திங்கள், 12 அக்டோபர், 2009

தாவர உண்ணி சிலந்தி.


ஐயா நான் தான் அந்த தாவர பட்சணி சிலந்தி பயல்.




சிலந்திகளை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் பல கொலிவூட் படங்களில் வந்து போன ஆபாயகரமான அங்கிகள் அவை நஞ்சு கொண்ட தத்திப் பாய்ந்து தாவிக் கொள்ளும் பெரும்பாலும் திரவ பதார்த்த உண்ணிகள் அதாவது அங்கிகளை கொண்று அவற்றின் தமது நொதியங்களால் சமிபாடடைய செய்து உறிஞ்சி உண்ணும் விலங்குகள் என இது வரை நாம் கற்று வந்துள்ளோம் பாத்து வந்துள்ளோம். ஆனால் முதல் தடைவையாக ஒரு தாவர பட்சினி சிலந்தி ஒன்று மத்திய அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.அக்கேசியா acacia எனப்படும் ஒரு புதர் ஒன்றின் குருத்துக்களை உண்ணும் ஒருவகை சிலந்திகளே அவ்வாறு கண்டறியப்பட்டுள்ளவை.Bagheera kiplingi எனப் பெயரிடப்பட்டுள்ள இது எட்டுக்கால்கள் கொண்டது மனித கைவிரல் நகம் அளவுதான் உள்ளது.
உலகொங்கும் உள்ள 40000 சிலந்தி இனங்களில் இது மிகவும் அரிதானதாக காணப்படுகின்றது.இவை தமது முழு வாழ் நாளையும் acacia மரங்களில் தான் செலவிடுவதாகவும் அவ்வப்பொது இலையுண்ணும் எறும்புகளால் தாவரங்கள் சூழப்படும் போது மாத்திரம் கீழ் இறங்கிய பின்னர் எறும்புகள் திரும்பிவிட அவையும் மீண்டும் ஏறிவிடுகின்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் அவற்றிற்கு போசரணக்குறைபாடு ஏற்படும் இடத்து எறும்புகளில் குடம்பிகளை உடைத்து அதன் சாற்றையும் குடிக்கின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். என்னவாக இருந்தாலும் இதுவரை அடையாளப்படுத்தப்பட்ட பூமியில் உயிர் பல்வகைமையின் அளவு மிகவும் சிறியது என்னும் கருத்து மீண்டும் ஒரு முறை வலுப்படுத்தப்பட்டுள்ளது

3 கருத்துகள்:

  1. வணக்கம் பனங்காற்று. உங்கள் வலைத்தளத்தை இன்று தான் பார்க்கக் கிடைத்தது. நல்ல பயனுள்ள அறிவியல் தகவல்களைத் தருகிறீர்கள். மிக்க நன்றி. நீங்கள் விக்கிசெய்திகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? விக்கிசெய்திகளில் உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன்.

    வாருங்கள்:
    http://ta.wikipedia.org/

    http://ta.wikipedia.org/

    பதிலளிநீக்கு
  2. நன்றி அன்பு தமிழ் அன்பரே.உங்கள் வேண்டுதலை பூர்த்தி செய்ய ஆவலாய் உள்ளேன்.நிச்சயம் வெகு விரைவி்ல் விக்கி செய்தியில் என்னால் முடிந்த பங்களிப்பை செய்கின்றேன்.
    அத்துடன் இங்குள்ள பதிவுகள் பயனுள்ளவையாக பட்டால் தாராளமாக நீங்கள் பயன் படுத்தலாம்.

    பதிலளிநீக்கு
  3. விக்கிசெய்திகளின் தளம் இங்கே:

    http://ta.wikinews.org/

    நன்றி.

    பதிலளிநீக்கு