செவ்வாய், 6 அக்டோபர், 2009

சனிக் கிரகத்தில் மகா வளையம்.


சனியின் வளையம்.

சனிக் கிரகத்தில் மகா வளையம் ஒன்றை படம் பிடித்துள்ளதாம் நாசாவின் ஸ்பிற்சர்
தொலைகாட்டி.
இது வரை காணப்படாது கண்காணிக்கப்படாத இவ் பாரிய தூசு வளையம் தற்போது தரமுயர்த்தப்பட்டுள்ள இவ் தொலைக் காட்டியின் ஊடாப கடம் பிடிக்கப்பட்டுள்ளது.
புவி மேற்பரப்பில் இருந்து 7 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் ஆரம்பிக்கும் இவ் தூசு வளையம் 12 மில்லியன் கிலோமீற்றர் வரை பரந்து விரிந்து செல்வதாகவும் கணிக்கப்பட்டுளது.
இவ் வளையத்தினுள் பூமியின் அளவு கொண்ட கோள்களை மில்லியன் கணக்கில் அடக்கிவிட முடியும் என கூறுகின்றனர்.
இதில் என்ன புதினம் உள்ளது என பலர் நினைக்கலாம். ஆனால் புதினங்கள் இனித்தான் ஆரம்பமாக போகின்றது.
இதுவரை கண்ணில் படாமல் இருந்து வந்த இவ் வளையம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது மறைந்துள்ள பல இரகசியங்களை வெளிக் கொண்டுவர ஆரம்பிக்கப்பட்டுள்ள படி இது என கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக