சனி, 26 செப்டம்பர், 2009

தூக்கமின்மை மனநோய்க்கு அறிகுறியாம்? அமைலோயிட் பீற்றாவின் அதிரடி



தூக்கமின்றி தவிப்பவர்களே உடன் மருத்துவரை நாடுங்கள்.தூக்கமின்றை Alzheimer's எனப்படும் ஒருவகை மனநோய்க்கு வழிவகுக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். பொதுவாக மனிதன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படும் எலியை ஆராய்ந்த விடத்து இதை கண்டறிந்துள்ளார்கள்.எலியை தூங்கவிடாது வைத்திருந்த போது சில புரதங்களில் செறிவு மூழையில் மாற்றங்களை காண்பித்ததாகவும் இது மனனநோய்க்கான அறிகுறி என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அமைலோயிட் பீற்றா என்னும் புரதமே இதற்கு முக்கிய காரணம் என்றும்.இவற்றின் செறிவு வேறுபாடுகள் முழையை செயலற்றதாக்கிவிடும் தன்மை கொண்டுள்ளதாக உள்ளதா தெரிவித்துள்ளார்கள்.தற்போதைய நிலையில் ஒறெக்ஸின் எனப்படும் மருந்து இதற்கு மாற்றீடாக உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.அதாவது பீற்றா அமைலோயிட் செறிவு மூழையில் அதிகமாக உள்ளபோது தூக்கமின்னை ஏற்படும் நீண்ட நேரம் விழித்து இருக்கலாம் அது குறையும்போது மீண்டும் தூக்கம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.எனவெ உழைப்பு வேகமான வாழ்க்கை என சுற்றி அலையும் மானிடம் தாம் துயில் கொள்ளும் நேரத்தை குறைத்து கொள்கின்றார்கள் அதை சொல்லி தம்மை தாம் புகழிந்தும் கொள்கின்றார்கள் ஆனால் அவர்களுக்கு அமைலோயிட் பீற்றா என்னும் ருபத்தில் வைத்தது இயற்கை வேட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக