வியாழன், 1 அக்டோபர், 2009

நாம் குரங்கல்ல,மனிதன் குரங்கில் இருந்து வரவில்லை


இது "இடா" எனபப்டும் குரங்குகள் மற்றும் மனிதனின் மூகூதாதையாக கருதப்படும் ஊர்வன அங்கி.



இது "லூசி" எனப்படும் மனித முதல் வகைக்குரியதாக கணிக்கப்படும் வன் கூடும் அதன் மாதிரி முழுத்தோற்றமும்.

இது தற்போது கண்டெடக்கப்பட்டுள்ள "ஆர்டி" எனப்படும் முதல் மனித வடிவமாக கருதப்படும் உயிரியின் வன்கூடும் அதன் முழு மாதிரியும்.

இதுவரை மனிதன் குரங்கில் இருந்து கூர்ப்பு எய்தியுள்ளதாக இருந்து வந்த கருத்துக்கள் பொய் உன விஞ்ஙானிகள் தெரிவித்துள்ளனர்.
எதியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள சில வன்கூட்டு ஆதாரங்கள் கொண்டு இதை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.சில மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் கண்டெடுக்கப்பட்ட "Ida" மிஸ்ஸிங் லிங் எனப்பட்டு மனித கூர்ப்பின் அடிப்படை அங்கியில் இயல்புகள் பற்றிய ஆராய்வின் பின்னர் இது உறுதிப்பட்டுள்ளப்பட்டுது.இவ் மிஸ்ஸிங் லிங் இல் இருந்து தான் மனிதன் மற்றும் குரங்குகள் அதாவது ஏப்புகள கூர்ப்பு அடைந்துள்ளதாக முன்னர் தெரிவிக்கப்படடடிருந்தது.
Ardipithecus ramidus என்னும் அண்மையழில் எதியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டபெண்ணின் வன்கூட்டினை ஆராய்ந்த விடத்து பல உண்மைகள் புலப்பட்டுள்ளன.இதுவே மனித இனததின் தற்போது வரைக்கும் உள்ளவற்றில் மிகவும் ஆதியான உயிரி எனக்கூறும் விஞ்ஞானிகள் இவ் உயிரியும் ஏப்புக்களும் ஒரே மூதாதையில் இருந்து உருவாகியுள்ளனஎன்னும் கருத்தை மறுக்கின்றனர்.4.4 மில்லியன் வருடங்களுக்கு முன்னா வாழ்ந்ததாககருதப்படும் இதுவே மனித முதல் மூதாதை என்கின்றனர் அவர்கள்.இதே போல் லூசி எனப்படும் Australopithecus afarensis 4 அடி உயரமான பிறிதொரு மனித முதாதையின் வன்கூட்டை ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் அதுவும் முதல் மனிதனுக்கு சிறந்த ஒரு உதாரணம் என்கின்றனர்.
மனிதனும் சிம்பன்சிக்களும் பெருமளவு ஒத்திருந்த போதும் அவை 6 தொடக்குமு் ஏழு மில்லியன் ஆண்டு காலத்துக்கு முன்னர் வேறாக கூர்ப்படைய ஆராமிபித்துள்ளதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்ற போதும்சிலர் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே இது நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆர்டி எனப்படும் Ardipithecus ramidusநிச்சயமாக மனித முதாதை எனவும் இதில் இருந்து சிம்பன்சிக்கள் உருவாக வில்லை எனவும் அடித்துக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்
அதன் தலை சிம்பன்சி போலவும் சற்று வி்த்தியாசமான பாதங்களை கொண்டும் இருந்துள்ளதாகவும் இது அவை மரமேற உதவியாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள்இதன் கைகள் மணிக்கட்டு இடுப்பு என்பன வேறு வடிவம் கொண்டிருந்ததாகவும் மனிதன் பொல நிமிர்ந்த நடை கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இத்துடன் அவை எச்சந்தர்ப்பத்திலும் மணிக்கட்டில் சிம்பன்சிக்கள் நடப்பத போல் நடந்நது இல்லை எனவும் கூறுகின்றனர்.சிம்பன்சிக்களை விட ஆரிட்கள் வேறு சில இயல்புகளில் வேறுபட்டும் உள்ளன இதாவது அவை பெரிய கூரிய வேட்டை பற்களை கொண்டு இருக்கவில்லை.சிம்பன்சிக்களில் இது போதுவானது.ஆண் பெண் என்பன ஒரே மாதிரியான பல் அமைப்பை கொண்டிருந்தன இது தற்பொதைய சிம்கன்சிக்களில் அவதானிக்க முடியாதது.இத்துடன் இவை சிறிய மூழை கொண்டு இருந்தாலும் சிறப்பான பார்வை அமைப்பு மற்றும் பிரித்தறி திறன் என்பனவற்றை கொண்டு இருந்ததாக தெரிவிக்கின்றனர்.எனவே குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்னும் கருத்தும் இராமாயணத்தில் தென் நாட்டார் மந்திகள் என்னும் கருத்தும் எங்கு போகக் போகின்றன என்று தெரியவில்லை.

3 கருத்துகள்:

  1. வலைத்தளம் அருமை, செய்தி நமக்கெல்லாம் பெருமை

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
    தொடரும் எமது பதிவுகளுக்கு உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கின்றோம்.
    வெளிவரா விடயங்கள் இருந்தால் தந்துதவுங்கள்

    பதிலளிநீக்கு