வெள்ளி, 9 அக்டோபர், 2009

நாகரீகக் குப்பை மேடாகும் உலகம்.







உலக மயமாதல் நன்மை தீமை என்னும் இரண்டு வடிவத்தில் பூமியில் இன்று அதிகளவில் கோலோச்சி வருகின்றது.இதில் நன்மைகள் நன்மைகளாக இருப்பதையிட்டே நாம் அதிகம் கவனம் செலுத்துகின்றோம் அதில் நன்மைகளை தொடரவே விளைகின்றோம் ஆனால் ஒரு நன்மையை காண அதை உணர நுகர நாம் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தும் தீமைகள் என்ன என்பது பலரும் கண்டு கொள்வதில்லை கண்டாலும் கவனிப்பதில்லைஉலக மயமாதலின் அடிப்படையை உருவாக்கிய புரட்சிகள் அதாவது கைத் தொழில் விவசாயம் முக்கியமாக தொழில் நுட்பம் என்பன மனித சந்ததிக்கு சந்ததி பெரும் போட்டி நிலைமையை உருவாக்கி தமக்கிடையிலும் ஒரு சந்ததிப் போட்டியை உருவாக்கி விட்டுள்ளன.ஆனால் இன்றைய உலக மயமாதலின் போக்கு மாற மாற்றப்பட தொழில் நுட்ப புரட்சி ஆற்றிய பங்கு அளப்பரியது ஆற்றிக் கொண்டுள்ள பங்கு அளவிடமுடியாதது.அதை 700 கோடியை அண்மிக்கும் உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் நேரடியாக உணர்கின்றார்கள் அதன் பால் பயன்களை ஈட்டுகின்றார்கள்.இந்த நிலையில் தொழில் நுட்ப புரட்சி நமக்கு நேரிடையாக அள்ளித் தரும் நன்மைக்கு ஆப்பால் மறைமுகமாக நமக்கு செய்யும் தீமைகள் பற்றி நாம் இன்றும் விழிப்படைய வில்லை.அதை எதிர் கொள்ள தயாராகவும் இல்லை.தொழிநுட்பங்கள் இலத்திரனியல் என்னும் வடிவில் எமது பணிகளை இலகுவாக்கியுள்ளது ஆனால் பூமியின் இருப்பை அது எந்த அளவில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பது அண்மை காலங்களில் உலகம் புரிய ஆரம்பித்துள்ளது.இன்று சாதாரண பாமர மக்கள் முதல் கற்றறிந்த அறிஞ்ஞர்கள் வரை தொழில் நுட்பற்களுக்கு அதாவது இலத்திரனியலுக்கு அடிமைகள் அதுவும் புதுப்பிக்கப்படும் நவீன தொழில் நுட்பங்களின் மீதான தீராத அடிமைகள்.வீட்டின் அங்கத்தவர்கள் ஆகிவிட்ட தொழில் நுட்பப் பொருட்களுடன் எங்கள் வாழ்க்கைகள் நகர்கின்றன.இதற்கேற்றவாறு அதாவது எமது தேவைக்கேற்பவாறு புதிய வசதிகளை மக்களின் வேலைகளை இலகுவாக்கும் சாதனங்களை படைத்துவிடவேண்டும் என்னும் வேகம் படைப்பாளிகளுக்கு உண்டு.இலத்திரனியல் சாதனங்கள் பலவற்றின் பயன்பாடுகள் உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக உயிர்களை பாதிப்பதற்பகான ஆதாரங்கள் இன்று பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இவை சூழலுக்கு செய்யும் மோசமான விழைவுகள் பற்றி விழிப்பு இன்றும் வரவில்லைவெளிப்பார்வையில் வெறும் பொருளாக காணப்படும் இவ் இலத்திரனியல் சாதனங்கள் மொத்த்தில் ஒரு விடப்பெருள்.ஓவ்வொரும் இலத்திரனியல் சாதனமும் அவற்றின் உள்ளடக்கங்களும் பல உக்காத மூலகங்கள் நச்சுப் பொருட்களின் இருக்கைகள்.இவ் நச்சுக்களை பூமிக்கு சேர்க்கும் களஞ்சியங்களை அவை.உதாரணமாக1 பி.வி.சி எனப்படும் அதிகளவு இலத்திரனியல் சாதனங்களில் காணப்படும் சேர்க்கை எரியும் போது வெளிவிடும் புகை ஓமோன் வெளியிடுகைள தடுக்கும்.2.ஆசனிக் :கணணி மற்றம் கைபேசிகளின் சில்லிகள் (சிப்புகளில்) காணப்படும் பற்றுநோய்க் காரணியாகும்.3.கட்மியம் :மின்னகலங்களின் பொதுவாகக்காணப்படும் இது சுவாசக் குiறாபடுகள் மற்றும் இரத்த அழுத்தம் சிறுநரக நோய் முக்கியமாக புற்றுநோய் காரணியாகும்.4.இரசம் :புளோரொளிர் மின்குமிழ் மற்றும் மின்கலங்களில் காணப்படும் இது தோல் வியாதிகள் சுவாசக் குறைபாடுகள் இருதயக் குறைபாடுகள் தோல் மற்றும் கண் பாதிப்புகளுக்கு வழி வகுக்கும் நீண்டநாள் தாக்கமாக பிறப்பு குறைகாடுகள் மூழை மற்றும் சிற நீரக நோய்களை உருவாக்கும்.5.குறோமியம் : புற்றுநோய் காரணி என்பதுடன் பிறப்புரிமைப் பொருளான டீ.என்.ஏ இல் பிறள்வுகளை ஏற்படுத்தும் விகாரமாக்கியாகும்.6. ஈயம் பொதுவான இது பசியின்மை மன அழுத்தம் தலை வலியை ஏற்படுத்தும் தொடர்ந்து நீண்டநாள் தாக்கமாக முழைப் பாதிப்பு மற்றும் நரம்புத் தாக்கத்தை ஏற்படுத்தும்.7.பேரியம் நாகம் செலினியம் ஆகியனவும் இலத்திரனியல் சாதனங்களில் காணப்பட்டு காலாகாலம் ப+மியில் இருந்து சூழலில் தாக்கங்களை ஏற்படுத்தும்.இவை தவிர சிறிய அளவில் ஏராளமான நச்சுப் பொருட்களையும் இவை கொண்டுள்ளன.புதிய வருகைகள் மற்றும் பழுதுகள் காரணமாக பாவனையாளர்களாகிய நாங்கள் இலத்திரனியல் சாதனங்களை கைவிடும் போது மேல் சொல்லப்பட்ட அபாயகரமான பதார்த்தஙகளை விட வேறு பல பதார்த்தங்களையும் கொண்ட இலத்திரனியல் கழிவுகளை கொட்டுகின்றோம்.அதாவது உலகளாவிய ரீதியில் நாளுக்கு 112000 கணினிகள்.மற்றும் பல லட்சம் மின்கலங்கள் இதேபோன்று 140 மில்லியன் கைத் தொலைபேசிகளின் உதிரிபாகங்கள் வேறு வீட்டு பாவனை இலத்திரனியல் சாதனங்கள் இறுவட்டுக்கள் என சமையலறை முதல் சுவாமி அறைவரை இவற்றின் ஆதிக்கம் உள்ளது பல பொருட்களை கைவிடுகின்றோம்.இவற்றின் மூலம் வருடம் 40 மில்லியன் முதல் 50 மில்லியன் தொன் வரையான இலத்திரலனியல் கழிவுகளை பூமி சேர்த்துக் கொள்ளுகின்றது. இவை இன்று நம்மை பாதிக்க காலம் எடுத்தாலும் காத்திருந்து நமது அடுத்த சந்ததிக்கு பாதிப்பை எற்படுத்தும் தன்மை கொண்டவை.ஏனவே வளரும் நாட்டவர் ஆகிய எம்மை நாகரீகம் வளர்ச்சி என்னும் பதப் பிரயோகங்களுடன் அணுகும் இவ் பாரிய எரிதிகளிடையே இலாபத்தையும் கவர்ச்சியையும் காணாது அதன் உள்ளே புதைந்துள்ள ஆபத்தை உணர்ந்து அதற்கேற்ற வழியில் நடந்து கொள்ள வேண்டும்.

Thanks Internews Srilanka

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக