகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் இவ் அறிவிப்பு பூமியின் நிலைத்திருக்கும் கால எல்லை பற்றிய கேள்விகளை அதிகரித்துள்ளதுடன் நாம் நமது வாழ் நாள் முடிய முன்னர் பூமியின் பெரும்பகுதியை இயற்கைக்கு கொடுத்து விடுவோமா என்னும் அச்சமும் தோன்ற ஆரம்பித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக