சனி, 17 அக்டோபர், 2009

கடலுக்கடியில் நாடாளுமன்றக் கூட்டம்




கடந்த 16 .09.2009 அன்று உலகில் ஒரு வினோதத்தை நிகழ்த்தி காட்டியுள்ளனர் மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது பலருக்கு வினோதமாக பட்டாலும் மாலைதீவாரை பொறுத்தவரையில் அது ஒரு வாழ்வாதார மனிதாபிமான பிரச்சினை.
மாலைதீவின் சிறிய நாடாளுமன்றின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஒரு சூழல் சம்பந்தப்பட்ட ஓப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். அனால் அவர்கள் அதற்கு தெரிவு செய்துள்ள இடம்தான் பலரை மலைக்க வைத்துள்ளனது.
மாலை தீவுகளில் உள்ள படைத்துறைப்பளிகளில் ஒன்றான கிறிபியூசி என்னும் களப்பில் நீருக்கு அடியில் 20 அடி அதாவது 6 மீற்ரர் ஆழத்தில் இவ் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அது மட்டுமல்லாமல் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவ் கூட்ம் நடைபெற்றது இங்கு குறிப்படத்தக்கது தீவிரவாதிகளுக்கோ அல்ல பிற ஊடுருவல் காரருக்கோ பயந்து அல்ல மீன்களுக்கு பயந்து.

மாலைதீவின் ஜநாதிபதி மற்றும் அமைச்சர்கள் 13 பேர் இணைந்து தமது நாட்டை பாதுகாக்குபடியும் அதற்கு புவி வெப்பமாவதற்கு காரணமான பச்சையில்ல வாயுக்களை வெளியிடுவதை குறைக்க நாடுகள் முன்னவரவேண்டும் எனக் கோரும் ஒப்பந்தத்தில் இவ்வாறு நீருக்கடியில் அவர்கள் கூடி கையொப்பம் இட்டுள்ளனர்.
1192 சிறிய தீவுகளை கொண்ட 350000 மக்கள் தொகை கொண்ட இந்து சமுத்திரத்தின் அழகிய தீவு நாடு மாலைதீவு
தற்போது அதிகரித்துவரும் புவி வெப்பமாதல் மற்றும் அதன் தொடர்ச்ச்சியான கடல் மட்டம் உயர்வால் முதலில்
பாதிக்கப்படபோவது அதாவது மூழ்கப்போவது இதுவே.
இதனை அடிப்படையாக கொண்டு மாலைதீவின் வரலாற்றில் முதன் முறையாக நிறுவப்பட்டுள்ள ஜனநாயக அரசு பலவிதமான நடவடிக்கைகளை தேற்கொண்டு வருகின்றது.
வரும் மார்கழியில் கோப்பன்காகனில் நடைபெறவுள்ள காலநிலை மாநாட்டில் முன்வைக்கவென்று இவ்கோரிக்கையை அவர்கள் தயார் செய்துள்ளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக