திங்கள், 7 செப்டம்பர், 2009

விண் வெளிக்கும் மணம் வந்தாச்சு






விண்வெளியில் புதிய மணம் உணரப்படுகின்றது.



விண்வெளி குப்பையாகின்றது அதை ஆராய்ச்சி என்னும் பேரில் குப்பை ஆக்குகின்றார்கள் என்று பலர் புலம்புகின்றார்கள். இதற்கு வலுச் சேர்க்கும் முகமாக அண்மையில் விண்வெளிக்குச் சென்ற விண்வெளிக்கு புதியவரான டிஸ்கவரி ஓடத்தின் தற்போதைய வானோடியான கெவின் பூட் வெண் வெளியில் வித்தியாசமான பிரத்தியேகமான மணம் ஒன்றை தாம் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.கடந்த வெள்ளி 4.9.2009 இதை அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தன்னால்அதை ஜுரணிக்க முடியவில்லை என்னும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதுவரை தான் இவ்வாறு ஒரு வாசனையை உணர்ந்ததில்லை என்னும் அது தான் விண்வெளி நடை பயிற்சியின் பின்னர் ஓடத்துக்கு திரும்பிய பின்னரும் தன்னுடன் கூட ஒட்டியிருந்து வாசம் வீசியதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.முன்னரும் சில விண்வெளி வீரர்கள் அண்டத்தில் துப்பாக்கி குண்டு துகளின் மணம் அல்லது ஓசோனின் மணத்தை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளர்.இது அண்டத்தில் இயற்கை மணமா இல்லை மனித செயற்பாடுகளால் அது மாசாகி வரும் அறிகுறியா என்பதை கண்டறிய தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதை செய்பவர்கள் தமது சட்டாம் பிள்ளை
விளையாட்டை காட்டுவதற்கும் நட்சத்திர போட்டியின் பாதிப்பு கருதியும் உண்மை தகவல்களை வெளியிட மாட்டார்கள் என எதிர் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக