சனி, 10 அக்டோபர், 2009
சனியில் உயிரினங்கள் இருக்காம்.அகதிகள் வாழ இடம் இருக்கா?
சந்திராயன் திட்டம்
உயிர் உள்ளதாக கருதப்படும் சந்திரன் துணைக்கோள்
சனிக் கிரகத்தின் துணைக் கோள் ஒன்று உயிர் வாழ் தகவுள்ளதாக கருதுகின்றனர் விஞ்ஞானிகள்.என்கிளேடஸ் எனப்படும் சனியின் சந்திரன் ஒன்றில் இவ்வாறு உயிர் இருக்காலம் என்றும் ஊகம் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டுள்ளது.இவ் சந்திரனின் தென் பகுதியில் பாரிய நீர் ஊற்றுக்கள் உள்ளதாகவும் அவற்றில் இருந்து சீறிப்பாயும் நீர் அதன் வான வெளியில் வீசப்படுவதாகவம் அவர்கள் தெரிவிக்கின்ற்னர்.உயிரியலாளர் ஆபெல் மென்டிஸ் உருவாக்கியுள்ளஅளவறி வாழத்தகு கொள்கையில் அடிப்படையில் இங்கு உயிர் உள்ளதாக கருதப்படுகின்றது.தற்போதைக்கு இங்கு நுண் உயிர்கள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டாலும் இதன் அமைவிடம் அதாவது இவ் சந்திரனின் அமைவிடம் காரணமாக இதை உறுதிப்படுத்தவோ அல்லது மேலும் ஆராய்ச்சிகள் செய்யவோ பல காலம் எடுக்கும்.
பூமியில் மாத்திரம் உயிர் உள்ளது என்னும் கொள்கை அடிபட்டுப் பொய் காலங்கள் ஆனாலும் பிறகொள் உயிரிகள் பற்றி உறுதியான தகவல்களை பொற்றுக் கொள்ள திணறுகின்றது வான் ஆராய்ச்சி.
ஆனாலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன ஏற்கனவே அண்டத்தின் பிறகோள்களில் உயிரிகள் உள்ளது பற்றி நாசா உறுதிப்படு்த்தியுள்ளது என்றும் ஆனால் அவர்கள் அமெரிக்கர்களை விட பெரும் சண்டியர்கள் தொழில்நுட்டப வாதிகள் எனக் கருதிவருவதால் அமெரிக்கா அந்த விபரங்களை வெளியிட்டு தனது செல்வாக்கு குறைவதை விரும்பாது மறைத்து வருகின்றது என்று கூறப்படுகின்றது.
ஏன் அண்மையில் கூட இந்தியாவின் சந்திராயன் கண்டறிந்துள்ள சந்திரனின் நீர் பற்றிய விடயம் கூட நாசா முற்கூட்டி அறிந்திருந்தும் அங்குள்ள பிற சில விலை மதிக்க முடியாத தாதுக்களில் கண்வைத்துள்ள காரணத்தால் வெளியில் சொல்லாமல் தவிர்த்து விட்டது என்று கருதுபவர்களும் உண்டு.
அது மட்டுமல்லாமல் சந்திராயன் திடீர் என செயலிழந்து போனது ஏன் என்று சிந்தித்தால் அனைத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது என புரியும்.
அத்துடன் சந்திராயன் செயலிழக்க சில மாதங்கள் முன்னர் சந்திரன் நோக்கி இரண்டு செய்மதிகள் அனுப்பி இதை மோதி அங்குள்ள பொருட்கள் தாதுக்கள் என்ன என தான் ஆராய உள்ளதாக அமெரிக்கா கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
நாசா சந்திரனில் மோதவிட்டுள்ள செய்கோள்.
என்வோ? சந்திரனில் என்ன செவ்வாயில் என்ன இல்லை வியாழனிலும் உயிர்வாழ் தகவுள்ள நிலைமை இருந்தால் அகதியாக அடைபட்டுக் கிடக்கும் அடிமையாக்கப்படவுள்ள மக்களை அங்கு குடியிருத்துங்கள்.
அங்கு தன்னும் ஒரு நல்ல கொட்டகை போட்டு வாழ அவர்களை விடுங்கள்.
முள்ளுக் கம்பிகளுக்குள் வாழவும் பலர் அரசியல் செய்யவும் பகடையாக அவர்கள் தொடர்ந்து இருக்க வேண்டாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக