இவர் தான் அந்த கண்டு பிடிப்பாளன் விளாடிமிர்
பெற்றோலியம் என்பது உலகின் தற்போதைய நிலையில் பல நாடுகளை வாழ வைப்பது மொதத்த உலகத்தையும் காத்து நிற்பது. உலகின் 61 சதவீதத்திலும் மேலான சக்தி இதில் இருந்து பெறப்படுகின்றது.
ஆனால் இது முடிந்து போகும் அபாயம் உள்ளதாக பல ஆண்டு காலம் கவலை இருந்து வந்தது. அதாவது சுவட்டு எரிபொருளான இது அதீத பயன்பாடு காரணமாக வெகுவிரைவில் இருக்கைகள் தீர்ந்து போய் முடிந்து விடும் என புலம்பி மாற்றுச் சக்திக்கு வழிதேடி அலைகின்றனர் பலர்.
கடலடி எண்ணெய் உற்பத்தி நிலையம்.
இந்த நிலையில் புதிய திடுக்கிடும் பலர் சந்தோசப்படும் ஆனால் தற்போது பெற்றோலியத்தை உற்பத்தி செய்து அதிக விலையில் விற்கும் நாடுகள் மாத்திரம் கவலைப்படும் விடையம் ஒன்றை க்ண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் இதுவரை பெற்ரோலியம் முன்னைய காலத்தில் பூமி மேற்பரப்பில் வாழ்ந்து அழிந்த உயிர் அங்கிகளின் சுவட்டு எச்சங்கள் பலகால வானிலை மாற்றங்களுடன் ஒன்றிணைந்து உருவாக்கிய கூழ் பதார்த்தமே பெற்றோலியம் என்றும் கருத்தையே பொய் என்று கூறியுள்ளார் அவர்.
சுவீடிஸ் விஞ்ஞானியான விளாடிமிர் குச்சிரோவெ இக் கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவரின் கருத்து படி பூமிப் படுக்கையில் உள்ள ஒவ்வொரு பாறையும் எரிபொருள் முதல் தான் என்றும் புவியீர்ப்பு காரணமாக ஏறத்தாள 10.5 கிலோமீற்றர் வரை சென்ற பாறைகள் கொண்ட ரெக்சாசும் நல்ல எண்ணெய் வளம் கொண்டது என்றும் அவர் ஆதாரம் காட்டியுள்ளார். பூமியில் உள்ள அத்தனை பாறைகளும் வெப்ப ஆமுக்க மாற்றங்களுக்கு உள்ளாகி பொற்றோலிய பொருட்களை அதாவது ஐதரோக் காபன்களை உருவாக்கும் தன்மை கொண்டவை எனக் கூறியுள்ளார்.
தற்போது உள்ள எரிபொருள் நிறுவனங்கள் எண்ணெய் தோண்டி எடுப்பதற்கான தொகையை உணர்த்தி காட்டி பெரும் இலாபம் சம்பாதிப்பதாகவும் உண்மையில் அவர்கள் கூறுவது போன்று எண்ணெய் தோண்டி எடுக்க அவ்வளவு தொகை தேவைப்படாது எனவும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார்.
தற்போது இவரின் ஆராய்ச்சிகள் எங்கு துளையிட்டு பூமியில் அடியில் உள்ள எரிபொருட்கழள அதிகமாக பெற்றுக் கொள்ளலாம் என்பதில் கருத்து ஊன்றியுள்ளது.
இவர் கருத்து உண்மையானால் பல நாடுகளும் உள் ஊர் அரசுகளும் பொய்கள் பல கூறி எணணெயால் மக்கள் வைற்றில் அடித்து காசை அடித்துள்ளது உண்மையாகும்.
அதாவது மக்களுக்கு புளி எண்ணெய் தடவியுள்ளது உண்மையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக