புதன், 28 அக்டோபர், 2009

20 வருடத்தில் புலிகள் அழிந்துவிடும் ஆபாயம்.





தற்போது மிகப் பெரும் ஆபத்தில் உள்ள வனவிலங்குகளில் ஒன்றான புலிகள் சரியான காப்பு நடவடிக்கைகளை விரைவு படுத்தாவிடின் இன்னும் 2 தசாப்தங்களில் அழிந்துவிடும் என் எச்சரிக்கின்றனர் வனவிலங்கு வல்லுனர்கள்.
தற்போதைய கணிப்பின் படி 12 ஆசிய நாடுகளில் 3500 வரையான புலிகள் வாழ்ந்து வருவதாகவும் இது கடந்த நூற்றாண்டில் 100000 ஆகா காணபட்டதாகவும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரு்டா வருடம் பல புலிகள் சட்ட விரோதமான முறையில் கொல்லப்படுவதாகவும் அவற்றின் உடல் பாகங்கள் விற்பதன் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வரையான வியாபாரம் நடைபெறுவதாகவும் இன்ரப்போல் அறிக்கை இட்டுள்ளது.புலித் தோல் விலையுயர் அலங்கார ஆடையுற்பத்திக்காக பெரும்பாலும் விற்கப்படுகின்றது. குறிப்பாக ஒரு புலித் தோல் சீனா போன்ற நாடுகளில் 20000 டொலர் பெறுமதியில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இவற்றின் காரணமாக புலிகள் வேகமாக அழிந்து செல்வதாகவும் இதை விட ஆசியாவில் அவற்றின் இயற்கை வாழிடங்கள் அவற்றின் இரைகளுக்கான அதாவது மேச்சல் விலங்குகளுக்கான வாழிடங்கள் அழிக்கப்பட்டுச் செல்வதாலும் இது நடைபேறுகின்றதாக தெரிவித்துள்ள வனவிலங்கு பாதுகாவலர்கள் உடனடி நடவடிக்கை மூலம் புலிகள் அருகிச் செல்வதை தடுக்க பலரது ஒத்துளைப்பு தேவை எனத் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தியா வங்காளதேசம் கம்போடியா பூட்டான் சீனா இந்தியா இந்தோனேசியா லாவோஸ் மலேசியா மியான்மார் நேபாளம் ருஸ்யா தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் புலிகள் தற்போது உள்ளன.

பூமியின் ஒவ்வொரு மூலையிலும் மனிதர்கள் குழந்தைகள் பெண்கள் என வேறுபாடு இன்றி பல வழிகளில் இறக்க காரணமாகும் சுயநலம் பிடித்தவர்கள் வாழும் இந்த பூமியில் அழகிய விலங்கு ஆனாலும் புலிகள் வாழ சுயநலம் கொண்டவர்கள் முன்வந்து வழிவிடுவார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக