வியாழன், 15 அக்டோபர், 2009
10 வீத தாவரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்கா
கியூ தாவரவியல் பூங்கா
பிரித்தானியாவின் தாவரவியலாளாளர்களால் பிரித்தானியாவின் கியூ தாவரவியல் பூங்கா மூலம் புதிய சாதனை ஒன்று நிலைநாட்டப்பட்டுள்ளது. பூமியில் உள்ள தற்போது வாழ்ந்து வருகின்ற ஆபாயத்தில் உள்ள தாவரங்களில் விதைகள் சேகரிக்கப்பட்டு அவை அழிந்து விடாது பாதுகாக்கும் திட்டம் ஒன்றின் மூலம் 10 வீத புவி வாழ் தாவரங்கள் பாதுகாக்கப்பட்ள்ளது .54 நாடுகளில் இயங்கும்
பிரித்தானிய றோயல் தாவரவியல் பூங்காக்கள் என்னும் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் கிளைகள் மூலம் இதை செய்துள்ளனர் தாவரவியலாளர்கள்.
பாதுகாக்கப்படும் தாவரம் ஒன்று
முக்கியமாக அழிவின் அபாயத்தில் உள்ள தாவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளன இன்னும் சேகரிக்கப்பட்டுக் கொண்டுள்ளன.இத் திட்டம் மூலம் 2020 இவ் புவியில் வாழும் தாவர இனங்களில் 25 வீதமானவற்றை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் 60000 தொடக்கம் 100000 வரையான தாவரங்கள் அழிவின் அபாயத்தி்ல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது முக்கியமாக மனித செயற்பாடுகள் மூலம் இது நடந்தேறி வருகின்றது.கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 3.5 பில்லியன் விதைகள் செகரிக்கப்பட்டு அந்தந்த நாடுகளிலும் மற்றும் பிரித்தானியாவின் ஆடிங்லி என்னும் இடத்திலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நீங்களும் வேண்டுமானால் உங்கள் இடத்தில் உள்ள அருகி வரும் ஆபாயத்தில் உள்ள இனங்களை பாதுகாக்கும் பணியில் இணையாலாம்.
http://www.kew.org/
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
விக்கிசெய்தியில் தந்துள்ளேன். பார்க்க: விக்கிசெய்தி.
பதிலளிநீக்குநன்றி
நன்றி நீங்கள் தரமானதாக கருதும் எனது பதிவுகளை தாரளமாக பயன்படுத்தலாம்.
பதிலளிநீக்கு