புதன், 9 செப்டம்பர், 2009

பலர் பாவிக்கக் கூடியதாக வளரும் ஈருருளி


உலகில் ஆயிரம் போக்குவரத்து சாதனங்கள் வலம் வந்தாலும் இன்றும் நமது நாட்டில் மட்டுமல்ல உலகின் பலரது கவனத்தையும் தொடர்ந்து தக்க வைத்துள்ளது பலரது பயணங்களை இலகு ஆக்குவது ஈருருளிகள் தான் இதை மறுக்க முடியாது.
இது மட்டுமல்ல மாசாகும் இவ் பூமியில் தொடர்ந்து நிலைத்திருக்க கூடிய போக்குவரத்து சாதனம் என்னும் பெருமையை பெற்றுள்ளதும் முன்னாள் மலேசிய பிரதமருக்கு பெருமை தேடித் தந்ததும் இதுவே.

அதுவும் சிறுவர்கள் மத்தியில் இன்று வரை சந்ததி சந்ததியாக தொடரும் ஒரு இலட்சியம் ஈருருளி ஓட்டி பழகுவமதும் ஓடுவதுமாகும்.

ஆனால் இவ் இலட்சியம் ஆசை பல பெற்றோருக்கு வைற்றில் புளியை கரைத்து வந்தது. இதற்கு காரணம் ஒன்று பிள்ளைகள் வளர வளர புதியதாக ஈருருளி வாங்கவேண்ம் இது பொருளாதார நெருக்கடி மற்றது பிள்ளைகள் வீதியில் செல்லும் போது விபத்துகள் மற்றும் பாதிப்புக்கள்இதை தடுக்கு மிகப் பொருத்தமான உயரத்தில் தமது பிள்ளைகளுக்கு ஈருருளி வாங்குவது

தற்போது இவ் அச்சங்களில் இருந்து மீளும் பொருட்டு ஜேர்மனிய ஆராய்சியாளர்கள் ஒரு புதிய ஈருருளியை வடிவமைத்துள்ளார்கள் அதுதான மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

பிள்ளைகள் வளர வளர அதன் உயரம் மற்றும் நீளம் என்பனவற்றை மாற்றக்கூடியதாக மூட்டுக்கள் பொருத்துக்கள் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டள்ளது Kilobike எனப் பெயரிடப்பட்டுள்ளஇது 6 முதல் 12 வரையான வயதுள்ள சிறுவர்கள் பாவிக்கக் கூடியதாக உள்ளதாக கூறப்படுகின்றது.ஏன் விரும்பினால் பெரியவர்களும் பாவிக்கலாம்

இவ் 6 முதல் 12 வயதே சிறுவர்கள் போட்டி போட்டு வளரும் வயதாகவும்.

அத்துடன் வீட்டில் வேறு வேறு பல வயதுள்ள சிறுவர்கள் இருந்தால் அனைவருக்கும் தனித் தனியாக ஈருருளி வாங்கி கொடுக்க வேண்டியது இல்லை இதில் ஒன்று இருந்தால் போதும்.அது உயரமானவருக்கு உயரமாகும் நீளமாகும் பின்னர் தேவை ஏற்படின் குள்ளமாய் குறுகும்

சிறுவர்கள் எச்சரிக்கை இனியும் உங்கள் பெற்றோர் பணம் இல்லை பாதுகாப்பில்லை என்று கதை விட விடாதீர் அண்ணணும் தம்பியும் ஒப்பந்தத்தில் நேரம் கணித்து ஓட ஒரே ஈருருளியாக இதை வாங்கி கொள்ளுங்கள்.
ஏனெனில் நாகரீகம் நகர வாழ்க்கை என்னும் வேகத்தில் இன்று பல சிறுவர்கள் ஈருருளி ஓடத்தெரியாமல் உள்ளது வேதனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக