வியாழன், 1 அக்டோபர், 2009

ஓருருளிகள் இனி வீதியில்

கொண்டா என்றால் எமது முதல் சந்ததி சொல்லிக் கொள்வது பிரபலமான ஊர்ந்துருளிகள் மற்றும் மகிழுந்துகள் பற்றித் தான். கொண்டா தற்போது காலத்தின் தேவை கருதி பல புதிய வாகனம் சார் படைப்புக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தி பிரபலம் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக கொண்டா வெளியிட்டுள்ள ஆரப்ப தயாரிப்பில் உள்ள ஒரு தனிநபர் பாவனைக்குரிய ஒரு சக்கர வாகனம். "ஓருருளி U3-X".

வேக்கட்டுப்பாடு திசைக்கட்டுப்பாடு கொண்ட இறுதி வடிவம் பெற்றுள்ள ஓருருளி ஒன்று படத்தில்.

அதில் அமர்ந்துள்ளவர் தனது உடல அமைப்பு மற்றும் இருக்கையில் பதிக்கும் உடல் நிறை என்பனவற்றில் சிறிய மாறறங்களை செய்யும் போது திசை மற்றும் வேகம் போன்றன மாற்றப்படுகின்றவாறு உணர் கருவிகள் இணைக்கப்பட்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரும் காலத்தில் இவ்வாறு உள்ள பல படைப்புக்களை உருவாக்கும் வேகத்தில் உலகின் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் போட்டியில் உள்ளது. பார்ப்போம் நமது நாடுகளில் இவை எப்போ வலம் வரும் என்று.ஏனெனில் யுத்த ராங்கிகளும் இராணுவ வாகனங்களும் ஊரும் நம்து வீதிகளில் இவை ஊர்ந்தால் இன்று சமாதானம் மலர்ந்துள்ளதாக கருத இடமுண்டு மற்றும்படி பேச்சில் அது உருவாகாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக