சனி, 3 அக்டோபர், 2009

பயணம் ஒன்று. இடரும் இடமும் வேறு.


இது அன்றை இடப்பெயர்வு



இது பிலிப்பைன்சில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின்போது இடம் பெயரும் மக்கள்.

இதை பார்க்க நமக்கும் சில ஞாபங்கள் வரும்.

இங்கு மழை பொழிய இடம் பெயர்கின்றார் ஒரு திசைநோக்கி.

ஆனால் சில் மாதங்கள் முன் ஷெல் பொழிய இடம்பெயர்ந்தார் சிலர்.


கழுத்தளவு தண்ணீரில் நந்திக்கடலில் அவர் நடை பயணம்.

இங்கு இடுப்பளவு தண்ணீரில் இவர் பயணம்.


கையில் கிடைத்தது இவருக்கு மிச்சம் நாளை தப்பினால் அனைத்தும் மிஞசும்

ஆனால் முள்ளி வாய்க்காலில் மிஞ்சியது தான் அவரிடம் இன்று மிச்சம்.

சிலருக்கு ஊனமும் உயிரும் தான் இனி என்றுமே மிச்சம்.





இங்கு மிஞ்சியது பெரும் பாலும் மிஞ்சும் உயிரோ இல்லை உடைமையோ அது தொடரும்.


ஆனால் முள்ளி வாய்க்காலில் அன்று மிஞ்சிய உயிர் கூட இன்று பலரிடம் இல்லை.


வாழப்போராட்டம் இங்கு அங்கு எல்லாமே போரட்டம்.


வெள்ளம் வடியும் வரைக்கும் இங்கு இடர்.


அங்கு இப்போ வெள்ளத்தை எதிர்பார்த்து இடர்.


வாழ என்னும் நம்பிக்கை இங்கும் உள்ளது ஆனால் இனி எப்படி வாழ்வோம் என்னும் எண்ணமே மிச்சமாய் அங்கு உள்ளது.


புரியும் பலருக்கு இந்த பயணத்தின் வலி.


அந்த பயணத்தில் வலி புரிந்து பலர் புரியாது நடிக்கிறார் இதுரை.


ஏதோ ஒரு முடிவில் அல்லது அனைவரது மடிவில் விடைகள் கிடைக்கும்.


அனைத்து பயணங்களும் உரிய இடத்தை அடையும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக