திங்கள், 12 அக்டோபர், 2009

நோபல் பரிசு எண்ணிக்கை கூடுமா?கோரிக்கை விடுக்கின்றனர் விஞ்ஞானிகள்.


பொதுமக்கள் சுகாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் காச நோயாளர் ஒருவருடன்

தற்போது உலகின் கல்விசார் அறிஞ்ஞர்கள் ஏன் அனைவரையும் பெரும்பாலும் பேச வைத்துக் கொண்டுள்ள ஒரு விடயம் நோபல் பரிசுகள் பற்றியும் அதற்காக தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் பற்றியுமாகும்.1901 ஆம் ஆண்டு நோபலினால் அறிமுகப்படுத்தப்பட்ட இப் பரிசு 21 ஆம் நூற்றாண்டின் பல விஞ்ஞானிகளை சமூக சேவையாளர்களை மருத்துவர்களை பெறியலாளர்களை பெருளியலாளர்களை கெளரவித்து வருகின்றது.இதன் மூலம் ஏனைய பலரை ஊக்கப்படுத்தி புதிய பல விடயங்கள் உருவாகவும் புதிய சிந்தனைகளுக்கும் வழி வகுக்கின்றது.





தற்போது மருத்துவம். இரசாயணம். பெளதீகம்.இலக்கியம்.சமாதானம் ஆகிய விடயங்களுக்கு பரிசுத் தேர்வுகள் இடம்பெறுகின்றன.


இத் தேர்வு எண்ணிக்கையை கூட்டும் படி சில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் கூட்டாக நோபல் பரிசுத் தேர்வுக்குழுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.
குறிப்பாக முன்னர் பல சாதனைகள் செய்து உதவி மறக்கப்பட்டுள்ள விஞ்ஞானிகளை மையப்படுத்தியே இந்த கோரிக்கையை அவர்கள் விடுத்துள்ளனர்.
அதாவது இதுவரை பசிக்கு பரிந்து உரைக்கப்படாத அல்லது பரிசு இல்லா காலத்தில் அறிவியலில் பங்களிப்பு செய்த விஞ்ஞானிகள் இதன் மூலம் கெளாவிக்கப்படவேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்





இதில் அவர்கள் சமாதானத்துக்கான பரிசு அடிப்படையில் சுற்று சூழல் மற்றும் சமூக சுகாதாரம் ஆகிய விடய்ஙகளுக்கான பரிசு ஒன்றை அறிமுகப்படுத்தும் படியும். மருத்துவம் மற்றும் உளவியல் அடிப்படையில் உயிரியல் மற்றும் பல்வகைமை பிறப்புரிமையியல் கூர்பு உயிரியல் மூலக்கூற்றியல் அடங்கிய விடயங்களினை உள்ளடக்கி பரிசுகள் அறிமுகப்படுத்தும் படி கோரியுள்ளனர்.


அவர்கள் நோபல் தோர்வுக்குழுவுக்கு எழுதியுள்ள கடிதம் கீழ் தரப்பட்டுள்ளது.





நன்றி ரைம்ஸ்








Michael Sohlman
Executive Director, Nobel Foundation
Sturegatan 14
Box 5232
SE-102 45 Stockholm
Sweden.

30 September 2009

Dear Mr Sohlman,

We are a group of ten scientists and engineers. During the past month, at the request of
New Scientist magazine, members of the group have discussed how we would like to see
the science prizes administered by the Nobel Foundation evolve. We would like to
present the results of our discussion, in the hope that our conclusions will stimulate
debate amongst members of the foundation.
The prizes are an extraordinary institution. They have been used to recognise many of the
most notable scientific achievements of the past century. We feel that no other science
prize does more to reward and promote brilliance, or attracts more attention from the
public.
The prizes will no doubt continue to be influential. Science has, however, changed
significantly since the first prizes were awarded. When Alfred Nobel signed his will in
1895, he could not have anticipated threats such as climate change and HIV/AIDS. Nor
could he have known of the new scientific disciplines that are generating results that will
transform our world for the better.
Many of these fields, as well as these challenges, do not fit well into the remit of the
prizes that he created. If the World Health Organization were to eradicate malaria, for
example, the achievement might not qualify for any of the existing prizes. Fundamental
breakthroughs in areas such as neuroscience and ecology, some of which will eventually
help tackle the threats mentioned above, are also going unrecognized.
We appreciate that the foundation is bound by Nobel's will. But we also note that the
foundation has shown flexibility in the past, the creation of the economics prize in 1968
being one example. With that in mind, we would like to recommend two changes that we
feel would align the prizes with current challenges:
1. The creation of Nobel prizes for the Global Environment and Public Health. The
new prizes would focus on applications of science rather than basic research. As with the
existing peace prize, organisations would be eligible. The environment prize would
recognise successes in promoting sustainability, mitigating climate change or reducing
biodiversity losses. The public health prize would recognise improvements in global
health, such as the reduction or eradication of disease. (We present these lists as
examples; they are not intended to be complete).
2. The expansion of, or an addition to, the prize for physiology or medicine to
recognise contributions from across the life sciences. Fields that are currently
excluded, such as ecology, would become eligible. More emphasis would be placed on
the rapidly expanding field of neuroscience. This could be achieved by expanding the
existing prize for medicine or physiology or by the addition of new prizes for
fundamental biology (including ecology, genetics and cellular, molecular and
evolutionary biology) and behavioral science (including psychology and neuroscience).
Over the past century, progress in the basic sciences has transformed our world and our
understanding of it. By recognizing the men and women that drove that progress, the
Nobel prizes have made the public aware of the enormous contribution that science has
made. Different forms of science and technology will transform our world during this
century. We feel that these suggestions will enable the prizes to appropriately recognise
future achievements, and to remain influential for another hundred years.

Yours Sincerely,



Larry Brilliant
President, Skoll Urgent Threats Fund and advisor, Google.org.



Rodney Brooks
Panasonic Professor of Robotics, Massachusetts Institute of Technology, and
founder of iRobot Corp and Heartland Robotics.



Peter Diamandis
Chairman and CEO, X PRIZE Foundation.



Tim Hunt
Cell Cycle Control Laboratory, Cancer Research UK.



David King
Director, Smith School of Enterprise and the Environment, University of Oxford.



Lynn Margulis
Distinguished University Professor, University of Massachusetts, Amherst.



Steven Pinker
Harvard College Professor and Johnstone Family Professor, Harvard University



Peter Raven
Director, Missouri Botanical Garden.



Frans de Waal
Director, Living Links Center and C.H Candler Professor of Psychology, Emory
University



E.O. Wilson
Pellegrino University Professor, Emeritus, Harvard University



cc: The Board of Directors of the Nobel Foundation

தாவர உண்ணி சிலந்தி.


ஐயா நான் தான் அந்த தாவர பட்சணி சிலந்தி பயல்.




சிலந்திகளை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் பல கொலிவூட் படங்களில் வந்து போன ஆபாயகரமான அங்கிகள் அவை நஞ்சு கொண்ட தத்திப் பாய்ந்து தாவிக் கொள்ளும் பெரும்பாலும் திரவ பதார்த்த உண்ணிகள் அதாவது அங்கிகளை கொண்று அவற்றின் தமது நொதியங்களால் சமிபாடடைய செய்து உறிஞ்சி உண்ணும் விலங்குகள் என இது வரை நாம் கற்று வந்துள்ளோம் பாத்து வந்துள்ளோம். ஆனால் முதல் தடைவையாக ஒரு தாவர பட்சினி சிலந்தி ஒன்று மத்திய அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.அக்கேசியா acacia எனப்படும் ஒரு புதர் ஒன்றின் குருத்துக்களை உண்ணும் ஒருவகை சிலந்திகளே அவ்வாறு கண்டறியப்பட்டுள்ளவை.Bagheera kiplingi எனப் பெயரிடப்பட்டுள்ள இது எட்டுக்கால்கள் கொண்டது மனித கைவிரல் நகம் அளவுதான் உள்ளது.
உலகொங்கும் உள்ள 40000 சிலந்தி இனங்களில் இது மிகவும் அரிதானதாக காணப்படுகின்றது.இவை தமது முழு வாழ் நாளையும் acacia மரங்களில் தான் செலவிடுவதாகவும் அவ்வப்பொது இலையுண்ணும் எறும்புகளால் தாவரங்கள் சூழப்படும் போது மாத்திரம் கீழ் இறங்கிய பின்னர் எறும்புகள் திரும்பிவிட அவையும் மீண்டும் ஏறிவிடுகின்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் அவற்றிற்கு போசரணக்குறைபாடு ஏற்படும் இடத்து எறும்புகளில் குடம்பிகளை உடைத்து அதன் சாற்றையும் குடிக்கின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். என்னவாக இருந்தாலும் இதுவரை அடையாளப்படுத்தப்பட்ட பூமியில் உயிர் பல்வகைமையின் அளவு மிகவும் சிறியது என்னும் கருத்து மீண்டும் ஒரு முறை வலுப்படுத்தப்பட்டுள்ளது

அபாயத்தி்ல் மன்னார் கடல் குதிரைகள்.


கடல் குதிரைக் குட்டிகள்
இயற்கை அள்ளி தந்துள்ள அழகிய பூமியில் நாம் பலர் இன்னும் அறியாத அழகை கடல் கொண்டுள்ளது. அந்த வகையில் கடலில் எம்பி எம்பி நாம் சதுரங்கம் விளைாயடும் போது அசைக்கும் குதிரை போல் அசையும் கடல் குதிரைகள் நேரில் கண்டவர்களை கவரும் மறக்க முடியாத கடல் வாழ் அங்கி.
இது மட்டுமல்ல கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுய நிலையில் இன்று உலகம் உள்ளது
.இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் பகுதி தென் தமிழகத்தில்தான் உள்ளது. இங்கு உலகிலேயே வேறு எங்கும் இல்லாத சுமார் 3600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த அரியவகை உயிரினங்களில் கடற்குதிரை என்னும் ஒருவகை மீன் இனமும் ஒன்று. இதன் தலையானது குதிரையின் தலைபோன்று இருப்பதால், இதற்கு கடற்குதிரை எனப் பெயர் ஏற்பட்டதாம்.




இராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வரையுள்ள ஆழம் குறைந்த கடல்பகுதியில் காணப்படும் இக் கடல் குதிரைகளின் வால் குரங்கின் வால் போல நீண்டும்,சுருண்டும் காணப்படுகிறது. இந்த வாலின் மூலம் கடற்தாவரங்கள், கடற்பஞ்சுகள் போன்றவற்றை பற்றிக்கொண்டு இருக்குமாம்.உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது.முதுகுத் துடுப்பினைப் பயன்படுத்தி மெதுவாக நீந்தியும் பெரும்பாலும் குதித்துக் குதித்தும் செல்கின்றன. பிற விலங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கடற் தாவரங்களுக்குள் மறைந்து கொள்கின்றன. கண்கள் சிறிதாக இருந்தாலும் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளும் வசதியுடையதாகவும் உள்ளது.




தனக்குத் தேவையான மிதவை நுண்ணுயிரிகளை உறிஞ்சி வடிகட்டி உண்ணும் தன்மையுடையது.பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.பல்வேறு சிறப்புகளை உடைய இந்த அரிய வகை கடல்வாழ் உயிரினத்தின் விற்பனை விலை கிலோவுக்கு ரூ. 2000 முதல் ரூ. 5000 வரை உள்ளது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் ருசி மிகுந்த சாறு வகைகளும், மருத்துவப் பொருள்களும் தயாரிக்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு இதைப் பயன்படுத்துகின்றனர்.




உலர்ந்த கடற்குதிரையை வறுத்து அதன் தூளை தேனில் கலந்து குழந்தைகளுக்கு மருந்தாகக் கொடுக்கின்றனர். தேங்காய் எண்ணெயில் கலந்து வெட்டுக் காயங்களுக்கும் இப் பகுதி மக்கள் உபயோகிக்கின்றனர்.ஆஸ்துமாவுக்கும் சிறந்த மருந்தாக இருப்பதால், உலக அளவில் இது அதிகமாகத் தேவைப்படுகிறது.கடலுக்கடியில் சங்கு மற்றும் கடல் அட்டை போன்றவற்றை எடுப்போர் இதனையும் பிடிக்கின்றனர். கடலுக்குள் கடல் தாவரங்கள் உள்ள பகுதிகளுக்குள் மூழ்கி கடற்குதிரைகளையும் கைகளால் சேகரிக்கின்றனர். சுமார் 6 முதல் 10 மீனவர்கள் குறைந்தது 3 மணி நேரமாவது இதனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால், இந்த அரியவகை உயிரினம் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது.ஒரு படகுக்கு ஒரு நாளைக்கு 120 முதல் 350 கடற்குதிரைகள் வரை பிடிக்கப்படுகின்றன.




இது மட்டுமல்லாமல் சேது சமுத்திர திட்டம் காரணமாக ஆழமாகும் பாக்கு நீரிணையில் அலை வேகம் கூடுவதும் இதன் அழிவுக்கு காரணமாகிவிடும்.




அதி வேகமான அலைகள் இவற்றை அள்ளி செல்லும் ஏனெனில் இவை பாரம் குறைந்தவை மீன்களை விட மாறுபட்ட விதத்தில் நீந்தும் தன்மை கொண்டவை.




என்வோ மனிதன் தனது சொந்த தேவைக்காக இயற்கைணை மிகையளவில் பாவிக்க அவை தானாக அழிந்து ஓய்வு தேடிக் கொண்டுள்ளன.




இதற்கு முடிவும் மாற்று வழியும் மனிதனிடம் தான் உள்ளது

தோற்றுப்போனது நாசா.நாசாமாய் போனது நாசாவின் கனவு



நாசாவின் மோதுகை திட்டம்
சந்திரனில் தண்ணீர் உண்டா என ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட செய்கோள் நாசா எதிர்பார்த்த மாதிரியான தகவல்களை எதையும் தரவில்லை.
கடந்த வெள்ளி 08.10.2009 சந்திரனின் தெற்று துருவத்தில் பாரிய மேதுகை ஒன்றை ஏற்படு்த்தி சந்திர மேற்பரப்புக்குள் நீர் உள்ளதா என ஆராயும் முயற்சியை நாசா மேற் கொண்டது. அதுகும் இந்தியாவின் சந்திராயன் செய்கோள் செயலிழக்க முன்னர் சேகரித்து அனுப்பிய புகைப்படங்கள் சிலவற்றில் நீர் பனிக்கட்டி ஆதாரங்களை கொண்டு மேலும் ஆளச் சென்று தோண்டும் பணியை மும்முரமாக ஈடுபட்ட நாசா இறுதியில் ஒரு தகவலும் சரிவரக்கிடைக்காமல் கையறு நிலையில் உள்ளது.

தண்ணீர் இருப்பதாக கருத வைத்த படம்.

மோதலில் பின்னர் இரண்டு மணிநேரத்தில் தண்ணீர் உண்டா இல்லையா என்னும் பதில் கிடைக்கும் எனக் கூறி ஆவலுடன் காத்திருந்த நாசா விஞ்ஞானிகளை நாசமாய் போன அந்த சந்திரன் ஏமாற்றிவிட்டது.
மேதலின் பின்னர் வெளியான தூசுக்கள் எவையும் நீர் ஆவியையோ அல்லது நீரி்ன் வேறு வடிவங்களையோ கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளது நாசா.
முன்னர் திட்டமிட்டபடி ஒரு செய்கோள் மோத மற்றயது கிட்டச் சென்று மோதலின் பின்னான விடங்களை படம் பிடித்து அனுப்பியது அதாவது தூசுப்படலங்களை படம் எடுத்து அனுப்பியது. இதை நுணுகி ஆராய்ந்து மண்டையை பிய்த்தும் பதில் இல்லாமல் தவிப்பதாய் கூறுகின்றது நாசா.இத்துடன் சந்திராயன் படங்கள் வெண் தூசுக்கள் உடையதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றது.
இதில் எது உண்மை என்பது புரியவில்லை சந்திராயன் தகவல் சரியா இல்லை நாசாவின் இறுதித் தகவல் பிழையா?
நாசா லேசு பட்டதல்ல தனக்கு போட்டியாக யாரும் வராமல் இருக்க எல்லா தகவலையும் மூடு மந்திரமாக பேணும் கில்லாடி.
பார்ப்போம. விடயம் மலிந்தால் சந்தைக்கு வரும் தானே

சனி, 10 அக்டோபர், 2009

சனியில் உயிரினங்கள் இருக்காம்.அகதிகள் வாழ இடம் இருக்கா?



சந்திராயன் திட்டம்



உயிர் உள்ளதாக கருதப்படும் சந்திரன் துணைக்கோள்

சனிக் கிரகத்தின் துணைக் கோள் ஒன்று உயிர் வாழ் தகவுள்ளதாக கருதுகின்றனர் விஞ்ஞானிகள்.என்கிளேடஸ் எனப்படும் சனியின் சந்திரன் ஒன்றில் இவ்வாறு உயிர் இருக்காலம் என்றும் ஊகம் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டுள்ளது.இவ் சந்திரனின் தென் பகுதியில் பாரிய நீர் ஊற்றுக்கள் உள்ளதாகவும் அவற்றில் இருந்து சீறிப்பாயும் நீர் அதன் வான வெளியில் வீசப்படுவதாகவம் அவர்கள் தெரிவிக்கின்ற்னர்.உயிரியலாளர் ஆபெல் மென்டிஸ் உருவாக்கியுள்ளஅளவறி வாழத்தகு கொள்கையில் அடிப்படையில் இங்கு உயிர் உள்ளதாக கருதப்படுகின்றது.தற்போதைக்கு இங்கு நுண் உயிர்கள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டாலும் இதன் அமைவிடம் அதாவது இவ் சந்திரனின் அமைவிடம் காரணமாக இதை உறுதிப்படுத்தவோ அல்லது மேலும் ஆராய்ச்சிகள் செய்யவோ பல காலம் எடுக்கும்.
பூமியில் மாத்திரம் உயிர் உள்ளது என்னும் கொள்கை அடிபட்டுப் பொய் காலங்கள் ஆனாலும் பிறகொள் உயிரிகள் பற்றி உறுதியான தகவல்களை பொற்றுக் கொள்ள திணறுகின்றது வான் ஆராய்ச்சி.
ஆனாலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன ஏற்கனவே அண்டத்தின் பிறகோள்களில் உயிரிகள் உள்ளது பற்றி நாசா உறுதிப்படு்த்தியுள்ளது என்றும் ஆனால் அவர்கள் அமெரிக்கர்களை விட பெரும் சண்டியர்கள் தொழில்நுட்டப வாதிகள் எனக் கருதிவருவதால் அமெரிக்கா அந்த விபரங்களை வெளியிட்டு தனது செல்வாக்கு குறைவதை விரும்பாது மறைத்து வருகின்றது என்று கூறப்படுகின்றது.
ஏன் அண்மையில் கூட இந்தியாவின் சந்திராயன் கண்டறிந்துள்ள சந்திரனின் நீர் பற்றிய விடயம் கூட நாசா முற்கூட்டி அறிந்திருந்தும் அங்குள்ள பிற சில விலை மதிக்க முடியாத தாதுக்களில் கண்வைத்துள்ள காரணத்தால் வெளியில் சொல்லாமல் தவிர்த்து விட்டது என்று கருதுபவர்களும் உண்டு.
அது மட்டுமல்லாமல் சந்திராயன் திடீர் என செயலிழந்து போனது ஏன் என்று சிந்தித்தால் அனைத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது என புரியும்.
அத்துடன் சந்திராயன் செயலிழக்க சில மாதங்கள் முன்னர் சந்திரன் நோக்கி இரண்டு செய்மதிகள் அனுப்பி இதை மோதி அங்குள்ள பொருட்கள் தாதுக்கள் என்ன என தான் ஆராய உள்ளதாக அமெரிக்கா கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.


