வெள்ளி, 25 செப்டம்பர், 2009
போல்டுக்கு சாவலாகும் கே
சர்வதேச தடகளப்போட்டிகளில் நடந்த சம்பவங்கள் அண்மைய நாட்கள் அடுத்தடுத்த விறுவிறுப்பான செய்திகளை தந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக ஓட்டவீரர்களின் அடுத்தடுத்த அடைவுகள் பற்றிய செய்திகள் அடுத்து வரும் சர்வதேச சம்பியன் போட்டிகளின் மீது பெருமளவு ஆவலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உசையின் பெல்ட் மற்றும் கே ஆகியோரிடையே நடைபெறப்போகும் போட்டியை கண்டுகளிக்க தடகள ஆர்வலர்கள் ஆர்வமாக இருப்பது தெழிவாகியுள்ளது.அத்துடன் முன்னால் ஒலிம்பிக் மற்றுமு; ஏனைய விளையாட்டு வீரர்களும் இவ்விருவரும் ஒருவரோடு ஒருவர் மோதப்போகும் அந்த மைதானத்தையும் அந்த தருணத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். பலர் பலவிதமான கருத்துகளையும் கூறி வருகின்றார்கள்இவ் நிiலில் கிறிஸ்ரல் பலஸில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இவ்வருடத்துக்கான வேகமான 100 மீற்றர் ஓட்டப் பெறுதியை பெற்றுள்ளார் கே இவர் அவ் போட்டியில் 100 மீற்றரை 9.77 செக்கன்களில் ஓடி முடித்ததுடன் 200 மீற்றரை 19.58 செக்கன்களில் ஓடிமுடிந்துள்ளார். வரும் மாதம் பேர்லினில் நடைபெறவுள்ள போட்டியில் போல்ட் மற்றுமு; கே நேருக்கு நேர் மோத உள்ள நிலையில் கேயின் இவ் திடீர் வேகம் அவர் மீது இருந்து வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இவர்கள் இருவரும் மோதப்போகும் இப் போட்டி பற்றி கருத்து வெளியிட்டுள்ள முன்னால் ஒலிம்பிக் போட்டியாளரான ஸ்ரீவ் அவர்கள் இருவரும் மிகவும் வேறுபட்ட குணாதியங்கள் கொண்டவர்கள் போலட் மற்றும் கேயின் வெற்றிகள் பற்றிக் கூறுமிடத்து காலனிலை பாரியளவில் செல்வாக்கு செலுத்தும் எனத் தெரிவித்துள்ளதுடன் அசாபா பவலும் அண்மைக்காலங்களில் பிரகாசிக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவரும் இவ் ஓட்டப்பந்தயங்களில் சாதிக்கும் வல்லமை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.எதுவெனிலும் இவ் மூவரிடைNயு நடக்கப்போகும் அந்த அர்த்தம் உள்ள போட்டி ஒன்றை காணும் வரை பெறுத்து பார்க்க வேண்டும் எனவும்; தெரிவித்துள்ள நிலையில் பிறிதொர முன்னாள் ஒலிம்பிக் வீரரான பிரித்தானியாவின் கம்பெல் இவ் மூவரும் கலந்து கௌ;ளவுள்ள போட்டி பற்றி கருத்து வெளியிடுகையில் அண்மைக்காலமாக ஒலிம்பிக் சம்பியன் போல்ட் உலகம் முழுவதும் பல போட்டிகளில் விளையாடி உள்ளார் ஆனால் அவர் உலகச் சம்பியன் என்னும் அந்தஸ்துடன் கண்காட்சிக்கான அவற்றில் கலந்து கொண்டிருந்ததால் அழுத்தங்கள் எதுவும் அற்ற நிலையில் அவர் போட்டிகளில் கலந்து வந்தார் பேலினில் நடக்க உள்ள உலகச் சம்பியன்ஸ் போட்டி அவருக்கு மேலதிகமான அழுத்தங்களை ஏற்படுத்தும் ஆரம்பத்தில் போல்ட் தவறினால் அதாவது போட்டி அரம்பத்தில் போலட் தாமதித்தால் பின்னர் எவரையும் திருப்பி முந்தி விடமுடியாது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் போல்டுக்கு முக்கிய போட்டியாளராக டைசன் கே உருவெடுத்துள்ளார். ஓலிம்பிக்கில் கேயே வென்றிருக்க வேண்டும் அவரது துரதிஸ்டம் காயம் காரணமாக அவர் அச் சந்தர்ப்பத்தில் அவதிப்பட்டு வந்தார். எனவும் கூறியுள்ளார் அத்துடன் கே அதிகம் பேசாதவர் ஆனால் போலட் தனது ஆவெசங்களை போட்டி தொடங்கும் தொடக்க கோட்டிலேNயு கொட்டி தீர்க்கும் தன்மை மிக்கவர் எவ்வாறு இவ் இருவரும் பேலின் போட்டி ஆரும்பத்தில் நடந்து கொள்ள போகின்றார்கள் என்பது தெரிந்து கொள்ள ஆவலாக உள்ள விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.ஆத்துடன் போல்ட் 100 மீற்றர் போட்டியில் 9.7 செக்கன்கள் என்னும் நேரக்கணிப்பில் ஓடி கேயை முந்தலாம் என கருத்துரைத்துள்ள அவர் கே 200 மீற்றரில் முதலிடம் பெறுவார் என்றும் கூறியுள்ளார். எது எவ்வாறாகிலும் குறுந்தூர ஓட்ட உலகின் அண்மைகால நாயகனும் முன்னைய நாயகனும் மிக நெருக்கமான நேரக்கணிப்புடன் ஒரே போட்டியில் மோதிக் கொள்வது தடகள இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிகளை கொடுக்கும் என்பது பலரது கருத்து
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக