வியாழன், 17 செப்டம்பர், 2009

மரம் தரும் இனி மின்சாரம்


ஐயா நானும் தயார் உங்களுக்கு மின்சாரம் தர வெள்ளைகாரன் மரத்தை விட நான் பெரியவன் சரியா


நான் தான் முதல் மின்சாரம் தந்தவன் "மாபிள்"

மரம் வளர்தால் கறன்ற் எடுக்கலாம்.
மரம் வளர்த்தால் இனி கறன் ( மின்சாரம் எடுக்கலாம் எனக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மரம் மின்னை கடத்துவதாக கூறியிருந்நது ஆனால் தற்போது ஒரு படி மேலே போய் மரம் தன்னகத்தே எப்போதும் 200 மில்லி வோல்ற் மின்னை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.தாவர ஒளித் தொகுப்பு பின்னர் அவ் ஒளித் தொகுப்பில் உருவான உணவு சில உலோகங்களுடன் தாக்கும் போது இவ் மின்சாரம் உருவாவதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் மரத்தின் இலை மற்றும் அவை கொண்டுள்ள நீர் உள்ளடக்கங்கள் மின்சார உற்பத்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.தற்போதைய நிலையில் பாரிய இலை கொண்ட "மாபிள்" எனப்படும் மேலைத்தேய மரமே ஆராய்ச்சிக்கு உட்படுத்த பட்டுள்ளது. வரும் காலங்களில் சிறப்பு கருவிகள் மற்றும் மின் சேகரிப்பு பொறிகள் கொண்டு மின்னை மரத்தில் இருந்து சேமிக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 1.1 வோல்ற் வரையான மின்னை மரத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது. மரம் வளர்த்து சூழலை சுத்தப்படுத்த எவரும் முன் வரா விட்டாலும் இனி கறன்ற் எடுக்கவாவது யாரும் மரம் வளர்ப்பார்கள் என்று நம்புவோம் . ஏனெனில் எமக்கு நோகாமல் பயன் தந்தால் தான் பிடிக்குமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக