உலகில் டைனோசர் போன்ற இராட்சத் உயிரிகள் இன்னும் வாழ்வதாக பலர் சாட்சிகளை முன் வைக்கின்றார்கள். விஞ்ஞான உலகமும் இதை உறுதிப்படுத்த பல வழிகளில் முயன்று வருகின்றது.
இதை நம்புபவர் பலர் நம்பாது வெறும் பிரம்மை என்று கூறுபவர் பலர். ஆனால் இவை பற்றி தகவல்கள் அவ்வப்போது பூமிப்பந்தில் அதுகும் வளர்ந்து உச்சத்தில் உழன்று கொண்டுள்ள விஞ்ஞான நாடுகளில் அடிக்கடி பெரும் சர்ச்சைகளை கிழப்புவது உண்டு. அந்த வகையில் தற்போது புளோரிடாவில் உள்ள பெரும் புகழ் பெற்ற கடல் கரை ஒன்றில் அண்மையில் துப்பரவு பணியில் ஈடுபட்டவர்களின் ஒருவர் கையில் இருந்த ஒளிப்படக்கருவியில் அகப்பட்ட காட்சி ஒன்று மீண்டும் இராட்சத உயிரிகள் பற்றிய கருத்துக்களை பலம் பெறச்செய்துள்ளது.
திடீரென கடல் நீர் குறிப்பட்ட ஒரு இடத்தில் அலைகள் உருவானதாகவும் அது கடலடயில் உயிரிகள் பொருட்கள் நகரும் போது உருவாகும் அலைகள் நீர் ததும்பல் நிலைக்கு ஒப்பானதாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதை தொடர்ந்து பல நாட்களாக அப் பகுதி தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதுடன் கடல் வாழ் இராட்சத உயிரி உண்ணலாம் என நம்பப்படும் பல வகையான உணவுகள் கடலில் கொட்டப்பட்டு இதை காண பலர் காத்திருக்கின்றார்கள்.
இதற்கிடையில் அது பரிய கடல் ஆமையாக இருக்கலாம் இல்லை திமிங்கிலமாக இருக்கலாம் என கருதும் சிலர் இவ் இராட்சத உயிரி என்னும் கருத்தை முற்றாக மறுத்துள்ளனர். ஆனால் விஞ்ஞான உலகு இதை இன்னும் மறுக்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக