திங்கள், 28 செப்டம்பர், 2009
850 பேர் புதிதாக இணைகின்றனர்.
அவர்களில் ஒரு சிலர் இவர்கள்
உலகின் உயிரினக் கூட்டத்தில் இன்னும் 850 பேர் புதிதாக இணையவுள்ளனர்.இவர்கள் அனைவரும் முள்ளந்தண்டிலிகள்.
அவுஸ்ரேலியாவில் உள்ள சில மறைவிடங்களில் இவர்கள் இவ்வளவு காலமும் கண்ணில் படாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.நிலத்துக்கு கீழும் நீருக்கடியிலும் இருள் குகைகயிலும் இவர்க்ள் மறைந்து இருந்ததாக தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் மோசமான சூழல் நிபந்தனைகளில் இவர்கள் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ் உயிரிகளில் பூச்சிகள் சிறிய நண்டு வகைகள் சிலந்திகள் மற்றும் புழுக்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் நீர் கீழ் வாழும் அங்கிகள் stygofauna என்னும் பெயராலும் குகைவாழ் அங்கிகள் மற்றும் நுண்துளை வாழ் அங்கிகள் troglofauna என்னும் பெயராலும் அழைக்கப்படுகின்றது.
இவ் உயிரிகள் ஏன் அவ்வாறு நிலத்தின் கீழ் மற்றும் நீரின் கீழ் குகைகளுக்குள் வாழுகின்றத எனும் கேள்வி்க்கு பதில் அழிக்கையில் விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட அவுஸ்ரேலியாவின் பகுதிகள் 15 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் மகவும் ஈரலிப்பான பகுதியாக இருந்துள்ளது எனவும் அச்சூழலுக்கு இயைபாக்கம் கொண்ட அங்கிகள் பல காலப்போக்கிலான வறட்சி நிலை கருதி இவ்வாறு குகை வாழ்க்கை மற்றும் நீர் நிலக் கீழ் வாழ்க்கைக்கு சென்றிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.அதாவது அவ் அங்கிகளுக்கு இவ் சூழல்கள் பொருத்தமானதாக மாறியிருக்கலாம் அல்லது அவை புதிய சூழலுக்கு இயைபாக்கப்பட்டு இருக்கலாம்.
உலகில் கண்டறியக்கட்ட ஒரு சில மில்லியன் உயிரிகள் தவிர முள்ளந்தண்டிலிகள் இன்னும் பல மில்லியன் அடையாளப்படுத்தப்படாது உள்ளது என்னும் கூற்றை வலுப்படுத்தும் இவ் கண்டறிவு வரும் காலத்திவான ஆராய்ச்சிகளுக்கு அடிக்கல்லை இட்டுள்ளது
சனி, 26 செப்டம்பர், 2009
தூக்கமின்மை மனநோய்க்கு அறிகுறியாம்? அமைலோயிட் பீற்றாவின் அதிரடி
தூக்கமின்றி தவிப்பவர்களே உடன் மருத்துவரை நாடுங்கள்.தூக்கமின்றை Alzheimer's எனப்படும் ஒருவகை மனநோய்க்கு வழிவகுக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். பொதுவாக மனிதன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படும் எலியை ஆராய்ந்த விடத்து இதை கண்டறிந்துள்ளார்கள்.எலியை தூங்கவிடாது வைத்திருந்த போது சில புரதங்களில் செறிவு மூழையில் மாற்றங்களை காண்பித்ததாகவும் இது மனனநோய்க்கான அறிகுறி என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அமைலோயிட் பீற்றா என்னும் புரதமே இதற்கு முக்கிய காரணம் என்றும்.இவற்றின் செறிவு வேறுபாடுகள் முழையை செயலற்றதாக்கிவிடும் தன்மை கொண்டுள்ளதாக உள்ளதா தெரிவித்துள்ளார்கள்.தற்போதைய நிலையில் ஒறெக்ஸின் எனப்படும் மருந்து இதற்கு மாற்றீடாக உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.அதாவது பீற்றா அமைலோயிட் செறிவு மூழையில் அதிகமாக உள்ளபோது தூக்கமின்னை ஏற்படும் நீண்ட நேரம் விழித்து இருக்கலாம் அது குறையும்போது மீண்டும் தூக்கம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.எனவெ உழைப்பு வேகமான வாழ்க்கை என சுற்றி அலையும் மானிடம் தாம் துயில் கொள்ளும் நேரத்தை குறைத்து கொள்கின்றார்கள் அதை சொல்லி தம்மை தாம் புகழிந்தும் கொள்கின்றார்கள் ஆனால் அவர்களுக்கு அமைலோயிட் பீற்றா என்னும் ருபத்தில் வைத்தது இயற்கை வேட்டு
வெள்ளி, 25 செப்டம்பர், 2009
போல்டுக்கு சாவலாகும் கே
சர்வதேச தடகளப்போட்டிகளில் நடந்த சம்பவங்கள் அண்மைய நாட்கள் அடுத்தடுத்த விறுவிறுப்பான செய்திகளை தந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக ஓட்டவீரர்களின் அடுத்தடுத்த அடைவுகள் பற்றிய செய்திகள் அடுத்து வரும் சர்வதேச சம்பியன் போட்டிகளின் மீது பெருமளவு ஆவலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உசையின் பெல்ட் மற்றும் கே ஆகியோரிடையே நடைபெறப்போகும் போட்டியை கண்டுகளிக்க தடகள ஆர்வலர்கள் ஆர்வமாக இருப்பது தெழிவாகியுள்ளது.அத்துடன் முன்னால் ஒலிம்பிக் மற்றுமு; ஏனைய விளையாட்டு வீரர்களும் இவ்விருவரும் ஒருவரோடு ஒருவர் மோதப்போகும் அந்த மைதானத்தையும் அந்த தருணத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். பலர் பலவிதமான கருத்துகளையும் கூறி வருகின்றார்கள்இவ் நிiலில் கிறிஸ்ரல் பலஸில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இவ்வருடத்துக்கான வேகமான 100 மீற்றர் ஓட்டப் பெறுதியை பெற்றுள்ளார் கே இவர் அவ் போட்டியில் 100 மீற்றரை 9.77 செக்கன்களில் ஓடி முடித்ததுடன் 200 மீற்றரை 19.58 செக்கன்களில் ஓடிமுடிந்துள்ளார். வரும் மாதம் பேர்லினில் நடைபெறவுள்ள போட்டியில் போல்ட் மற்றுமு; கே நேருக்கு நேர் மோத உள்ள நிலையில் கேயின் இவ் திடீர் வேகம் அவர் மீது இருந்து வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இவர்கள் இருவரும் மோதப்போகும் இப் போட்டி பற்றி கருத்து வெளியிட்டுள்ள முன்னால் ஒலிம்பிக் போட்டியாளரான ஸ்ரீவ் அவர்கள் இருவரும் மிகவும் வேறுபட்ட குணாதியங்கள் கொண்டவர்கள் போலட் மற்றும் கேயின் வெற்றிகள் பற்றிக் கூறுமிடத்து காலனிலை பாரியளவில் செல்வாக்கு செலுத்தும் எனத் தெரிவித்துள்ளதுடன் அசாபா பவலும் அண்மைக்காலங்களில் பிரகாசிக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவரும் இவ் ஓட்டப்பந்தயங்களில் சாதிக்கும் வல்லமை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.எதுவெனிலும் இவ் மூவரிடைNயு நடக்கப்போகும் அந்த அர்த்தம் உள்ள போட்டி ஒன்றை காணும் வரை பெறுத்து பார்க்க வேண்டும் எனவும்; தெரிவித்துள்ள நிலையில் பிறிதொர முன்னாள் ஒலிம்பிக் வீரரான பிரித்தானியாவின் கம்பெல் இவ் மூவரும் கலந்து கௌ;ளவுள்ள போட்டி பற்றி கருத்து வெளியிடுகையில் அண்மைக்காலமாக ஒலிம்பிக் சம்பியன் போல்ட் உலகம் முழுவதும் பல போட்டிகளில் விளையாடி உள்ளார் ஆனால் அவர் உலகச் சம்பியன் என்னும் அந்தஸ்துடன் கண்காட்சிக்கான அவற்றில் கலந்து கொண்டிருந்ததால் அழுத்தங்கள் எதுவும் அற்ற நிலையில் அவர் போட்டிகளில் கலந்து வந்தார் பேலினில் நடக்க உள்ள உலகச் சம்பியன்ஸ் போட்டி அவருக்கு மேலதிகமான அழுத்தங்களை ஏற்படுத்தும் ஆரம்பத்தில் போல்ட் தவறினால் அதாவது போட்டி அரம்பத்தில் போலட் தாமதித்தால் பின்னர் எவரையும் திருப்பி முந்தி விடமுடியாது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் போல்டுக்கு முக்கிய போட்டியாளராக டைசன் கே உருவெடுத்துள்ளார். ஓலிம்பிக்கில் கேயே வென்றிருக்க வேண்டும் அவரது துரதிஸ்டம் காயம் காரணமாக அவர் அச் சந்தர்ப்பத்தில் அவதிப்பட்டு வந்தார். எனவும் கூறியுள்ளார் அத்துடன் கே அதிகம் பேசாதவர் ஆனால் போலட் தனது ஆவெசங்களை போட்டி தொடங்கும் தொடக்க கோட்டிலேNயு கொட்டி தீர்க்கும் தன்மை மிக்கவர் எவ்வாறு இவ் இருவரும் பேலின் போட்டி ஆரும்பத்தில் நடந்து கொள்ள போகின்றார்கள் என்பது தெரிந்து கொள்ள ஆவலாக உள்ள விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.ஆத்துடன் போல்ட் 100 மீற்றர் போட்டியில் 9.7 செக்கன்கள் என்னும் நேரக்கணிப்பில் ஓடி கேயை முந்தலாம் என கருத்துரைத்துள்ள அவர் கே 200 மீற்றரில் முதலிடம் பெறுவார் என்றும் கூறியுள்ளார். எது எவ்வாறாகிலும் குறுந்தூர ஓட்ட உலகின் அண்மைகால நாயகனும் முன்னைய நாயகனும் மிக நெருக்கமான நேரக்கணிப்புடன் ஒரே போட்டியில் மோதிக் கொள்வது தடகள இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிகளை கொடுக்கும் என்பது பலரது கருத்து
அவுஸ்ரேலியப் பழங்குடியினர் தமிழ் வழியா?
ஆபோரினஸ் பழங்குடி சிறுவர்கள்.
அவுஸ்ரேலியா பழங்குடி ஆபோரினஸ் மக்களுக்கும் தென் ஆசிய மக்களுக்கும் ஆதாவது தமிழ் மக்களுக்கும் தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் தென்ஆசியாவில் இருந்து
சென்றவர்கள் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாப் பகுதியில் உள்ளவர்களின் பிறப்புரிமை அமைப்பு மற்றம் ஆபோரியினஸ் அவுஸ்ரேலியர்களின் பிறப்புரிமை அமைப்பு இரண்டும் ஒத்துப்போவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் தென்ஆசியாவில் இருந்து
சென்றவர்கள் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாப் பகுதியில் உள்ளவர்களின் பிறப்புரிமை அமைப்பு மற்றம் ஆபோரியினஸ் அவுஸ்ரேலியர்களின் பிறப்புரிமை அமைப்பு இரண்டும் ஒத்துப்போவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஆபோரினஸ் ஆண்
இந்தியா ஆராய்ச்சியாளர் ராகவேந்திரா ராஜோ மற்றும்
அவர் குழுவினர் 966 பேரிடம் அதாவது 966 இழைமணியின் பிறப்புரிமை பொருளின் டீ.என்.ஏ ஜுனோம்களை வரைபடமாக்கிய விடத்து அவை மூலம் இத் தகவலை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இழைமணி பெண்களிடம் இருந்து அதாவது தாயிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் முழுமையான பிறப்புரிமை பொருளை கொண்டுள்ளதால் அதை சிறப்பாக ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவது பொதுவானது.
அவுஸ்ரேலியா ஆபோரியினஸ் மற்றும் தென்னிந்திய மக்கிளிடையே ஒரே வகையான விகாரங்கள் காணப்பட்டதாவும் அதன் மூலம் தெற்கு வழி எனப்படும் தென்னாசியாவின் பாதைகள் ஊடாக இவர்கள் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வருடக் காலப்பகுதயில் வேட்டையாளர்களாகவோ அன்றி பொருட் சேகரிப்பாளர்களாகவோ அங்கு சென்று குடியுறி இருக்கலாம் என்று மேலும் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
எனவே தமிழன் குறிப்பாக திராவிடர் பல இடங்களின் குடியேறி உள்ளார்கள்.
காலப்பொக்கில் எரிப்பு ஆழிப்பு திரிப்பு என அவர்கள் வரலாறுகள் திரிக்கப்பட்டுள்ளன.
இதனால் இன்று பாதிக்கப்பட்ட சமூகமாக அனுதாபம் தேடி அலைகின்றார்கள்.
ஆண்டவர்கள் முன்னையவர்கள் வி்ட்ட தவறினால் இன்று மண்கேட்டு நிற்கவேண்டிய நிலை
வியாழன், 24 செப்டம்பர், 2009
சந்திராயனுக்கு ஒரு குரல்.
சுந்திராயனே நீ செய்தது சரியா.
பல ஆயிரம் மைல் அப்பால் உள்ள அம்புலியில் நீ நீர் கண்டாய்.
உன்னை ஏவுகையில் நீ இதை அறிந்தாயோ தெரியாது.
ஸ்ரீகரிக் கோட்hவில் இருந்து வெறும் 1000 மைல் தான் இருக்குமையா
நந்திக் கடல் என்னும் ஒரு இடம்.
அதில் நிறமற்ற தண்ணீர் நிறம் கொண்டது குருதியின் மணம் கொண்டது
சுந்திரனில் நீ கண்வைத்தபோது இங்கும் அங்குள்ள விண்கள் முட்டிய கிடங்குகள் போல் பல கிடங்குகள் தினமும்.அதற்குள்ளேயே உயிர் தப்ப ஒளிந்து உயிரிழந்து வீழ்ந்த பலர் திருவுடல்கள்.
மூடிவிட்டுத் தான் வந்தோம் இன்னும் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் உண்மைகள் பலவற்றில் அதுவும் சில.
அது உனக்கு தெரியவில்லையா.
உன் திருசிய மானியில் கண்ணுக்கு புலப்படாப் பொருட்கள் தான் தெரியமா?.வெறும் தூசும் மாசும் தான் தெரியுமா?
அது சரி மாசாகிப் போன பூமியில் மானிடம் மனிதரில் யாருக்கு புரியும். நீ இயந்திரம் தானோ.
உன்னால் முடிந்தால்
தேடிப்பார் ஏதாவது தெரியும் எனச் சொல்லமுன் நீ செயலிழந்து போனாய்.
ஏன் சில வேளை நீயும் ஏதாவது காணததைக் கண்டாயா
முள்ளிவாய்க்கால் பக்கம் போனாயா
சுந்திரனில் நீர் தோண்டிய உன்னை முள்ளிவாய்க்காலின் சிவப்பாறு முடக்கிவிட்டிருக்கலாம்.இல்லை உன்னை முடுக்கி விட்டவர்கள் முடக்கி விட்டிருக்கலாம்
ஏம்மை பெறுத்தவரையில் நீ என்ன சாதனை செய்தாலம் தோற்றவன் தான் அண்மை பார்வை உனக்கு இல்லை.
ஐ.நாவின் செய்மதி சொன்னது அமெரிக்காவின் செய்மதியும் சொன்னது. நீயும் சொல்லிப்பார் அதை இட்டு தன்னும் நாம் சந்தோசப்பட்டிருப்போம்.
ஏனொனில் நீ கொண்ட நாடு பிராந்தியத்தை கண்கானிப்பதும். பிராந்திய நலனுக்காய் பிரம்மை கொள்வதும் நடப்பதால் இந்த நப்பாசை.
சரி நீ சொன்னதை செய்தாய் ஆனால்
சுற்றத்தை பார்க்காது நீ சந்திரனை சுற்றி என்ன பயன்.
இல்லை இந்த அடைபட்ட வாழ்க்கை விட்ட அங்கு எம்மை குடியேற்றி வைப்பாயா.
இல்லை எனின் நீயும் தோற்றவன் தான்.
9 கிலோகிராமில் புதிய கும்பகர்ணன்
வந்துதித்தான் தற்கால கும்பகர்ணன்.
இந்தோனேசியாவில் அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.அதுதாள் 19.2 இறாத்தல் அதாவது 8.7 கிலோகிராமில் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஒரு தாய்.
இது வரை இந்தோனேசியாவில் பிறந்த குழந்தைகளில் இது மிகப் பெரியது எனினும் உலக அளவில் இது பெரிதா என்னும் கருத்துக்கள் எதுவும் கூறப்படவில்லை.
ஆனால் இதன் நிறை போன்று உயரமும் 62 சென்ரி மீற்றர்.சாதாரணமான ஒரு குழந்தையின் நிறை 6 இறாத்தல் அதாவது 2800 கிராம் முதல் 9 இறாத்தல் அதாவது 4299 கிராம் வரை இருக்கும் இதேபோல் உயரம் 19 தொடக்கும் 21 அங்குலம் அதாவது 58 தொடக்கும் 51 சென்ரி மீற்றரும் ஆகும். எனவே ஒப்பீட்டளவில் இவன் கும்பகர்ணன் தான் அத்துடன் இவ் குழந்தை எப்போதும் பசியில் உணவு கேட்டு அழுவதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.கும்பகர்ணன் 6 மாதம் தான் அழுவான்.
ஆனால் இவ் அபரிமிதமான வழர்ச்சியுள்ள குழந்தை பிறக்க காரணமானது தாயின் கவலையீனம் என்றும் காரணம் கூறுகின்றனர்.
41 வயதான அந்த தாய் நீரிழிவு நோயாளி என்றும் இவர் குழந்தை கருவுற்று இருந்தபோது அதிக குழுக்கோசுடன் நீரிழிவுத் தாக்கத்துக்குள்ளாகி இருந்ததாகவும் இதனால் அதிக குருதிக் குழுக்கோஸை பெற்றுக் கொண்ட கருப்பையில் இருந்த குழந்தை அபரிமிதமான வழர்ச்சியை காட்டிநிற்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே பெற்றோரே நீங்கள் விடும் பல கவனக்குறைவுகள் வரும் காலத்தில் வாழவேண்டிய அப்பாவிகள் பலரை பாதிக்கின்றது இன்று அகதி முகாமில் வாழும் பிறக்கும் பல குழந்தைகள் எந்த பாவம் செய்தன அவை செய்தது ஒன்றுதான் தமிழ் தாயின் கருவில் உயிர் கொண்டது.
பிழை செய்தது யார்நாம் வாழும் இடம் தெரியாது எமது வாழ்க்கை எங்கபோகும் என எதிர் காலத்தை நினைக்காது சாதாரண வாழ்க்கை வாழ நினைத்தீர் இனி உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையை என்ன என்று தொடர்வார்கள் முட் கம்பிக்குள்ளா இல்லை அகதிச் சந்ததி ஆகவா?.
புதன், 23 செப்டம்பர், 2009
அம்புலி மாமாவில் தண்ணீர் இருக்கிதாம்..
விஞ்ஞானம் சாதித்துக் கொண்டும் புதியனவற்றைக் கண்டு கொண்டும் தான் இருக்கும் பழையன விஞ்ஞானத்தில் பழையன தான் என மீண்டும் நிரூபித்துள்ளது.நீர் அற்ற சடத் திணிவு எனக் கூறப்பட்டு வந்த சந்திரனில் நீரைக் கண்டுவிட்டனர் ஆராய்ச்சியாளர்கள்.
அண்மையில் சந்திரனை
சந்திரனின் தெற்கு முனை
ஆராயவென 2020இல் தரையிறங்கும் நோக்குடன் அமெரிக்கா அனுப்பிய வெவ்வேறு செய்கோள்கள் மூன்று மற்றும் இந்தியானிவின் சந்திராயன் 1 இறுதியாக மேற்கொண்ட ஆய்வுகளின் பின்னர் திடுக்கிடும் யாரும் எதிர்பார்த்திராத முடிவுகளை வெளியிட்டுள்ளது நாசா.
சந்திரனின் வெவ்வேறு உயர தோற்றம்
சந்திரனில் தணிணீர் உண்டாம்.
கேட்கவே மனதில் ஒரு கிளர்ச்சி.உண்மையில் ஆனால் இது வரை அது பற்றிய புகைப்பட ஆதாரங்கள் எதையும் நாசா வெளியிடவில்லை ஆனால் பாரிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சந்திரனி
கேட்கவே மனதில் ஒரு கிளர்ச்சி.உண்மையில் ஆனால் இது வரை அது பற்றிய புகைப்பட ஆதாரங்கள் எதையும் நாசா வெளியிடவில்லை ஆனால் பாரிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சந்திரனி
ன் முனைவுப்பகுதிக
ளில் இவ் நீர் பெருமளவில் காணப்படுவதாகவும் மில்லியன் கணக்கான கலன்களில் நிரை பெற்றுக் கொள்ளும் அளவில் அங்கு நீர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் அண்மையல் செயலிழந்த சந்திராயன் செய்கோள் தகவல்கள் அடிப்படையின் திருசியமானித் தகவல் திரட்டுக்கள் ஆராயப்பட்டு இவ் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது வரைக்கும் தாம் தடாகங்கள் கடல் சமுத்திரங்கள் மற்றும் பற்றி பேசவில்லை நீர் மூலக்கூறுகளின் பிரசன்னம் அதாவது அவை வேறு மூலகங்களுடன் இணைந்து சேர்வைகளாகவொ அன்றி தூசுகளுடன் இணைந்த நிலையிலொ ஐதரொட்சைட்டுக்களாகவோ காணப்படுவதையே பேசுகின்றோம் எனக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
இது வரைக்கும் தாம் தடாகங்கள் கடல் சமுத்திரங்கள் மற்றும் பற்றி பேசவில்லை நீர் மூலக்கூறுகளின் பிரசன்னம் அதாவது அவை வேறு மூலகங்களுடன் இணைந்து சேர்வைகளாகவொ அன்றி தூசுகளுடன் இணைந்த நிலையிலொ ஐதரொட்சைட்டுக்களாகவோ காணப்படுவதையே பேசுகின்றோம் எனக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
சந்திரனின் வெவ்வேறு வெப்ப நிலைகள் இரவு பகலில்
எனவே இடத்தை கண்டால் மடத்தை கட்டு என்னும் முது மொழிக்கு அமைய அமெரிக்கர்கள் வெகு விரைவில் சந்திரன் நோக்கிய தமது பார்வையை இன்னும் அதிகப்படுத்துவார்கள் நீருக்கல்ல அங்கு கிடைத்தற்கரிய வேறு கனிமங்கள் உண்டா எனப் பார்க்க.அவை அவை கிடைக்கும் போது சந்திரனில் கடை வைப்பார்கள் ஆனால் கதையை வெளியில் விடமாட்டார்கள்
செவ்வாய், 22 செப்டம்பர், 2009
திங்கள், 21 செப்டம்பர், 2009
சூரிய அலைகளால் பூமிக்கு ஆபத்து.
சூரிய அலைகளால் பூமிக்கு ஆபத்து.
சூரியன் வெளியடும் வெப்ப மற்றும் காந்த அலைகளால் பூமி தாக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து்ளனர்.
சூரியன் குறிப்பட்ட காலத்துக்கு ஒரு தடைவை உச்ச நிலை மற்றும் அதை தொடர்ந்தான மந்த நிலைக்குச் செல்வதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இதன் காரணமாக உருவாகும் காந்த மற்றும் வெப்ப கதிர் வீச்சுக்களால் தாக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் உருவான சில சூரியப் பொட்டுக்களை ஆராய்ந்த விடத்து இதன் நிகழ்வுகள் பற்றி கண்டறியப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சூரிய உச்சசெயற்பாட்டு நிகழ்வு சூரிய உச்சம் என்றும் அதை தொடர்ந்து வரும் மந்த நிலைமை சூரிய இழிநிலை என்றும் அழைக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர்கள் உச்ச காலத்தில் பெரும் எண்ணிக்கையான சூரியக் கதிர்ப்புகள் மற்றும் காந்த கதிர்ப்புக்களை அண்டத்தில் வெளிவிடப் படுவதாகவும் கடந்த 1996 மற்றும் 2008 காலப்பகுதியில் இதன் சில அவதானங்கள் கிடைக்கப்பட்டுள்ளபோதும் அதன் தாக்கங்கள் பரிதாக இருக்கவில்லை ஆனால் வரும் காலங்களில் இவ்வாறு சூரிய உச்ச மற்றும் இழிநிலைக்காலங்களில் ஆன தாக்கங்கள் பாரிய அழிவுகளை ஏற்படுத்தலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
11 வருடங்கள் கொண்ட ஒரு சூரிய வட்டத்தில் வரும் உச்ச மற்றும் இழி நிலைகளுக்கிடையிலான வேறுபட்ட கதிர்ப்புகள் மற்றும் பூமியில் இடமாற்றங்கள் இத் தாக்கத்தில் பாரிய பங்கு வகிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சூரிய கதிர்ப்புக்கள் மற்றும் ஏற்றங்கொண்ட துணிக்கைகளால் பூமியில் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் செயலிழக்கும் ஆபாயம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சேய்மதிகள் மற்றும் தகவல் தொடர்பு மின்காந்த அலை செயலிகள் பல சூரிய கதிர்ப்புக்களால் ஏற்றங்களால் பாதிக்கப்படும் இதனாலேயு இவ் செயலிழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
சனி, 19 செப்டம்பர், 2009
பூச்சி விமானம் இனி வானில் வருமாம்.
பூச்சியை பறக்க விட்டு அதன் பறப்பு திசையில் புகை செலுத்தியபோது தோன்றிய வாயு இயக்கவியல் உருவம்.
பூச்சிகள் எவ்வாறு பறப்பை மேற்கொள்ளகின்றன அதாவது பறவைகளை விட பூச்சிகள் மிகவேகமாக பறப்பதை நாங்கள் கண்டுள்ளோம்.
நாம் அதிகம் அதை பற்றி சிந்தித்ததில்லை.
ஆனால் மேற்குலகம் அது பற்றி கடுமையாக சிந்தித்து நேரத்தை செலவிட்டது.
அதன் விழைவு பூச்சிகள் எவ்வாறு பறப்பை மேற்கொள்கின்றன என்பதற்கான வாயு இயக்கவியல் சான்றுகளை சேகரித்துள்ன சவுத்வேல் பல்கலைக்கழகமும் ஒக்ஸ்போட் பல்கலக்கழகககும்.
தத்து வெட்டியின் பறப்புக்கான வாயு இயக்கவியல் நிலைதன்மை என்ன என்பதை கண்டறிந்துள்ள இவ் இரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் உலகின் மிகவும் அனுகூலுமான வினைத்திறன் மிக்க பறப்பு பொறிமுறையின் இரகசியங்களை தாம் கண்டறிந்துள்ள மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
இது பூச்சிவிமானங்கள் என தற்போது அழைக்கப்படுகின்றது
இவ் பூச்சியன் பறப்பு பொறிமுறையை மையமாக கொண்ட விமானங்கள் அல்லது றோபோ விமானங்களை உருவாக்கிட விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.
அதாவது வேமாக நகர்வு கொண்ட இவை மீ்ட்பு பணிகள் இராணுவத் தேவைகள் தேடுதல்கள் மாசடைந்த சூழல் ஆராய்ச்சிகள் போன்றவற்றில் பயன்படும் என்னும் நோக்கில் இவ் ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே பூச்சி வேகத்தில் நாமும் பறப்பதற்கு தயாராக வேண்டும்.
ஆனால் இதை செய்யும் நாடுகள் மக்களுக்கு அதை பயன்படுத்த முன்னர் தமது படைக்கு பயன்படுத்தி விடுவார்கள் என்பதுதான் உண்மை.
வெள்ளி, 18 செப்டம்பர், 2009
பூமி வெப்பம் அடையாது கண்ணாடியால் தடுப்பு புதிய முயற்சி
புவி வெப்பமாதல் பற்றி உலகமே மிரண்டு போய் உள்ளது இதில் இருந்து மாற்றுவழிகளை தேடித் தப்பிக் கொள்ள பாரிய தேடல்கள் நடந்த வண்ணம் உள்ளன.
அதாவது புவி வெப்பமாக காரணமான பச்சை வீட்டு விளைவை எப்படியாவது தடுத்து விடவெண்டும் என்பதில் குறியாக உள்ளன.
இதில் தற்போது காபன் வெளியீட்டடை குறைத்தல் மற்றும் பச்சை இல்ல வாயுக்களை அகற்றல் என பல வழிகளிலான முயற்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.
ஆனால் அவற்றின் அடைவுகள் குறிப்பிடும் படியாக இல்லை எனவே மாற்று வழி ஒன்றில் பிராயச்சித்தம் கண்டு விடத் துடிக்கின்ற மேற்குலகிற்கு தற்போது கிடைத்துள்ள துரும்புச் சீட்டு
வானோடியொருவாரான றோயர் ஏஞ்சலில் அறிவுரைகள். அதை கேட்டால் அலறிப்போய் விடுவீர்கள் ஆனால் அதை பரீட்சிக்க தயாராகின்றது அமெரிக்கா.
அதாவது பரந்த வானவெளியில் பல மில்லியன் கண்ணாடிகளை மிதக்கவிவட்டு சூரியனில் இருந்து வரும் வெப்பக் கதிர்ப்புக்களை திருப்பிவிடுவது அவரின் அறிவுறையாகும் இது சாத்தியமா பொருறுத்திருந்து பார்ப்போம்.ஆனால் இதற்காக செலவிடப்படவிருக்கும் தொகை என்ன தெரியுமா?350 திரில்லியன் மெரிக்க டொலர்.
அதாவது பாரிய பீரங்கிகள் மூலம் வானத்துக்கு கண்ணாடிகளை ஏவி அதாவது 1 மில்லியன் மைல் உயரத்துக்கு அவற்றினை ஏவி அங்கு தங்க வைத்து இதைச் சாதிக்கலாம் என திட்டங்கள் வகுக்கின்றனர் அமெரிக்கர்கள்.இது சாத்தியமா???????????
வியாழன், 17 செப்டம்பர், 2009
மரம் தரும் இனி மின்சாரம்
ஐயா நானும் தயார் உங்களுக்கு மின்சாரம் தர வெள்ளைகாரன் மரத்தை விட நான் பெரியவன் சரியா
நான் தான் முதல் மின்சாரம் தந்தவன் "மாபிள்"
மரம் வளர்தால் கறன்ற் எடுக்கலாம்.
மரம் வளர்த்தால் இனி கறன் ( மின்சாரம் எடுக்கலாம் எனக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மரம் மின்னை கடத்துவதாக கூறியிருந்நது ஆனால் தற்போது ஒரு படி மேலே போய் மரம் தன்னகத்தே எப்போதும் 200 மில்லி வோல்ற் மின்னை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.தாவர ஒளித் தொகுப்பு பின்னர் அவ் ஒளித் தொகுப்பில் உருவான உணவு சில உலோகங்களுடன் தாக்கும் போது இவ் மின்சாரம் உருவாவதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் மரத்தின் இலை மற்றும் அவை கொண்டுள்ள நீர் உள்ளடக்கங்கள் மின்சார உற்பத்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.தற்போதைய நிலையில் பாரிய இலை கொண்ட "மாபிள்" எனப்படும் மேலைத்தேய மரமே ஆராய்ச்சிக்கு உட்படுத்த பட்டுள்ளது. வரும் காலங்களில் சிறப்பு கருவிகள் மற்றும் மின் சேகரிப்பு பொறிகள் கொண்டு மின்னை மரத்தில் இருந்து சேமிக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 1.1 வோல்ற் வரையான மின்னை மரத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது. மரம் வளர்த்து சூழலை சுத்தப்படுத்த எவரும் முன் வரா விட்டாலும் இனி கறன்ற் எடுக்கவாவது யாரும் மரம் வளர்ப்பார்கள் என்று நம்புவோம் . ஏனெனில் எமக்கு நோகாமல் பயன் தந்தால் தான் பிடிக்குமே
குட்டி டைனோசர்
இவர் தான் அந்த குட்டி உருவம் உள்ள பெரிய டைனோசர் (ரைனோசர்)
இது புதிதாக கண்டெடுக்கப்பட்ட மண்டையேட்டுக்கும் முன்னைய மண்டையேட்டுக்கும் இடையிலான வேறுபாடு
இரு நகம் கொண்ட முன்னங்கால்
முழுமையான எலும்புக்கூடு
குட்டி டைனோசர் (ரைனோசர்கள்)
பூமியில் தரையில் வாழ்ந்த மிகப் பொரிய அங்கி என்னும் பொருமை கொண்டது டைனோசர். ஆனால் அதன் பிந்திய கண்டு பிடிப்பொன்று இல்லை எங்களில் சின்னஞ் சிறியவர்களும் உள்ளோம் என்பதற்கு ஆதாரத்தை முன்வைத்துள்ளது.ஏறத்தாள 125 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசரஸ் வகை ஒன்றின் வன்கூடுகள் சீனாவின் வடகிழக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளதே இவ் ஆதாரத்தை முன்வைத்துள்ளது.இது ரைனேசரஸ் ரெக்ஸ் என அழைக்கப்படுகின்றது. வெறும் 9 அடி உயரமும் முதாதை பாரிய டைனோசரின் நிறையின் 1/100 பங்கு நிறையும் கொண்டுள்ளது.ஒப்பீட்டளவில் மற்றய டைனோசர் மற்றும் ரைனோசர் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது மிகச் சிறிய உருவம் கொண்டுள்ள இது இனிவரும் கால ஆராய்ச்சிகளில் பல திருப்பங்களை ஏற்படுத்தும்.
செவ்வாய், 15 செப்டம்பர், 2009
சேற்று இராட்சத உயிரியின் பிறிதொரு பதிவு.
உலகில் டைனோசர் போன்ற இராட்சத் உயிரிகள் இன்னும் வாழ்வதாக பலர் சாட்சிகளை முன் வைக்கின்றார்கள். விஞ்ஞான உலகமும் இதை உறுதிப்படுத்த பல வழிகளில் முயன்று வருகின்றது.
இதை நம்புபவர் பலர் நம்பாது வெறும் பிரம்மை என்று கூறுபவர் பலர். ஆனால் இவை பற்றி தகவல்கள் அவ்வப்போது பூமிப்பந்தில் அதுகும் வளர்ந்து உச்சத்தில் உழன்று கொண்டுள்ள விஞ்ஞான நாடுகளில் அடிக்கடி பெரும் சர்ச்சைகளை கிழப்புவது உண்டு. அந்த வகையில் தற்போது புளோரிடாவில் உள்ள பெரும் புகழ் பெற்ற கடல் கரை ஒன்றில் அண்மையில் துப்பரவு பணியில் ஈடுபட்டவர்களின் ஒருவர் கையில் இருந்த ஒளிப்படக்கருவியில் அகப்பட்ட காட்சி ஒன்று மீண்டும் இராட்சத உயிரிகள் பற்றிய கருத்துக்களை பலம் பெறச்செய்துள்ளது.
திடீரென கடல் நீர் குறிப்பட்ட ஒரு இடத்தில் அலைகள் உருவானதாகவும் அது கடலடயில் உயிரிகள் பொருட்கள் நகரும் போது உருவாகும் அலைகள் நீர் ததும்பல் நிலைக்கு ஒப்பானதாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதை தொடர்ந்து பல நாட்களாக அப் பகுதி தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதுடன் கடல் வாழ் இராட்சத உயிரி உண்ணலாம் என நம்பப்படும் பல வகையான உணவுகள் கடலில் கொட்டப்பட்டு இதை காண பலர் காத்திருக்கின்றார்கள்.
இதற்கிடையில் அது பரிய கடல் ஆமையாக இருக்கலாம் இல்லை திமிங்கிலமாக இருக்கலாம் என கருதும் சிலர் இவ் இராட்சத உயிரி என்னும் கருத்தை முற்றாக மறுத்துள்ளனர். ஆனால் விஞ்ஞான உலகு இதை இன்னும் மறுக்கவில்லை
ஞாயிறு, 13 செப்டம்பர், 2009
பயிர் வளர்த்த பசி தீர்த்த விஞ்ஞானி காலமானார்
நோபல் பரிசு பெற்ற வேளான் விஞ்ஞானியான Norman Borlaug தனது சேவைகளை உலகம் மறக்காது விட்டு இவ் உலவை விட்டு அகன்றுள்ளார்.
கடந்த நூற்றாணடில மகத்தான சாதனைகளில் மிகத் தேவையான சாதனைகளில் ஒன்றான உணவு பற்றாக்குளையை தீர்க்க வழி தேடும் முயற்சியை தனியாளாக சாதித்தவர் இவர்.
நாள் பயிர் வளர்த்தேன் நீங்கள் நன்றே பசியாற
இவரின் கட்டை கோதுமை இன்றும் பல கோடி உயிர்களை உடலுடன் ஒட்டவைத்துக் கொண்டுள்ளது என்பது உண்மை.
1914 இல் இவ் பூமியை தொட்ட இவர் அமெரிக்காவில் மின்னேசொற்றாவில் நாட்டிய முதல் பயிர் இன்று உல் முழுக்க பரவி நிற்கின்றது.
1960 இற்கும் 1990 இற்கும் இடையில் இவரின் கண்டுபிடிப்பின் காரணத்ததால் உலக உணவு உற்பத்தி இரண்டு மடங்காகியது. அப்படி இருந்தும் உலகின் 100 கோடி பேர்வரை சரியான உணவின்றி இன்றும் காணப்படுகின்றனர்.
இதில் இருந்து இவரின் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன என்பது புரியும்.
இதனால் இவரின் இவ் கண்டுபிடிப்பின் மகத்துவம் பாராட்டி இவருக்கு 1970 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
தனது 90 வயது தாண்டியும் பசியை போக்க உழைத்த இவர் புகழ் விரும்பா மனிதர்களுள் ஒருவர்.
இவர் தனது கண்டு பிடிப்புக்களை இவ் உலகிற்கு காணிக்கை ஆக்காது விட்டிருப்பின் உலகின் இன்றைய இருப்பும் நிலையும் என்ன என்று எண்ணி பார்க்கவே இயலாததாக இருந்திருக்கும்.
அதாவது அழிவின் விழிம்பில் இருந்த உலகை காப்பாற்றிய இவரை "Man made the world a better place" உலகை நல்ல இடமாக மாற்றிய மனிதர் என செல்லமாக அழைப்பர்.
அதாவது வாழத்தகுந்த இடமாக மாற்றியவர் என அழைப்பர்.
மனிதர்கள் வாழும் போது இவ் உலகிற்கு விட்டு செல்ல எதையாவது செய்தாகவேண்டும் ஆனால் நம்மில் பலர் தாமக செய்யார் செய்பவரை பின் தொடர்வதாய் காட்டி நிற்பார் அவரிடம் இருந்து நன்மைகளை கறப்பார். பின்னர் அவர் பலம் இழக்கையில் அல்ல அவர் முயற்சியில் பின்னடைகையில் தூர விட்டு ஓடிவிடுவர் புறம் சொல்லி புண்படுத்துவார்.. அண்மைய சாட்சிகள் இதற்கு பதில்.
சனி, 12 செப்டம்பர், 2009
பெற்றோலியம் அழியாது தொடர்ந்து கிடைக்கு
இவர் தான் அந்த கண்டு பிடிப்பாளன் விளாடிமிர்
பெற்றோலியம் என்பது உலகின் தற்போதைய நிலையில் பல நாடுகளை வாழ வைப்பது மொதத்த உலகத்தையும் காத்து நிற்பது. உலகின் 61 சதவீதத்திலும் மேலான சக்தி இதில் இருந்து பெறப்படுகின்றது.
ஆனால் இது முடிந்து போகும் அபாயம் உள்ளதாக பல ஆண்டு காலம் கவலை இருந்து வந்தது. அதாவது சுவட்டு எரிபொருளான இது அதீத பயன்பாடு காரணமாக வெகுவிரைவில் இருக்கைகள் தீர்ந்து போய் முடிந்து விடும் என புலம்பி மாற்றுச் சக்திக்கு வழிதேடி அலைகின்றனர் பலர்.
கடலடி எண்ணெய் உற்பத்தி நிலையம்.
இந்த நிலையில் புதிய திடுக்கிடும் பலர் சந்தோசப்படும் ஆனால் தற்போது பெற்றோலியத்தை உற்பத்தி செய்து அதிக விலையில் விற்கும் நாடுகள் மாத்திரம் கவலைப்படும் விடையம் ஒன்றை க்ண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் இதுவரை பெற்ரோலியம் முன்னைய காலத்தில் பூமி மேற்பரப்பில் வாழ்ந்து அழிந்த உயிர் அங்கிகளின் சுவட்டு எச்சங்கள் பலகால வானிலை மாற்றங்களுடன் ஒன்றிணைந்து உருவாக்கிய கூழ் பதார்த்தமே பெற்றோலியம் என்றும் கருத்தையே பொய் என்று கூறியுள்ளார் அவர்.
சுவீடிஸ் விஞ்ஞானியான விளாடிமிர் குச்சிரோவெ இக் கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவரின் கருத்து படி பூமிப் படுக்கையில் உள்ள ஒவ்வொரு பாறையும் எரிபொருள் முதல் தான் என்றும் புவியீர்ப்பு காரணமாக ஏறத்தாள 10.5 கிலோமீற்றர் வரை சென்ற பாறைகள் கொண்ட ரெக்சாசும் நல்ல எண்ணெய் வளம் கொண்டது என்றும் அவர் ஆதாரம் காட்டியுள்ளார். பூமியில் உள்ள அத்தனை பாறைகளும் வெப்ப ஆமுக்க மாற்றங்களுக்கு உள்ளாகி பொற்றோலிய பொருட்களை அதாவது ஐதரோக் காபன்களை உருவாக்கும் தன்மை கொண்டவை எனக் கூறியுள்ளார்.
தற்போது உள்ள எரிபொருள் நிறுவனங்கள் எண்ணெய் தோண்டி எடுப்பதற்கான தொகையை உணர்த்தி காட்டி பெரும் இலாபம் சம்பாதிப்பதாகவும் உண்மையில் அவர்கள் கூறுவது போன்று எண்ணெய் தோண்டி எடுக்க அவ்வளவு தொகை தேவைப்படாது எனவும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார்.
தற்போது இவரின் ஆராய்ச்சிகள் எங்கு துளையிட்டு பூமியில் அடியில் உள்ள எரிபொருட்கழள அதிகமாக பெற்றுக் கொள்ளலாம் என்பதில் கருத்து ஊன்றியுள்ளது.
இவர் கருத்து உண்மையானால் பல நாடுகளும் உள் ஊர் அரசுகளும் பொய்கள் பல கூறி எணணெயால் மக்கள் வைற்றில் அடித்து காசை அடித்துள்ளது உண்மையாகும்.
அதாவது மக்களுக்கு புளி எண்ணெய் தடவியுள்ளது உண்மையாகும்.
வெள்ளி, 11 செப்டம்பர், 2009
மிகச் சிறிய பறக்கும் ஊர்வன
பறவையியலாளர்கள் அண்மையில் பிரேசிலின் றியே டி ஜெனாரியோவில் உள்ள அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைத்திருந்த ஒரு பறக்கும் ஊர்வனவின் வன்கூடு இது .Nemicolopterus crypticus என விஞ்ஞானப் பெயர் கொண்ட இது "ஜிங்கோ" காட்டுப்பகுதியில் வாழ்ந்துள்ளதாகவும் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இறுதியாக சீனாவில் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது pterosaurs வகுப்பின் மிகச் சிறிய பறக்கும் ஊர்வனவாகும்.
இதன் இறக்கை 250 மில்லி மீற்றர் நீளம் கொண்டது
இதன் ஆங்கில மூலம்
Palaeontologists show a model of a flying reptile named Nemicolopterus crypticus during a news conference at the National Museum in Rio de Janeiro, in this Feb. 11, 2008 file photo. The toothless flying reptile lived in gingko forests that existed some 120 million years ago in present China. With a windspan of 10 inches (250 mm), the species is one of the smallest pterosaurs known to date
உலகை மாற்றிய 11.09.2001
இன்று 11.09.2009 எட்டு வருடங்கள் கடந்து நிற்கும் ஜனநாயகத்தின் வெற்றி வருடத்தில் உள்ள ஒரு துக்க நாள்
இது தரித்திரம் பிடித்த நாளா இல்லை சரித்திரம் படைத்த நாளா?
பலருக்கு படிப்பினை தந்த நாள் சிலருக்கு விடியாமல் போவதற்காய் விடிந்தநாள்.தொடர்கதைகளாய் இருந்த பலதை முடித்திட வழி வகுத்த நாள்.
வான் அளாவ பாச்சப்பட்டஒளி கொண்டு அனுஸ்டிக்கப்பட்ட நினைவு தினம்ஆனாதைகள் அனாதைகள் ஆகவும் பொய்யர்கள் பலர் வெல்லவும் வந்த நாள்.
பயங்கரவாதிகள் எனச் சொல்லப்படுவொர் புறக்கணிக்கப்பட அதற்கான ஆதாரம் தேடாமலே அழிக்க சட்டம் இடம் கொடுத்த நாள்.
இன்றுதான் செப்ரெம்பர் 11.அமெரிக்கா மறக்காத நாள்.இன்று பலரை மறக்க முடியா துன்பத்தில் இட்டுச் சென்றநாள்.
செப்ரெம்பர் 11 2001 அன்று 11.05 அமெரிக்க நேரம் அது.எட்டு ஆண்டுகள் தாண்டியும் புஸ்ஸினால் பலர் தண்டிக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள் பாப்போம் ஒபாமா காப்பாற்றுவாரா என்று.
வியாழன், 10 செப்டம்பர், 2009
தொலைந்தவர்களை தேட கைகொடுக்கும் தொழில்நுட்பம்
கொலம்பிய முகாமில் இடம்பெயர் மக்கள்
இடப் பெயர்வுகள் குடில் போட்டுக் குடியிருக்கும் நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. அங்கு இடம்பெயர் நிலையில் வாழும் பல லட்சம் மக்களின் நிலை பற்றி தெரியாது வாழும் உறவினர்கள் பலர் உள்ளார்கள்.உயிர்வாழும் பலர் இறந்ததாகவும் இறந்த பலர் உயிர் வாழ்வதாகவும் மாற்றுக் கருத்துக்கள் உலாவும் இடமாகவும் மிகவும் பரிதாப கரமான வழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளார்கள் அவர்கள் . அவர்கள் மட்டுமல்ல நம்மில் பலருக்கும் இந் நிலைதான்.கொலம்பியாவின் தற்
இலங்கையில் இடம் பெயரும் மக்கள்
போதைய நிலையில் 43 லட்சத்துக்கு அதிகமான மக்கள் இடம் பெயர் நிலையில் சிதறி வாழ்ந்து வருகின்றார்கள்.இது அவ் அந் நாட்டு மக்கள் தொகையில் 10 சதவீதம். நம் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் இடம் பெயர்ந்துள்ள மக்கள் சதவீதம் 10 சதவீதத்திலும் அதிகம்.கொலம்பியாவின் இந்த நிலையை அறிந்து கொண்டுள்ள சர்வதேச உதவி நிறுவனங்கள் அங்கு இடம்பெயர் நிலையில் வாழும் மக்களை சிதறி வாழும் தமது உறவுகளுடன் இணைக்க புதிய தொழில் நுட்பங்களை புகுத்தவுள்ளனர்.அங்குள்ள மக்கள் தமது சமூக கட்டமைப்பு கலாச்சார விழுமியங்களை இழந்து வருவதாக தெரிவித்துள்ள தொண்டு நிறுவனங்கள் அங்கு நடைபெறும் இடம் பெயர் மக்களிடையான உரிமை மீறல்கள் மற்றும் அனைத்து செயற்பாடுகளையும் தடுக்கும் முகமாக தாம் ஒரு இணைய தளம் ஒன்றை நிறுவி அதன் மூலம் இடம் பெயர்ந்து சிதறி வாழும் மக்களை இணைக்கவும் அவர்களின் தேய்ந்து போகும் சமூக விழுமியங்கள் கட்டுக் கோப்புக்களை மீள் கட்டமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இலங்கையில் அகதி முகாமில் தமிழ் மக்கள்
போர் பாலத்தில் அகப்பட்டு படையினர் மற்றும் ஏனைய பலரால் பாதிக்கப்பட்டு தமது மொத்த சொத்துக்கள் உறவுகளை இழந்து பலர் கொலம்பியாவின் சேரிகளின் தஞ்சம் புகுந்துள்ள நிலை காணப்படுகின்றது.(தற்போதைய நிலையில் உலகின் இறுதி இடப் பெயர்வுகள் என அறியப்படுவது மூலம் இது நடைபெற்றுவிடுமா என்னும் அச்சம் தொன்னாசியாவின் தெற்கு கோடியில் உலாவுகின்றது.)எனவே இவற்றை தடுக்கு கொலம்பியாவில் பணிபுரியும் நிறுவனங்கள் உலகில் அத்தனை நாடுகளையும் கண்நோக்கவெண்டும் கைகொடுக்க வேண்டும்.குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டுள்ளார்களா இல்லையா எனத் தெரியாமல் வாழ்பவர்களை கண்டறிய உதவ வேண்டும்
புதன், 9 செப்டம்பர், 2009
பலர் பாவிக்கக் கூடியதாக வளரும் ஈருருளி
உலகில் ஆயிரம் போக்குவரத்து சாதனங்கள் வலம் வந்தாலும் இன்றும் நமது நாட்டில் மட்டுமல்ல உலகின் பலரது கவனத்தையும் தொடர்ந்து தக்க வைத்துள்ளது பலரது பயணங்களை இலகு ஆக்குவது ஈருருளிகள் தான் இதை மறுக்க முடியாது.
இது மட்டுமல்ல மாசாகும் இவ் பூமியில் தொடர்ந்து நிலைத்திருக்க கூடிய போக்குவரத்து சாதனம் என்னும் பெருமையை பெற்றுள்ளதும் முன்னாள் மலேசிய பிரதமருக்கு பெருமை தேடித் தந்ததும் இதுவே.
அதுவும் சிறுவர்கள் மத்தியில் இன்று வரை சந்ததி சந்ததியாக தொடரும் ஒரு இலட்சியம் ஈருருளி ஓட்டி பழகுவமதும் ஓடுவதுமாகும்.
ஆனால் இவ் இலட்சியம் ஆசை பல பெற்றோருக்கு வைற்றில் புளியை கரைத்து வந்தது. இதற்கு காரணம் ஒன்று பிள்ளைகள் வளர வளர புதியதாக ஈருருளி வாங்கவேண்ம் இது பொருளாதார நெருக்கடி மற்றது பிள்ளைகள் வீதியில் செல்லும் போது விபத்துகள் மற்றும் பாதிப்புக்கள்இதை தடுக்கு மிகப் பொருத்தமான உயரத்தில் தமது பிள்ளைகளுக்கு ஈருருளி வாங்குவது
தற்போது இவ் அச்சங்களில் இருந்து மீளும் பொருட்டு ஜேர்மனிய ஆராய்சியாளர்கள் ஒரு புதிய ஈருருளியை வடிவமைத்துள்ளார்கள் அதுதான மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.
பிள்ளைகள் வளர வளர அதன் உயரம் மற்றும் நீளம் என்பனவற்றை மாற்றக்கூடியதாக மூட்டுக்கள் பொருத்துக்கள் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டள்ளது Kilobike எனப் பெயரிடப்பட்டுள்ளஇது 6 முதல் 12 வரையான வயதுள்ள சிறுவர்கள் பாவிக்கக் கூடியதாக உள்ளதாக கூறப்படுகின்றது.ஏன் விரும்பினால் பெரியவர்களும் பாவிக்கலாம்
இவ் 6 முதல் 12 வயதே சிறுவர்கள் போட்டி போட்டு வளரும் வயதாகவும்.
அத்துடன் வீட்டில் வேறு வேறு பல வயதுள்ள சிறுவர்கள் இருந்தால் அனைவருக்கும் தனித் தனியாக ஈருருளி வாங்கி கொடுக்க வேண்டியது இல்லை இதில் ஒன்று இருந்தால் போதும்.அது உயரமானவருக்கு உயரமாகும் நீளமாகும் பின்னர் தேவை ஏற்படின் குள்ளமாய் குறுகும்
சிறுவர்கள் எச்சரிக்கை இனியும் உங்கள் பெற்றோர் பணம் இல்லை பாதுகாப்பில்லை என்று கதை விட விடாதீர் அண்ணணும் தம்பியும் ஒப்பந்தத்தில் நேரம் கணித்து ஓட ஒரே ஈருருளியாக இதை வாங்கி கொள்ளுங்கள்.
ஏனெனில் நாகரீகம் நகர வாழ்க்கை என்னும் வேகத்தில் இன்று பல சிறுவர்கள் ஈருருளி ஓடத்தெரியாமல் உள்ளது வேதனை.
சிந்திக்க வைக்கும் சில சித்திரங்கள்.
இவை வெறும் கேலிச் சித்திரங்களா இல்லை கேள்விகளை பிறப்பிக்கும் கேள்விச் சித்திரங்களா?
புரிய வில்லை இவற்றின் அர்த்தங்கள் ஆயிரம் புரிந்தவர் பூரிப்பர் புரியாதவர் புரிய முயல்வர் இரண்டுமே இல்லாதவர் இவ் சித்திரத்தினை சித்தரிக்கும் வகையினால் வகைப்படுவர்.
மானிடநேயமும் அதுபற்றிய அறிவுரையும் பிறருக்குதான் அது தன் வீட்டு முற்றத்துடன் நின்றிவிடவேண்டும் என்னும் உலகம் இது.
பக்கத்து வீட்டில் எரியும் அடுப்பு நெருப்பை அணைத்து விட்டு அவர்களை பசியாக்கி பயங்கர காட்டத் தீ வரவிடாமல் தடுத்தேன் என்பார் அதற்கு இறையான்மை எனக்கு உண்டு என்பார். அதற்கு பாராட்டும் பலர் சொல்வார்.
இது தான் உலகம்.
புரிய வில்லை இவற்றின் அர்த்தங்கள் ஆயிரம் புரிந்தவர் பூரிப்பர் புரியாதவர் புரிய முயல்வர் இரண்டுமே இல்லாதவர் இவ் சித்திரத்தினை சித்தரிக்கும் வகையினால் வகைப்படுவர்.
மானிடநேயமும் அதுபற்றிய அறிவுரையும் பிறருக்குதான் அது தன் வீட்டு முற்றத்துடன் நின்றிவிடவேண்டும் என்னும் உலகம் இது.
பக்கத்து வீட்டில் எரியும் அடுப்பு நெருப்பை அணைத்து விட்டு அவர்களை பசியாக்கி பயங்கர காட்டத் தீ வரவிடாமல் தடுத்தேன் என்பார் அதற்கு இறையான்மை எனக்கு உண்டு என்பார். அதற்கு பாராட்டும் பலர் சொல்வார்.
இது தான் உலகம்.
இது ஆப்கானிஸ்தானுடனும் மற்றும் லிபியாவின் கடாபியுடன் தொடர்பு கொண்டதானாலும் உலகின் பல நாடுகளுக்கு பொருந்தும்.
நன்றி ரைம்ஸ்
திங்கள், 7 செப்டம்பர், 2009
விண் வெளிக்கும் மணம் வந்தாச்சு
விண்வெளியில் புதிய மணம் உணரப்படுகின்றது.
விண்வெளி குப்பையாகின்றது அதை ஆராய்ச்சி என்னும் பேரில் குப்பை ஆக்குகின்றார்கள் என்று பலர் புலம்புகின்றார்கள். இதற்கு வலுச் சேர்க்கும் முகமாக அண்மையில் விண்வெளிக்குச் சென்ற விண்வெளிக்கு புதியவரான டிஸ்கவரி ஓடத்தின் தற்போதைய வானோடியான கெவின் பூட் வெண் வெளியில் வித்தியாசமான பிரத்தியேகமான மணம் ஒன்றை தாம் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.கடந்த வெள்ளி 4.9.2009 இதை அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தன்னால்அதை ஜுரணிக்க முடியவில்லை என்னும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதுவரை தான் இவ்வாறு ஒரு வாசனையை உணர்ந்ததில்லை என்னும் அது தான் விண்வெளி நடை பயிற்சியின் பின்னர் ஓடத்துக்கு திரும்பிய பின்னரும் தன்னுடன் கூட ஒட்டியிருந்து வாசம் வீசியதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.முன்னரும் சில விண்வெளி வீரர்கள் அண்டத்தில் துப்பாக்கி குண்டு துகளின் மணம் அல்லது ஓசோனின் மணத்தை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளர்.இது அண்டத்தில் இயற்கை மணமா இல்லை மனித செயற்பாடுகளால் அது மாசாகி வரும் அறிகுறியா என்பதை கண்டறிய தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதை செய்பவர்கள் தமது சட்டாம் பிள்ளை
விளையாட்டை காட்டுவதற்கும் நட்சத்திர போட்டியின் பாதிப்பு கருதியும் உண்மை தகவல்களை வெளியிட மாட்டார்கள் என எதிர் பார்க்கலாம்.
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)