ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

பயிர் வளர்த்த பசி தீர்த்த விஞ்ஞானி காலமானார்




நோபல் பரிசு பெற்ற வேளான் விஞ்ஞானியான Norman Borlaug தனது சேவைகளை உலகம் மறக்காது விட்டு இவ் உலவை விட்டு அகன்றுள்ளார்.

கடந்த நூற்றாணடில மகத்தான சாதனைகளில் மிகத் தேவையான சாதனைகளில் ஒன்றான உணவு பற்றாக்குளையை தீர்க்க வழி தேடும் முயற்சியை தனியாளாக சாதித்தவர் இவர்.

நாள் பயிர் வளர்த்தேன் நீங்கள் நன்றே பசியாற
இவரின் கட்டை கோதுமை இன்றும் பல கோடி உயிர்களை உடலுடன் ஒட்டவைத்துக் கொண்டுள்ளது என்பது உண்மை.


1914 இல் இவ் பூமியை தொட்ட இவர் அமெரிக்காவில் மின்னேசொற்றாவில் நாட்டிய முதல் பயிர் இன்று உல் முழுக்க பரவி நிற்கின்றது.


1960 இற்கும் 1990 இற்கும் இடையில் இவரின் கண்டுபிடிப்பின் காரணத்ததால் உலக உணவு உற்பத்தி இரண்டு மடங்காகியது. அப்படி இருந்தும் உலகின் 100 கோடி பேர்வரை சரியான உணவின்றி இன்றும் காணப்படுகின்றனர்.


இதில் இருந்து இவரின் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன என்பது புரியும்.


இதனால் இவரின் இவ் கண்டுபிடிப்பின் மகத்துவம் பாராட்டி இவருக்கு 1970 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


தனது 90 வயது தாண்டியும் பசியை போக்க உழைத்த இவர் புகழ் விரும்பா மனிதர்களுள் ஒருவர்.


இவர் தனது கண்டு பிடிப்புக்களை இவ் உலகிற்கு காணிக்கை ஆக்காது விட்டிருப்பின் உலகின் இன்றைய இருப்பும் நிலையும் என்ன என்று எண்ணி பார்க்கவே இயலாததாக இருந்திருக்கும்.


அதாவது அழிவின் விழிம்பில் இருந்த உலகை காப்பாற்றிய இவரை "Man made the world a better place" உலகை நல்ல இடமாக மாற்றிய மனிதர் என செல்லமாக அழைப்பர்.


அதாவது வாழத்தகுந்த இடமாக மாற்றியவர் என அழைப்பர்.
மனிதர்கள் வாழும் போது இவ் உலகிற்கு விட்டு செல்ல எதையாவது செய்தாகவேண்டும் ஆனால் நம்மில் பலர் தாமக செய்யார் செய்பவரை பின் தொடர்வதாய் காட்டி நிற்பார் அவரிடம் இருந்து நன்மைகளை கறப்பார். பின்னர் அவர் பலம் இழக்கையில் அல்ல அவர் முயற்சியில் பின்னடைகையில் தூர விட்டு ஓடிவிடுவர் புறம் சொல்லி புண்படுத்துவார்.. அண்மைய சாட்சிகள் இதற்கு பதில்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக