திங்கள், 21 செப்டம்பர், 2009

சூரிய அலைகளால் பூமிக்கு ஆபத்து.


சூரிய அலைகளால் பூமிக்கு ஆபத்து.
சூரியன் வெளியடும் வெப்ப மற்றும் காந்த அலைகளால் பூமி தாக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து்ளனர்.
சூரியன் குறிப்பட்ட காலத்துக்கு ஒரு தடைவை உச்ச நிலை மற்றும் அதை தொடர்ந்தான மந்த நிலைக்குச் செல்வதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இதன் காரணமாக உருவாகும் காந்த மற்றும் வெப்ப கதிர் வீச்சுக்களால் தாக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் உருவான சில சூரியப் பொட்டுக்களை ஆராய்ந்த விடத்து இதன் நிகழ்வுகள் பற்றி கண்டறியப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சூரிய உச்சசெயற்பாட்டு நிகழ்வு சூரிய உச்சம் என்றும் அதை தொடர்ந்து வரும் மந்த நிலைமை சூரிய இழிநிலை என்றும் அழைக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர்கள் உச்ச காலத்தில் பெரும் எண்ணிக்கையான சூரியக் கதிர்ப்புகள் மற்றும் காந்த கதிர்ப்புக்களை அண்டத்தில் வெளிவிடப் படுவதாகவும் கடந்த 1996 மற்றும் 2008 காலப்பகுதியில் இதன் சில அவதானங்கள் கிடைக்கப்பட்டுள்ளபோதும் அதன் தாக்கங்கள் பரிதாக இருக்கவில்லை ஆனால் வரும் காலங்களில் இவ்வாறு சூரிய உச்ச மற்றும் இழிநிலைக்காலங்களில் ஆன தாக்கங்கள் பாரிய அழிவுகளை ஏற்படுத்தலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
11 வருடங்கள் கொண்ட ஒரு சூரிய வட்டத்தில் வரும் உச்ச மற்றும் இழி நிலைகளுக்கிடையிலான வேறுபட்ட கதிர்ப்புகள் மற்றும் பூமியில் இடமாற்றங்கள் இத் தாக்கத்தில் பாரிய பங்கு வகிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சூரிய கதிர்ப்புக்கள் மற்றும் ஏற்றங்கொண்ட துணிக்கைகளால் பூமியில் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் செயலிழக்கும் ஆபாயம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சேய்மதிகள் மற்றும் தகவல் தொடர்பு மின்காந்த அலை செயலிகள் பல சூரிய கதிர்ப்புக்களால் ஏற்றங்களால் பாதிக்கப்படும் இதனாலேயு இவ் செயலிழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக