

பூச்சியை பறக்க விட்டு அதன் பறப்பு திசையில் புகை செலுத்தியபோது தோன்றிய வாயு இயக்கவியல் உருவம்.
பூச்சிகள் எவ்வாறு பறப்பை மேற்கொள்ளகின்றன அதாவது பறவைகளை விட பூச்சிகள் மிகவேகமாக பறப்பதை நாங்கள் கண்டுள்ளோம்.
நாம் அதிகம் அதை பற்றி சிந்தித்ததில்லை.
ஆனால் மேற்குலகம் அது பற்றி கடுமையாக சிந்தித்து நேரத்தை செலவிட்டது.
அதன் விழைவு பூச்சிகள் எவ்வாறு பறப்பை மேற்கொள்கின்றன என்பதற்கான வாயு இயக்கவியல் சான்றுகளை சேகரித்துள்ன சவுத்வேல் பல்கலைக்கழகமும் ஒக்ஸ்போட் பல்கலக்கழகககும்.
தத்து வெட்டியின் பறப்புக்கான வாயு இயக்கவியல் நிலைதன்மை என்ன என்பதை கண்டறிந்துள்ள இவ் இரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் உலகின் மிகவும் அனுகூலுமான வினைத்திறன் மிக்க பறப்பு பொறிமுறையின் இரகசியங்களை தாம் கண்டறிந்துள்ள மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
இது பூச்சிவிமானங்கள் என தற்போது அழைக்கப்படுகின்றது
இவ் பூச்சியன் பறப்பு பொறிமுறையை மையமாக கொண்ட விமானங்கள் அல்லது றோபோ விமானங்களை உருவாக்கிட விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.
அதாவது வேமாக நகர்வு கொண்ட இவை மீ்ட்பு பணிகள் இராணுவத் தேவைகள் தேடுதல்கள் மாசடைந்த சூழல் ஆராய்ச்சிகள் போன்றவற்றில் பயன்படும் என்னும் நோக்கில் இவ் ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே பூச்சி வேகத்தில் நாமும் பறப்பதற்கு தயாராக வேண்டும்.
ஆனால் இதை செய்யும் நாடுகள் மக்களுக்கு அதை பயன்படுத்த முன்னர் தமது படைக்கு பயன்படுத்தி விடுவார்கள் என்பதுதான் உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக