வெள்ளி, 2 அக்டோபர், 2009

தமிழ் நாட்டில் டைனோசர்.








டைனோசர் முட்டைகள் காணப்பட்ட கூடு போன்ற பகுதி




தமிழ் நாட்டில் டைனோசர் பண்டைய தமிழ் நாகரீககும் வெளிவருமா?
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றி வாழ்ந்த மூத்த குடி தமிழ் குடி.இக் குடி வாழும் இடத்தில் டைனோசரும் வாழ்ந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.தமிழ் நாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள டைனோசர்களின் முட்டைகள் எச்சங்கள் இதற்கு சான்றாகியுள்ளன.




டைனோசரின் முட்டைகள்.




65 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது எனக் கருதப்படும் டைனோசர் முட்டைகள் மற்றும் எச்சங்கள் தென் தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியலாளர் குழு ஒன்று நடாத்திய அகழ்வு சோதனையில் டெக்கான் பீடபூமியில் இருந்த எரிமலை ஒன்றின் படுக்கைகளில் ஆற்று ஓட்டம் ஒன்றுக்கு அண்மையாக இவ் டைனோசர் முட்டைகள் மற்றும் அவற்றின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


டைனோசர் முட்டைகள் மற்றும் அதன் பாகங்கள்


முன்னர் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இறுதி ஆராய்ச்சிகள் இந்தியாவில் நிகழ்ந்த பாரிய எரிமலை வெடிப்பு ஒன்றுதான் யூராசிக் காலத்தில் நிகழ்ந்த பாரிய உயிரின அழிவுக்கு முக்கியமாக டைனேசர் அழிவுக்கு காரணமாகியது என்று கூறப்படுகின்றது.இவ் டைனோசர் முட்டைகள் மற்றும் அதன் எச்சங்கள் பல சந்தேகத்துக்கு விடை தரும் என நம்பப் படுகின்றது.கண்டெடுக்கப்பட்ட முட்டைகள் 13 -20 சென்ரி மீ்ற்றர் விட்டம் கொண்டிருந்தன என்றும் மணல் மேடு போன்ற பெரிய 1.2 மீற்றர் விட்டம் கொண்ட கூடு ஒன்றில் காணப்பட்டதாகவும் இவ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட தமிழ் பேராசிரியர் இராம்குமார் தெரிவித்துள்ளார்.இப் பகுதியில் வேறு பல சுவடுகள் மற்றும் தொல் பொருட்கள் காணப்படலாம் எனத் தெரிவிக்கும் ஆராய்ச்சி புவியலாளர்கள் இப்பகுதியில் மேலும் ஆராய்ச்சிகளை தொடரவுள்ளனர்.
டைனோசர் எச்சங்கள்
இது மட்டுமன்றி ஆழமாகச் செல்லும் தொல்லியல் ஆய்வுகள் தமிழர் வாழ்க்கைகள் பற்றியும். அவர்களின் கடலோடு திறமையால் பூமியில் பல இடங்களில் கால் பதித்து பற்றியும் கூறினால் பல இடத்தில் வந்தேறு குடி என்று அடிவாங்கும் அவன் சற்றேனும் நிமிர்வான்.இது போன்று இன்று தமிழ்ர் வந்தேறு குடி என்று அடிவாங்கும் இடங்களிலும் இவ்வாறு தொல்பொருள் ஆய்வுகள் சுயாதீனமாக செய்யப்படவேண்டும் வெகுவிரைவில் இது நடாத்தப்படவேண்டும் இல்லை திரிப்புகள் அழிப்புகள் திணிப்புக்கள் நடந்து இருப்பதும் காணாமல் போய்விடும்

படங்கள் றொய்ரர்

4 கருத்துகள்:

  1. யோவ் டினோசாருக்கும் தமிழனுக்கும் என்ன தொடர்பு

    பதிலளிநீக்கு
  2. என் அறிவுக்கு, உலகில் முதலில் மனித உயிரினம் தோன்றிய இடம் தமிழகம். தமிழனே ஆதி பெற்றோர். என பல காலமாக நம்புகிறேன். டாக்டர் ஸ்பென்செர் வால்ஸ் இதைப்பற்றி எழுதுஉள்ளார்

    பதிலளிநீக்கு
  3. யெய்சங்கர்.
    தமிழனின் வழி என்று வந்தவர் பலர் ஆனால் தமிழனுக்கு தந்தை என்று சொல்ல எவரும் இல்லை.
    தமிழனுக்கு டைனோசருக்கும் தொடர்பில்லை அன்பரே. வாழ்ந்த இடத்துக்கும் அதை சுவடாகத் தோண்டியெடுத்தவர்களுக்கும் தொடர்புண்டு என்பது தான் நான் சொல்ல வந்தது.

    பதிலளிநீக்கு
  4. தமிழ்நாட்டில்தான் அதிகாரத்தில் பல பணம் திண்ணும் டைனசோர்களுக்கு இருக்கிறதே. இனியும் டைனோசரா...??

    அதுல ஆம்ப்லெட் போட முடியுமா கேட்டு சொல்வீங்களா சார்???

    பதிலளிநீக்கு