வியாழன், 24 செப்டம்பர், 2009
சந்திராயனுக்கு ஒரு குரல்.
சுந்திராயனே நீ செய்தது சரியா.
பல ஆயிரம் மைல் அப்பால் உள்ள அம்புலியில் நீ நீர் கண்டாய்.
உன்னை ஏவுகையில் நீ இதை அறிந்தாயோ தெரியாது.
ஸ்ரீகரிக் கோட்hவில் இருந்து வெறும் 1000 மைல் தான் இருக்குமையா
நந்திக் கடல் என்னும் ஒரு இடம்.
அதில் நிறமற்ற தண்ணீர் நிறம் கொண்டது குருதியின் மணம் கொண்டது
சுந்திரனில் நீ கண்வைத்தபோது இங்கும் அங்குள்ள விண்கள் முட்டிய கிடங்குகள் போல் பல கிடங்குகள் தினமும்.அதற்குள்ளேயே உயிர் தப்ப ஒளிந்து உயிரிழந்து வீழ்ந்த பலர் திருவுடல்கள்.
மூடிவிட்டுத் தான் வந்தோம் இன்னும் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் உண்மைகள் பலவற்றில் அதுவும் சில.
அது உனக்கு தெரியவில்லையா.
உன் திருசிய மானியில் கண்ணுக்கு புலப்படாப் பொருட்கள் தான் தெரியமா?.வெறும் தூசும் மாசும் தான் தெரியுமா?
அது சரி மாசாகிப் போன பூமியில் மானிடம் மனிதரில் யாருக்கு புரியும். நீ இயந்திரம் தானோ.
உன்னால் முடிந்தால்
தேடிப்பார் ஏதாவது தெரியும் எனச் சொல்லமுன் நீ செயலிழந்து போனாய்.
ஏன் சில வேளை நீயும் ஏதாவது காணததைக் கண்டாயா
முள்ளிவாய்க்கால் பக்கம் போனாயா
சுந்திரனில் நீர் தோண்டிய உன்னை முள்ளிவாய்க்காலின் சிவப்பாறு முடக்கிவிட்டிருக்கலாம்.இல்லை உன்னை முடுக்கி விட்டவர்கள் முடக்கி விட்டிருக்கலாம்
ஏம்மை பெறுத்தவரையில் நீ என்ன சாதனை செய்தாலம் தோற்றவன் தான் அண்மை பார்வை உனக்கு இல்லை.
ஐ.நாவின் செய்மதி சொன்னது அமெரிக்காவின் செய்மதியும் சொன்னது. நீயும் சொல்லிப்பார் அதை இட்டு தன்னும் நாம் சந்தோசப்பட்டிருப்போம்.
ஏனொனில் நீ கொண்ட நாடு பிராந்தியத்தை கண்கானிப்பதும். பிராந்திய நலனுக்காய் பிரம்மை கொள்வதும் நடப்பதால் இந்த நப்பாசை.
சரி நீ சொன்னதை செய்தாய் ஆனால்
சுற்றத்தை பார்க்காது நீ சந்திரனை சுற்றி என்ன பயன்.
இல்லை இந்த அடைபட்ட வாழ்க்கை விட்ட அங்கு எம்மை குடியேற்றி வைப்பாயா.
இல்லை எனின் நீயும் தோற்றவன் தான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக