திங்கள், 12 அக்டோபர், 2009
தோற்றுப்போனது நாசா.நாசாமாய் போனது நாசாவின் கனவு
நாசாவின் மோதுகை திட்டம்
சந்திரனில் தண்ணீர் உண்டா என ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட செய்கோள் நாசா எதிர்பார்த்த மாதிரியான தகவல்களை எதையும் தரவில்லை.
கடந்த வெள்ளி 08.10.2009 சந்திரனின் தெற்று துருவத்தில் பாரிய மேதுகை ஒன்றை ஏற்படு்த்தி சந்திர மேற்பரப்புக்குள் நீர் உள்ளதா என ஆராயும் முயற்சியை நாசா மேற் கொண்டது. அதுகும் இந்தியாவின் சந்திராயன் செய்கோள் செயலிழக்க முன்னர் சேகரித்து அனுப்பிய புகைப்படங்கள் சிலவற்றில் நீர் பனிக்கட்டி ஆதாரங்களை கொண்டு மேலும் ஆளச் சென்று தோண்டும் பணியை மும்முரமாக ஈடுபட்ட நாசா இறுதியில் ஒரு தகவலும் சரிவரக்கிடைக்காமல் கையறு நிலையில் உள்ளது.
தண்ணீர் இருப்பதாக கருத வைத்த படம்.
மோதலில் பின்னர் இரண்டு மணிநேரத்தில் தண்ணீர் உண்டா இல்லையா என்னும் பதில் கிடைக்கும் எனக் கூறி ஆவலுடன் காத்திருந்த நாசா விஞ்ஞானிகளை நாசமாய் போன அந்த சந்திரன் ஏமாற்றிவிட்டது.
மேதலின் பின்னர் வெளியான தூசுக்கள் எவையும் நீர் ஆவியையோ அல்லது நீரி்ன் வேறு வடிவங்களையோ கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளது நாசா.
முன்னர் திட்டமிட்டபடி ஒரு செய்கோள் மோத மற்றயது கிட்டச் சென்று மோதலின் பின்னான விடங்களை படம் பிடித்து அனுப்பியது அதாவது தூசுப்படலங்களை படம் எடுத்து அனுப்பியது. இதை நுணுகி ஆராய்ந்து மண்டையை பிய்த்தும் பதில் இல்லாமல் தவிப்பதாய் கூறுகின்றது நாசா.இத்துடன் சந்திராயன் படங்கள் வெண் தூசுக்கள் உடையதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றது.
இதில் எது உண்மை என்பது புரியவில்லை சந்திராயன் தகவல் சரியா இல்லை நாசாவின் இறுதித் தகவல் பிழையா?
நாசா லேசு பட்டதல்ல தனக்கு போட்டியாக யாரும் வராமல் இருக்க எல்லா தகவலையும் மூடு மந்திரமாக பேணும் கில்லாடி.
பார்ப்போம. விடயம் மலிந்தால் சந்தைக்கு வரும் தானே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக