ஞாயிறு, 4 அக்டோபர், 2009

2025 இல் பாலைவனமாகிவிடுமாம் 70 வீத பூமி



புதிதாக பாலைவனமாகும் பிரதேசங்கள்.

பூமியின் காலநிலை மாற்றம் வரும் 15 ஆண்டுகளுக்குள் பூமியில் 70 வீத நிலப்பரப்புகளை பாலைவனமாக்கி மரணம் செடி கொடி அற்ற மணல் திட்டுக்களாக ஆக்கிவிடும் என எச்சரித்துள்ளது ஐ.நா.
தற்போது 41 வீதமான புவிப்பரப்பு இவ்வாறு பாதிக்கப்பட்டுக் கொண்டுள்ளது எனவும் வரும் காலத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தொடருமாயின் இன்னும் வேகமாக அதிகரித்து பூமியில் வளம் மிக்க நிலப்பரப்புக்கள் பாலைவனமாகிவிடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டளவில் இவ் உச்ச தாக்கத்தினை அவதானிக்க முடியும் என்று Luc Gnacadja எனப்படும் ஐ.நாவின் காலநிலை மற்றும் உயிர் காப்பு மையத்தின் நிறைவேற்று அதிகாரி தெரிவி்த்துள்ளார்.

1990 இல் இருந்து காலநிலை மிகவும் மோசமாக பூமியை பாதித்து வருகின்றது இன்னும் அதை தடுக்க அல்லது குறைக்க எந்த ஆக்க பூர்வமான நடவடிக்கையும் இல்லை உணவுப்பாதுகாப்பு மற்றும் உயிர்க் கோளப்பாதுகாப்பு என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது எனவே உடனடியான காலநிலை பாதுகாப்பு திட்டம் இல்லை எனில் பூமியில் வெறும் 30 வீத நிலப்பரப்பு தான் உயிர் வாழ் தகவுடன் மிஞ்சும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நமது நாடு இதில் எங்கு இருக்குமோ தெரியவில்லையு பச்சையாகவா இல்லை பாலைவனமாகவா?

1 கருத்து: