வியாழன், 24 செப்டம்பர், 2009

9 கிலோகிராமில் புதிய கும்பகர்ணன்


வந்துதித்தான் தற்கால கும்பகர்ணன்.

இந்தோனேசியாவில் அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.அதுதாள் 19.2 இறாத்தல் அதாவது 8.7 கிலோகிராமில் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஒரு தாய்.

இது வரை இந்தோனேசியாவில் பிறந்த குழந்தைகளில் இது மிகப் பெரியது எனினும் உலக அளவில் இது பெரிதா என்னும் கருத்துக்கள் எதுவும் கூறப்படவில்லை.

ஆனால் இதன் நிறை போன்று உயரமும் 62 சென்ரி மீற்றர்.சாதாரணமான ஒரு குழந்தையின் நிறை 6 இறாத்தல் அதாவது 2800 கிராம் முதல் 9 இறாத்தல் அதாவது 4299 கிராம் வரை இருக்கும் இதேபோல் உயரம் 19 தொடக்கும் 21 அங்குலம் அதாவது 58 தொடக்கும் 51 சென்ரி மீற்றரும் ஆகும். எனவே ஒப்பீட்டளவில் இவன் கும்பகர்ணன் தான் அத்துடன் இவ் குழந்தை எப்போதும் பசியில் உணவு கேட்டு அழுவதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.கும்பகர்ணன் 6 மாதம் தான் அழுவான்.

ஆனால் இவ் அபரிமிதமான வழர்ச்சியுள்ள குழந்தை பிறக்க காரணமானது தாயின் கவலையீனம் என்றும் காரணம் கூறுகின்றனர்.

41 வயதான அந்த தாய் நீரிழிவு நோயாளி என்றும் இவர் குழந்தை கருவுற்று இருந்தபோது அதிக குழுக்கோசுடன் நீரிழிவுத் தாக்கத்துக்குள்ளாகி இருந்ததாகவும் இதனால் அதிக குருதிக் குழுக்கோஸை பெற்றுக் கொண்ட கருப்பையில் இருந்த குழந்தை அபரிமிதமான வழர்ச்சியை காட்டிநிற்பதாக தெரிவிக்கின்றனர்.

எனவே பெற்றோரே நீங்கள் விடும் பல கவனக்குறைவுகள் வரும் காலத்தில் வாழவேண்டிய அப்பாவிகள் பலரை பாதிக்கின்றது இன்று அகதி முகாமில் வாழும் பிறக்கும் பல குழந்தைகள் எந்த பாவம் செய்தன அவை செய்தது ஒன்றுதான் தமிழ் தாயின் கருவில் உயிர் கொண்டது.

பிழை செய்தது யார்நாம் வாழும் இடம் தெரியாது எமது வாழ்க்கை எங்கபோகும் என எதிர் காலத்தை நினைக்காது சாதாரண வாழ்க்கை வாழ நினைத்தீர் இனி உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையை என்ன என்று தொடர்வார்கள் முட் கம்பிக்குள்ளா இல்லை அகதிச் சந்ததி ஆகவா?.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக