சனி, 10 அக்டோபர், 2009
டைனோசர்கள் மிகப் பெரியவையா?
அண்மையில் டைனோசர்கள் பற்றிய கல்வியில் புதிய பரிணாமம் ஒன்று புகுந்துள்ளது. ஆதாவது பிரான்சின் யூராசிக் பார்க் என்றழைக்கப்படும் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள டைனோசரகளில் பாதப் படிவுகள் இன்று பல ஆராய்ச்சியாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.அதாவது உலகில் இதுவரை அவதானிக்கப்படாத அளவு மிகப் பெரிய இவ் டைனோசரின் பாதங்களின் சுவட்டு படிவுகள் டைனோசர்கள் பற்றிய அளவுகள் பற்றிய கருத்துக்களில் மாற்றங்கள் கொண்டு வரும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பிளாங் என அழைக்கப்படும் பிரான்சின் டைனோசர்கள் முன்னர் வாழ்ந்து மறைந்து போனதாக கருதப்படும் பகுதியில் இவை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.இவை தாவர பட்சினிகளாகவும் நீண்ட கழுத்துடனும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இங்கு கண்டறியப்பட்டுள்ள பாதத்தின் படிவுகள் 1.5 மீற்றர் அகலம் (விட்டம்) கொண்டு்ள்ளதாகவும் 25 மீற்றர் நீளம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இது ஏறத்தாள 40 தொன் எடை கொண்ட டைனோசர்களின் பாதங்களின் படிவுகள் எனத் தெரிவிக்கின்றனர்.இது சரோபோட் வகை டைனோசரினது எனக் கூறப்படுகின்றது.இவ் பாதங்கள் சுண்ணாம்புக்கலில் படிந்துள்ளதால் இவ்வளவு தொழிவாக காணப்படுகின்றதாகவும். இவ் சுண்ணாம்புக்கற்கள் 150 மில்லியன் ஆண்டுகால காபன் னாலக்கணிப்பை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி மாதேவி உங்கள் கருத்துக்கு.
பதிலளிநீக்குஇவ்வாறான பதிவுகளில் நான் தவற விட்ட பதிவுகள் இருப்பின் தரவும்.