நாசா சந்திரனில் மோதவிட்டுள்ள செய்கோள்.


என்வோ? சந்திரனில் என்ன செவ்வாயில் என்ன இல்லை வியாழனிலும் உயிர்வாழ் தகவுள்ள நிலைமை இருந்தால் அகதியாக அடைபட்டுக் கிடக்கும் அடிமையாக்கப்படவுள்ள மக்களை அங்கு குடியிருத்துங்கள்.
அங்கு தன்னும் ஒரு நல்ல கொட்டகை போட்டு வாழ அவர்களை விடுங்கள்.
முள்ளுக் கம்பிகளுக்குள் வாழவும் பலர் அரசியல் செய்யவும் பகடையாக அவர்கள் தொடர்ந்து இருக்க வேண்டாம்.

டைனோசர்கள் மிகப் பெரியவையா?




அண்மையில் டைனோசர்கள் பற்றிய கல்வியில் புதிய பரிணாமம் ஒன்று புகுந்துள்ளது. ஆதாவது பிரான்சின் யூராசிக் பார்க் என்றழைக்கப்படும் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள டைனோசரகளில் பாதப் படிவுகள் இன்று பல ஆராய்ச்சியாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.அதாவது உலகில் இதுவரை அவதானிக்கப்படாத அளவு மிகப் பெரிய இவ் டைனோசரின் பாதங்களின் சுவட்டு படிவுகள் டைனோசர்கள் பற்றிய அளவுகள் பற்றிய கருத்துக்களில் மாற்றங்கள் கொண்டு வரும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பிளாங் என அழைக்கப்படும் பிரான்சின் டைனோசர்கள் முன்னர் வாழ்ந்து மறைந்து போனதாக கருதப்படும் பகுதியில் இவை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.இவை தாவர பட்சினிகளாகவும் நீண்ட கழுத்துடனும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இங்கு கண்டறியப்பட்டுள்ள பாதத்தின் படிவுகள் 1.5 மீற்றர் அகலம் (விட்டம்) கொண்டு்ள்ளதாகவும் 25 மீற்றர் நீளம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இது ஏறத்தாள 40 தொன் எடை கொண்ட டைனோசர்களின் பாதங்களின் படிவுகள் எனத் தெரிவிக்கின்றனர்.இது சரோபோட் வகை டைனோசரினது எனக் கூறப்படுகின்றது.இவ் பாதங்கள் சுண்ணாம்புக்கலில் படிந்துள்ளதால் இவ்வளவு தொழிவாக காணப்படுகின்றதாகவும். இவ் சுண்ணாம்புக்கற்கள் 150 மில்லியன் ஆண்டுகால காபன் னாலக்கணிப்பை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

வெள்ளி, 9 அக்டோபர், 2009

நாகரீகக் குப்பை மேடாகும் உலகம்.







உலக மயமாதல் நன்மை தீமை என்னும் இரண்டு வடிவத்தில் பூமியில் இன்று அதிகளவில் கோலோச்சி வருகின்றது.இதில் நன்மைகள் நன்மைகளாக இருப்பதையிட்டே நாம் அதிகம் கவனம் செலுத்துகின்றோம் அதில் நன்மைகளை தொடரவே விளைகின்றோம் ஆனால் ஒரு நன்மையை காண அதை உணர நுகர நாம் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தும் தீமைகள் என்ன என்பது பலரும் கண்டு கொள்வதில்லை கண்டாலும் கவனிப்பதில்லைஉலக மயமாதலின் அடிப்படையை உருவாக்கிய புரட்சிகள் அதாவது கைத் தொழில் விவசாயம் முக்கியமாக தொழில் நுட்பம் என்பன மனித சந்ததிக்கு சந்ததி பெரும் போட்டி நிலைமையை உருவாக்கி தமக்கிடையிலும் ஒரு சந்ததிப் போட்டியை உருவாக்கி விட்டுள்ளன.ஆனால் இன்றைய உலக மயமாதலின் போக்கு மாற மாற்றப்பட தொழில் நுட்ப புரட்சி ஆற்றிய பங்கு அளப்பரியது ஆற்றிக் கொண்டுள்ள பங்கு அளவிடமுடியாதது.அதை 700 கோடியை அண்மிக்கும் உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் நேரடியாக உணர்கின்றார்கள் அதன் பால் பயன்களை ஈட்டுகின்றார்கள்.இந்த நிலையில் தொழில் நுட்ப புரட்சி நமக்கு நேரிடையாக அள்ளித் தரும் நன்மைக்கு ஆப்பால் மறைமுகமாக நமக்கு செய்யும் தீமைகள் பற்றி நாம் இன்றும் விழிப்படைய வில்லை.அதை எதிர் கொள்ள தயாராகவும் இல்லை.தொழிநுட்பங்கள் இலத்திரனியல் என்னும் வடிவில் எமது பணிகளை இலகுவாக்கியுள்ளது ஆனால் பூமியின் இருப்பை அது எந்த அளவில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பது அண்மை காலங்களில் உலகம் புரிய ஆரம்பித்துள்ளது.இன்று சாதாரண பாமர மக்கள் முதல் கற்றறிந்த அறிஞ்ஞர்கள் வரை தொழில் நுட்பற்களுக்கு அதாவது இலத்திரனியலுக்கு அடிமைகள் அதுவும் புதுப்பிக்கப்படும் நவீன தொழில் நுட்பங்களின் மீதான தீராத அடிமைகள்.வீட்டின் அங்கத்தவர்கள் ஆகிவிட்ட தொழில் நுட்பப் பொருட்களுடன் எங்கள் வாழ்க்கைகள் நகர்கின்றன.இதற்கேற்றவாறு அதாவது எமது தேவைக்கேற்பவாறு புதிய வசதிகளை மக்களின் வேலைகளை இலகுவாக்கும் சாதனங்களை படைத்துவிடவேண்டும் என்னும் வேகம் படைப்பாளிகளுக்கு உண்டு.இலத்திரனியல் சாதனங்கள் பலவற்றின் பயன்பாடுகள் உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக உயிர்களை பாதிப்பதற்பகான ஆதாரங்கள் இன்று பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இவை சூழலுக்கு செய்யும் மோசமான விழைவுகள் பற்றி விழிப்பு இன்றும் வரவில்லைவெளிப்பார்வையில் வெறும் பொருளாக காணப்படும் இவ் இலத்திரனியல் சாதனங்கள் மொத்த்தில் ஒரு விடப்பெருள்.ஓவ்வொரும் இலத்திரனியல் சாதனமும் அவற்றின் உள்ளடக்கங்களும் பல உக்காத மூலகங்கள் நச்சுப் பொருட்களின் இருக்கைகள்.இவ் நச்சுக்களை பூமிக்கு சேர்க்கும் களஞ்சியங்களை அவை.உதாரணமாக1 பி.வி.சி எனப்படும் அதிகளவு இலத்திரனியல் சாதனங்களில் காணப்படும் சேர்க்கை எரியும் போது வெளிவிடும் புகை ஓமோன் வெளியிடுகைள தடுக்கும்.2.ஆசனிக் :கணணி மற்றம் கைபேசிகளின் சில்லிகள் (சிப்புகளில்) காணப்படும் பற்றுநோய்க் காரணியாகும்.3.கட்மியம் :மின்னகலங்களின் பொதுவாகக்காணப்படும் இது சுவாசக் குiறாபடுகள் மற்றும் இரத்த அழுத்தம் சிறுநரக நோய் முக்கியமாக புற்றுநோய் காரணியாகும்.4.இரசம் :புளோரொளிர் மின்குமிழ் மற்றும் மின்கலங்களில் காணப்படும் இது தோல் வியாதிகள் சுவாசக் குறைபாடுகள் இருதயக் குறைபாடுகள் தோல் மற்றும் கண் பாதிப்புகளுக்கு வழி வகுக்கும் நீண்டநாள் தாக்கமாக பிறப்பு குறைகாடுகள் மூழை மற்றும் சிற நீரக நோய்களை உருவாக்கும்.5.குறோமியம் : புற்றுநோய் காரணி என்பதுடன் பிறப்புரிமைப் பொருளான டீ.என்.ஏ இல் பிறள்வுகளை ஏற்படுத்தும் விகாரமாக்கியாகும்.6. ஈயம் பொதுவான இது பசியின்மை மன அழுத்தம் தலை வலியை ஏற்படுத்தும் தொடர்ந்து நீண்டநாள் தாக்கமாக முழைப் பாதிப்பு மற்றும் நரம்புத் தாக்கத்தை ஏற்படுத்தும்.7.பேரியம் நாகம் செலினியம் ஆகியனவும் இலத்திரனியல் சாதனங்களில் காணப்பட்டு காலாகாலம் ப+மியில் இருந்து சூழலில் தாக்கங்களை ஏற்படுத்தும்.இவை தவிர சிறிய அளவில் ஏராளமான நச்சுப் பொருட்களையும் இவை கொண்டுள்ளன.புதிய வருகைகள் மற்றும் பழுதுகள் காரணமாக பாவனையாளர்களாகிய நாங்கள் இலத்திரனியல் சாதனங்களை கைவிடும் போது மேல் சொல்லப்பட்ட அபாயகரமான பதார்த்தஙகளை விட வேறு பல பதார்த்தங்களையும் கொண்ட இலத்திரனியல் கழிவுகளை கொட்டுகின்றோம்.அதாவது உலகளாவிய ரீதியில் நாளுக்கு 112000 கணினிகள்.மற்றும் பல லட்சம் மின்கலங்கள் இதேபோன்று 140 மில்லியன் கைத் தொலைபேசிகளின் உதிரிபாகங்கள் வேறு வீட்டு பாவனை இலத்திரனியல் சாதனங்கள் இறுவட்டுக்கள் என சமையலறை முதல் சுவாமி அறைவரை இவற்றின் ஆதிக்கம் உள்ளது பல பொருட்களை கைவிடுகின்றோம்.இவற்றின் மூலம் வருடம் 40 மில்லியன் முதல் 50 மில்லியன் தொன் வரையான இலத்திரலனியல் கழிவுகளை பூமி சேர்த்துக் கொள்ளுகின்றது. இவை இன்று நம்மை பாதிக்க காலம் எடுத்தாலும் காத்திருந்து நமது அடுத்த சந்ததிக்கு பாதிப்பை எற்படுத்தும் தன்மை கொண்டவை.ஏனவே வளரும் நாட்டவர் ஆகிய எம்மை நாகரீகம் வளர்ச்சி என்னும் பதப் பிரயோகங்களுடன் அணுகும் இவ் பாரிய எரிதிகளிடையே இலாபத்தையும் கவர்ச்சியையும் காணாது அதன் உள்ளே புதைந்துள்ள ஆபத்தை உணர்ந்து அதற்கேற்ற வழியில் நடந்து கொள்ள வேண்டும்.

Thanks Internews Srilanka

புதன், 7 அக்டோபர், 2009

பெருமை சேர்த்த தமிழர்.




தமிழன் ஒருபக்கம் துன்பப்பட்டுக் கொண்டு அகதியாய் அலைந்து கொண்டும் உள்ளபோது தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்ப்பவர்களும் இருக்கின்றோம் என காட்டிக் கொண்டு உள்ளார்கள் தமது திறமைகளால்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்று தமிழர்க்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழகத் தமிழன் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.
1952 இல் தமிழகம் சிதம்பரம் பெற்றெடுதத்து தந்த தமிழர் இவர்.
அமெரிக்காவின் எம்.ஆர்.சி ஆய்வகத்தில் மரபணுக்களின் குறைபாட்டில் புரதத் தொகுப்பு ரைபோசோம்களின் பங்கு பற்றி இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு இரசாயனவிலுக்கான நோபல் பரிசு இம்முறை கிடைத்துள்ளது.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

சனிக் கிரகத்தில் மகா வளையம்.


சனியின் வளையம்.

சனிக் கிரகத்தில் மகா வளையம் ஒன்றை படம் பிடித்துள்ளதாம் நாசாவின் ஸ்பிற்சர்
தொலைகாட்டி.
இது வரை காணப்படாது கண்காணிக்கப்படாத இவ் பாரிய தூசு வளையம் தற்போது தரமுயர்த்தப்பட்டுள்ள இவ் தொலைக் காட்டியின் ஊடாப கடம் பிடிக்கப்பட்டுள்ளது.
புவி மேற்பரப்பில் இருந்து 7 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் ஆரம்பிக்கும் இவ் தூசு வளையம் 12 மில்லியன் கிலோமீற்றர் வரை பரந்து விரிந்து செல்வதாகவும் கணிக்கப்பட்டுளது.
இவ் வளையத்தினுள் பூமியின் அளவு கொண்ட கோள்களை மில்லியன் கணக்கில் அடக்கிவிட முடியும் என கூறுகின்றனர்.
இதில் என்ன புதினம் உள்ளது என பலர் நினைக்கலாம். ஆனால் புதினங்கள் இனித்தான் ஆரம்பமாக போகின்றது.
இதுவரை கண்ணில் படாமல் இருந்து வந்த இவ் வளையம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது மறைந்துள்ள பல இரகசியங்களை வெளிக் கொண்டுவர ஆரம்பிக்கப்பட்டுள்ள படி இது என கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

திங்கள், 5 அக்டோபர், 2009

கிரிக் கெட்டில் மீண்டும் சூதாட்டமாம்.







பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான அரையிறுதிப்போட்டியில் கிரிக்கட்ட சூதாட்டம் நடந்துள்ளதாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


பாகிஸ்தான் அணித் தலைவர் யூனிஸ்கான் நடந்து கொண்ட விதம் இவ் சந்தேகத்துக்கு காரணமாக தெரிவிக்கப்படுகின்றது.


மிகவும் விறுவிறுப்பான இப் போட்டியில் முதலில் துடுப்பொடுத்தாடிய பாகிஸ்தான் 234 என்னும் வெற்றி இலக்கை நிர்ணயி்த்து இருந்துபோது பதிலுக்கு துடுப்பெடு்த்து ஆடிய நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் கிறான்ற் எலியட்டின் பிடி ஒன்றை யூனிஸ்கான் தவறவிட்டது இச் சர்ச்சைக்குரிய முக்கிய காரணம்.





மிக இலகுவான பிடி ஒன்றை 40 ஆவது ஓவரில் தவற விட்டு இறுதியில் தோற்று இறுதிப் போட்டியில் பங்கு கொள்ள முடியாமல் நாடு திரும்பும் பாக் மீது சந்தேகக் கண்கள் விழ ஆரம்பித்துள்ளது.


மிகப் பொறுப்பான அணித் தலைவராக இருந்து அணியை வழி நடத்தவேண்டிய யூனிஸ் அந்த பிடியை தவற விட்ட பின்னர் தெரிவித்த கருத்தும் இவ் சந்தேகத்தை வலுப்படுத்தும் படியாக உள்ளது.





அதாவது தனது கைவிரலில் ஏற்பட்டிருந்த காயத்தை பாதுகாப்பவே தான் அந்த பிடியை தவற விட்டதாக தெரிவித்துள்ளார் யூனிஸ்கான்


ஒரு பொறுப்புள்ள அணித் தலைவர் பெறுப்புடன் குறிப்படக் கூடிய கருத்து இல்லை எனத் தெரிவிக்கும் கிரிக்கட்ட கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவு.இது சம்பந்தமாக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.





உணவின்றி தூக்கமின்றி கண்விழித்து நம்மில் பலர் கிரிக்கெட் பைத்தியமாக அலைவது இது போன்ற சூதாட்ட போட்டிகளை காணவா?

Doubts cast over Pakistan dropped catch AAP

Pakistan captain Younus Khan's dropped catch at a crucial point in Saturday's Champions Trophy cricket match against New Zealand has roused suspicions of corrupt play.
While strenuously denying deliberately dropping the ball, Younus conceded that the dropped catch cost his team the Champions Trophy semi-final match in Johannesburg on Saturday.
But the International Cricket Council's (ICC) anti-corruption unit will be having a good look at the match, according to the Ahmedabad Mirror. However the newspaper noted: "It would be jumping the gun at this stage to suggest a hanky panky semi-final."
The match was evenly poised when Younus dropped Grant Elliott in the covers off teenage fast bowler Mohammad Aamer in the 40th over, with the New Zealand batsman then on 42 in his team's total of 4-165.
New Zealand needed 69 to win at that stage with six wickets in hand, but Elliott steered his team home with a crucial 104-run stand for the fifth wicket with skipper Daniel Vettori (41).
"The officials are guarded in their reactions at this stage, but indeed, the tapes of the Pakistan-New Zealand semi-final match are on their way to the anti-corruption unit," the newspaper reported.
Younus "shockingly" gave priority to the safety of an injured finger to making the catch, it said.
The Pakistan captain showed an after-match press conference the bandaged little finger of his right hand, and said the reason he missed the catch was because he was trying to protect a fractured finger.
"When I ran Gautam Gambhir out with the same hand, people clapped and said `what a patriot, playing for the country with a broken finger'," he said.
"Now, the same people will call me names, they will suggest I was up to something. I am not worried about anything."

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

2025 இல் பாலைவனமாகிவிடுமாம் 70 வீத பூமி



புதிதாக பாலைவனமாகும் பிரதேசங்கள்.

பூமியின் காலநிலை மாற்றம் வரும் 15 ஆண்டுகளுக்குள் பூமியில் 70 வீத நிலப்பரப்புகளை பாலைவனமாக்கி மரணம் செடி கொடி அற்ற மணல் திட்டுக்களாக ஆக்கிவிடும் என எச்சரித்துள்ளது ஐ.நா.
தற்போது 41 வீதமான புவிப்பரப்பு இவ்வாறு பாதிக்கப்பட்டுக் கொண்டுள்ளது எனவும் வரும் காலத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தொடருமாயின் இன்னும் வேகமாக அதிகரித்து பூமியில் வளம் மிக்க நிலப்பரப்புக்கள் பாலைவனமாகிவிடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டளவில் இவ் உச்ச தாக்கத்தினை அவதானிக்க முடியும் என்று Luc Gnacadja எனப்படும் ஐ.நாவின் காலநிலை மற்றும் உயிர் காப்பு மையத்தின் நிறைவேற்று அதிகாரி தெரிவி்த்துள்ளார்.

1990 இல் இருந்து காலநிலை மிகவும் மோசமாக பூமியை பாதித்து வருகின்றது இன்னும் அதை தடுக்க அல்லது குறைக்க எந்த ஆக்க பூர்வமான நடவடிக்கையும் இல்லை உணவுப்பாதுகாப்பு மற்றும் உயிர்க் கோளப்பாதுகாப்பு என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது எனவே உடனடியான காலநிலை பாதுகாப்பு திட்டம் இல்லை எனில் பூமியில் வெறும் 30 வீத நிலப்பரப்பு தான் உயிர் வாழ் தகவுடன் மிஞ்சும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நமது நாடு இதில் எங்கு இருக்குமோ தெரியவில்லையு பச்சையாகவா இல்லை பாலைவனமாகவா?

சனி, 3 அக்டோபர், 2009

பயணம் ஒன்று. இடரும் இடமும் வேறு.


இது அன்றை இடப்பெயர்வு



இது பிலிப்பைன்சில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின்போது இடம் பெயரும் மக்கள்.

இதை பார்க்க நமக்கும் சில ஞாபங்கள் வரும்.

இங்கு மழை பொழிய இடம் பெயர்கின்றார் ஒரு திசைநோக்கி.

ஆனால் சில் மாதங்கள் முன் ஷெல் பொழிய இடம்பெயர்ந்தார் சிலர்.


கழுத்தளவு தண்ணீரில் நந்திக்கடலில் அவர் நடை பயணம்.

இங்கு இடுப்பளவு தண்ணீரில் இவர் பயணம்.


கையில் கிடைத்தது இவருக்கு மிச்சம் நாளை தப்பினால் அனைத்தும் மிஞசும்

ஆனால் முள்ளி வாய்க்காலில் மிஞ்சியது தான் அவரிடம் இன்று மிச்சம்.

சிலருக்கு ஊனமும் உயிரும் தான் இனி என்றுமே மிச்சம்.





இங்கு மிஞ்சியது பெரும் பாலும் மிஞ்சும் உயிரோ இல்லை உடைமையோ அது தொடரும்.


ஆனால் முள்ளி வாய்க்காலில் அன்று மிஞ்சிய உயிர் கூட இன்று பலரிடம் இல்லை.


வாழப்போராட்டம் இங்கு அங்கு எல்லாமே போரட்டம்.


வெள்ளம் வடியும் வரைக்கும் இங்கு இடர்.


அங்கு இப்போ வெள்ளத்தை எதிர்பார்த்து இடர்.


வாழ என்னும் நம்பிக்கை இங்கும் உள்ளது ஆனால் இனி எப்படி வாழ்வோம் என்னும் எண்ணமே மிச்சமாய் அங்கு உள்ளது.


புரியும் பலருக்கு இந்த பயணத்தின் வலி.


அந்த பயணத்தில் வலி புரிந்து பலர் புரியாது நடிக்கிறார் இதுரை.


ஏதோ ஒரு முடிவில் அல்லது அனைவரது மடிவில் விடைகள் கிடைக்கும்.


அனைத்து பயணங்களும் உரிய இடத்தை அடையும்.




வெள்ளி, 2 அக்டோபர், 2009

தமிழ் நாட்டில் டைனோசர்.








டைனோசர் முட்டைகள் காணப்பட்ட கூடு போன்ற பகுதி




தமிழ் நாட்டில் டைனோசர் பண்டைய தமிழ் நாகரீககும் வெளிவருமா?
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றி வாழ்ந்த மூத்த குடி தமிழ் குடி.இக் குடி வாழும் இடத்தில் டைனோசரும் வாழ்ந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.தமிழ் நாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள டைனோசர்களின் முட்டைகள் எச்சங்கள் இதற்கு சான்றாகியுள்ளன.




டைனோசரின் முட்டைகள்.




65 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது எனக் கருதப்படும் டைனோசர் முட்டைகள் மற்றும் எச்சங்கள் தென் தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியலாளர் குழு ஒன்று நடாத்திய அகழ்வு சோதனையில் டெக்கான் பீடபூமியில் இருந்த எரிமலை ஒன்றின் படுக்கைகளில் ஆற்று ஓட்டம் ஒன்றுக்கு அண்மையாக இவ் டைனோசர் முட்டைகள் மற்றும் அவற்றின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


டைனோசர் முட்டைகள் மற்றும் அதன் பாகங்கள்


முன்னர் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இறுதி ஆராய்ச்சிகள் இந்தியாவில் நிகழ்ந்த பாரிய எரிமலை வெடிப்பு ஒன்றுதான் யூராசிக் காலத்தில் நிகழ்ந்த பாரிய உயிரின அழிவுக்கு முக்கியமாக டைனேசர் அழிவுக்கு காரணமாகியது என்று கூறப்படுகின்றது.இவ் டைனோசர் முட்டைகள் மற்றும் அதன் எச்சங்கள் பல சந்தேகத்துக்கு விடை தரும் என நம்பப் படுகின்றது.கண்டெடுக்கப்பட்ட முட்டைகள் 13 -20 சென்ரி மீ்ற்றர் விட்டம் கொண்டிருந்தன என்றும் மணல் மேடு போன்ற பெரிய 1.2 மீற்றர் விட்டம் கொண்ட கூடு ஒன்றில் காணப்பட்டதாகவும் இவ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட தமிழ் பேராசிரியர் இராம்குமார் தெரிவித்துள்ளார்.இப் பகுதியில் வேறு பல சுவடுகள் மற்றும் தொல் பொருட்கள் காணப்படலாம் எனத் தெரிவிக்கும் ஆராய்ச்சி புவியலாளர்கள் இப்பகுதியில் மேலும் ஆராய்ச்சிகளை தொடரவுள்ளனர்.
டைனோசர் எச்சங்கள்
இது மட்டுமன்றி ஆழமாகச் செல்லும் தொல்லியல் ஆய்வுகள் தமிழர் வாழ்க்கைகள் பற்றியும். அவர்களின் கடலோடு திறமையால் பூமியில் பல இடங்களில் கால் பதித்து பற்றியும் கூறினால் பல இடத்தில் வந்தேறு குடி என்று அடிவாங்கும் அவன் சற்றேனும் நிமிர்வான்.இது போன்று இன்று தமிழ்ர் வந்தேறு குடி என்று அடிவாங்கும் இடங்களிலும் இவ்வாறு தொல்பொருள் ஆய்வுகள் சுயாதீனமாக செய்யப்படவேண்டும் வெகுவிரைவில் இது நடாத்தப்படவேண்டும் இல்லை திரிப்புகள் அழிப்புகள் திணிப்புக்கள் நடந்து இருப்பதும் காணாமல் போய்விடும்

படங்கள் றொய்ரர்

வியாழன், 1 அக்டோபர், 2009

நாம் குரங்கல்ல,மனிதன் குரங்கில் இருந்து வரவில்லை


இது "இடா" எனபப்டும் குரங்குகள் மற்றும் மனிதனின் மூகூதாதையாக கருதப்படும் ஊர்வன அங்கி.



இது "லூசி" எனப்படும் மனித முதல் வகைக்குரியதாக கணிக்கப்படும் வன் கூடும் அதன் மாதிரி முழுத்தோற்றமும்.

இது தற்போது கண்டெடக்கப்பட்டுள்ள "ஆர்டி" எனப்படும் முதல் மனித வடிவமாக கருதப்படும் உயிரியின் வன்கூடும் அதன் முழு மாதிரியும்.

இதுவரை மனிதன் குரங்கில் இருந்து கூர்ப்பு எய்தியுள்ளதாக இருந்து வந்த கருத்துக்கள் பொய் உன விஞ்ஙானிகள் தெரிவித்துள்ளனர்.
எதியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள சில வன்கூட்டு ஆதாரங்கள் கொண்டு இதை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.சில மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் கண்டெடுக்கப்பட்ட "Ida" மிஸ்ஸிங் லிங் எனப்பட்டு மனித கூர்ப்பின் அடிப்படை அங்கியில் இயல்புகள் பற்றிய ஆராய்வின் பின்னர் இது உறுதிப்பட்டுள்ளப்பட்டுது.இவ் மிஸ்ஸிங் லிங் இல் இருந்து தான் மனிதன் மற்றும் குரங்குகள் அதாவது ஏப்புகள கூர்ப்பு அடைந்துள்ளதாக முன்னர் தெரிவிக்கப்படடடிருந்தது.
Ardipithecus ramidus என்னும் அண்மையழில் எதியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டபெண்ணின் வன்கூட்டினை ஆராய்ந்த விடத்து பல உண்மைகள் புலப்பட்டுள்ளன.இதுவே மனித இனததின் தற்போது வரைக்கும் உள்ளவற்றில் மிகவும் ஆதியான உயிரி எனக்கூறும் விஞ்ஞானிகள் இவ் உயிரியும் ஏப்புக்களும் ஒரே மூதாதையில் இருந்து உருவாகியுள்ளனஎன்னும் கருத்தை மறுக்கின்றனர்.4.4 மில்லியன் வருடங்களுக்கு முன்னா வாழ்ந்ததாககருதப்படும் இதுவே மனித முதல் மூதாதை என்கின்றனர் அவர்கள்.இதே போல் லூசி எனப்படும் Australopithecus afarensis 4 அடி உயரமான பிறிதொரு மனித முதாதையின் வன்கூட்டை ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் அதுவும் முதல் மனிதனுக்கு சிறந்த ஒரு உதாரணம் என்கின்றனர்.
மனிதனும் சிம்பன்சிக்களும் பெருமளவு ஒத்திருந்த போதும் அவை 6 தொடக்குமு் ஏழு மில்லியன் ஆண்டு காலத்துக்கு முன்னர் வேறாக கூர்ப்படைய ஆராமிபித்துள்ளதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்ற போதும்சிலர் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே இது நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆர்டி எனப்படும் Ardipithecus ramidusநிச்சயமாக மனித முதாதை எனவும் இதில் இருந்து சிம்பன்சிக்கள் உருவாக வில்லை எனவும் அடித்துக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்
அதன் தலை சிம்பன்சி போலவும் சற்று வி்த்தியாசமான பாதங்களை கொண்டும் இருந்துள்ளதாகவும் இது அவை மரமேற உதவியாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள்இதன் கைகள் மணிக்கட்டு இடுப்பு என்பன வேறு வடிவம் கொண்டிருந்ததாகவும் மனிதன் பொல நிமிர்ந்த நடை கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இத்துடன் அவை எச்சந்தர்ப்பத்திலும் மணிக்கட்டில் சிம்பன்சிக்கள் நடப்பத போல் நடந்நது இல்லை எனவும் கூறுகின்றனர்.சிம்பன்சிக்களை விட ஆரிட்கள் வேறு சில இயல்புகளில் வேறுபட்டும் உள்ளன இதாவது அவை பெரிய கூரிய வேட்டை பற்களை கொண்டு இருக்கவில்லை.சிம்பன்சிக்களில் இது போதுவானது.ஆண் பெண் என்பன ஒரே மாதிரியான பல் அமைப்பை கொண்டிருந்தன இது தற்பொதைய சிம்கன்சிக்களில் அவதானிக்க முடியாதது.இத்துடன் இவை சிறிய மூழை கொண்டு இருந்தாலும் சிறப்பான பார்வை அமைப்பு மற்றும் பிரித்தறி திறன் என்பனவற்றை கொண்டு இருந்ததாக தெரிவிக்கின்றனர்.எனவே குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்னும் கருத்தும் இராமாயணத்தில் தென் நாட்டார் மந்திகள் என்னும் கருத்தும் எங்கு போகக் போகின்றன என்று தெரியவில்லை.

ஓருருளிகள் இனி வீதியில்

கொண்டா என்றால் எமது முதல் சந்ததி சொல்லிக் கொள்வது பிரபலமான ஊர்ந்துருளிகள் மற்றும் மகிழுந்துகள் பற்றித் தான். கொண்டா தற்போது காலத்தின் தேவை கருதி பல புதிய வாகனம் சார் படைப்புக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தி பிரபலம் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக கொண்டா வெளியிட்டுள்ள ஆரப்ப தயாரிப்பில் உள்ள ஒரு தனிநபர் பாவனைக்குரிய ஒரு சக்கர வாகனம். "ஓருருளி U3-X".

வேக்கட்டுப்பாடு திசைக்கட்டுப்பாடு கொண்ட இறுதி வடிவம் பெற்றுள்ள ஓருருளி ஒன்று படத்தில்.

அதில் அமர்ந்துள்ளவர் தனது உடல அமைப்பு மற்றும் இருக்கையில் பதிக்கும் உடல் நிறை என்பனவற்றில் சிறிய மாறறங்களை செய்யும் போது திசை மற்றும் வேகம் போன்றன மாற்றப்படுகின்றவாறு உணர் கருவிகள் இணைக்கப்பட்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரும் காலத்தில் இவ்வாறு உள்ள பல படைப்புக்களை உருவாக்கும் வேகத்தில் உலகின் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் போட்டியில் உள்ளது. பார்ப்போம் நமது நாடுகளில் இவை எப்போ வலம் வரும் என்று.ஏனெனில் யுத்த ராங்கிகளும் இராணுவ வாகனங்களும் ஊரும் நம்து வீதிகளில் இவை ஊர்ந்தால் இன்று சமாதானம் மலர்ந்துள்ளதாக கருத இடமுண்டு மற்றும்படி பேச்சில் அது உருவாகாது