திங்கள், 28 செப்டம்பர், 2009
850 பேர் புதிதாக இணைகின்றனர்.
அவர்களில் ஒரு சிலர் இவர்கள்
உலகின் உயிரினக் கூட்டத்தில் இன்னும் 850 பேர் புதிதாக இணையவுள்ளனர்.இவர்கள் அனைவரும் முள்ளந்தண்டிலிகள்.
அவுஸ்ரேலியாவில் உள்ள சில மறைவிடங்களில் இவர்கள் இவ்வளவு காலமும் கண்ணில் படாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.நிலத்துக்கு கீழும் நீருக்கடியிலும் இருள் குகைகயிலும் இவர்க்ள் மறைந்து இருந்ததாக தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் மோசமான சூழல் நிபந்தனைகளில் இவர்கள் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ் உயிரிகளில் பூச்சிகள் சிறிய நண்டு வகைகள் சிலந்திகள் மற்றும் புழுக்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் நீர் கீழ் வாழும் அங்கிகள் stygofauna என்னும் பெயராலும் குகைவாழ் அங்கிகள் மற்றும் நுண்துளை வாழ் அங்கிகள் troglofauna என்னும் பெயராலும் அழைக்கப்படுகின்றது.
இவ் உயிரிகள் ஏன் அவ்வாறு நிலத்தின் கீழ் மற்றும் நீரின் கீழ் குகைகளுக்குள் வாழுகின்றத எனும் கேள்வி்க்கு பதில் அழிக்கையில் விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட அவுஸ்ரேலியாவின் பகுதிகள் 15 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் மகவும் ஈரலிப்பான பகுதியாக இருந்துள்ளது எனவும் அச்சூழலுக்கு இயைபாக்கம் கொண்ட அங்கிகள் பல காலப்போக்கிலான வறட்சி நிலை கருதி இவ்வாறு குகை வாழ்க்கை மற்றும் நீர் நிலக் கீழ் வாழ்க்கைக்கு சென்றிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.அதாவது அவ் அங்கிகளுக்கு இவ் சூழல்கள் பொருத்தமானதாக மாறியிருக்கலாம் அல்லது அவை புதிய சூழலுக்கு இயைபாக்கப்பட்டு இருக்கலாம்.
உலகில் கண்டறியக்கட்ட ஒரு சில மில்லியன் உயிரிகள் தவிர முள்ளந்தண்டிலிகள் இன்னும் பல மில்லியன் அடையாளப்படுத்தப்படாது உள்ளது என்னும் கூற்றை வலுப்படுத்தும் இவ் கண்டறிவு வரும் காலத்திவான ஆராய்ச்சிகளுக்கு அடிக்கல்லை இட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக