வியாழன், 10 செப்டம்பர், 2009

தொலைந்தவர்களை தேட கைகொடுக்கும் தொழில்நுட்பம்


கொலம்பிய முகாமில் இடம்பெயர் மக்கள்

இடப் பெயர்வுகள் குடில் போட்டுக் குடியிருக்கும் நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. அங்கு இடம்பெயர் நிலையில் வாழும் பல லட்சம் மக்களின் நிலை பற்றி தெரியாது வாழும் உறவினர்கள் பலர் உள்ளார்கள்.உயிர்வாழும் பலர் இறந்ததாகவும் இறந்த பலர் உயிர் வாழ்வதாகவும் மாற்றுக் கருத்துக்கள் உலாவும் இடமாகவும் மிகவும் பரிதாப கரமான வழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளார்கள் அவர்கள் . அவர்கள் மட்டுமல்ல நம்மில் பலருக்கும் இந் நிலைதான்.கொலம்பியாவின் தற்

இலங்கையில் இடம் பெயரும் மக்கள்


போதைய நிலையில் 43 லட்சத்துக்கு அதிகமான மக்கள் இடம் பெயர் நிலையில் சிதறி வாழ்ந்து வருகின்றார்கள்.இது அவ் அந் நாட்டு மக்கள் தொகையில் 10 சதவீதம். நம் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் இடம் பெயர்ந்துள்ள மக்கள் சதவீதம் 10 சதவீதத்திலும் அதிகம்.கொலம்பியாவின் இந்த நிலையை அறிந்து கொண்டுள்ள சர்வதேச உதவி நிறுவனங்கள் அங்கு இடம்பெயர் நிலையில் வாழும் மக்களை சிதறி வாழும் தமது உறவுகளுடன் இணைக்க புதிய தொழில் நுட்பங்களை புகுத்தவுள்ளனர்.அங்குள்ள மக்கள் தமது சமூக கட்டமைப்பு கலாச்சார விழுமியங்களை இழந்து வருவதாக தெரிவித்துள்ள தொண்டு நிறுவனங்கள் அங்கு நடைபெறும் இடம் பெயர் மக்களிடையான உரிமை மீறல்கள் மற்றும் அனைத்து செயற்பாடுகளையும் தடுக்கும் முகமாக தாம் ஒரு இணைய தளம் ஒன்றை நிறுவி அதன் மூலம் இடம் பெயர்ந்து சிதறி வாழும் மக்களை இணைக்கவும் அவர்களின் தேய்ந்து போகும் சமூக விழுமியங்கள் கட்டுக் கோப்புக்களை மீள் கட்டமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இலங்கையில் அகதி முகாமில் தமிழ் மக்கள்


போர் பாலத்தில் அகப்பட்டு படையினர் மற்றும் ஏனைய பலரால் பாதிக்கப்பட்டு தமது மொத்த சொத்துக்கள் உறவுகளை இழந்து பலர் கொலம்பியாவின் சேரிகளின் தஞ்சம் புகுந்துள்ள நிலை காணப்படுகின்றது.(தற்போதைய நிலையில் உலகின் இறுதி இடப் பெயர்வுகள் என அறியப்படுவது மூலம் இது நடைபெற்றுவிடுமா என்னும் அச்சம் தொன்னாசியாவின் தெற்கு கோடியில் உலாவுகின்றது.)எனவே இவற்றை தடுக்கு கொலம்பியாவில் பணிபுரியும் நிறுவனங்கள் உலகில் அத்தனை நாடுகளையும் கண்நோக்கவெண்டும் கைகொடுக்க வேண்டும்.குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டுள்ளார்களா இல்லையா எனத் தெரியாமல் வாழ்பவர்களை கண்டறிய உதவ வேண்டும்

1 கருத்து:

  1. இதை இங்கும் செய்யப்படவேண்டியது ஆனால் உரியவர்கள் அனுமதி கொடுப்பார்களா?
    இன்று இடம் பெயர்ந்தவர்கள் மட்டும் அல்ல கடந்த 30 வருடங்களாக இடம் பெயர்ந்தவர்கள் விபரம் கிடைக்க வேண்டும் எமது அப்பா அம்மா பாட்டன் பாட் காலத்தில் வாழ்ந்த தலைமுறைகள் அனைத்தையும் நாம் இறக்கும் முன்னர் ஒருமுறையாவது சந்திக்க வேண்டும்

    பதிலளிநீக்கு