புதன், 28 அக்டோபர், 2009
இராட்சத கடல் வாழ் அங்கியின் சுவடுகள்
இராட்சத அங்கின் உருவமும் அதன் ஏனைய அங்கிகளுடன் ஆன ஒப்பீடும்
கடலில் வாழ்ந்ததாக கருதப்படும் இராட்சத அங்கி ஒன்றின் வன்கூடுகள் எச்சங்களாக கண்டறியக்கட்டுள்ளதாக பிரித்தானியா ஆய்வுக் கழகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்டுள்ள தாடை என்புகள்.
இதன் நீளம் மட்டும் 8 அடி அதாவது 2.4 மீற்றர் நீளம் கொண்டுள்ளதாகவும் இதன் மொத்த நீளம் ஏறத்தாள 16 மீற்றர் அதாவது 54 அடியாக இருக்கலாம் எனவும் அவ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது முதளை உருவாகதாக இருக்கலாம் என்றும் ஒரு நேர உணவுக்கே டைனோசர்களில் ஒன்றான Tyrannosaurus rex இனை உண்ணும் அளவில் அவற்றின் உணவு உண்ணும் வினைத்திறன் காணப்பட்டிருக்கும் என்னும் ஆரம்பக் கட்ட ஆய்வின் பின்னர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நான்கு வருட தொடர் ஆராய்ச்சியின் பின்னர் இதை கண்டறிந்துள்ள தொல் பொருள் மற்றும் சுவட்டு ஆய்வாளர் இது பிரித்தானியாவின் தெற்கு கடற்கரையில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என்றும் பிலியோசரஸ் எனப்படும் வகுப்பினுள் உள்ளடக்கப்படும் அங்கியின் சுவடு என்றும் தெரிவித்துள்ளார்.
7 தொடக்கம் 12 தொன்வரையான நிறைகொண்டிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ள இவ் சுவட்டு ஆதாரமே இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளதில் மிகப் பெரிது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் இவ் சுவட்டு ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் கடல் பிரதேசத்தில் மேலும் இவ்வகையான சுவட்டு ஆதாரங்கள் ஏதாவது கிடைக்கின்றனவா எனத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.நான்கு அவயவங்கள் கொண்டுள்ளதாகவும் வேகமாக நீந்தும் தன்மை கொண்டதாகவுமு் இவ் அங்கி இருந்துள்ளது என்றும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில் வருடங்களுக்கு முன்னர் நோர்வேயில் கண்டெடுக்கப்பட்ட இரை கெளவ்வி ஒன்றின் வன்கூடும் 2002இல் மெக்சிக்கொவில் கண்டெடுக்கப்பட்ட அராம்பெரி இராட்சத அங்கியின் வன்கூடும் ஒரே அளவுடையதாக கருதப்படுகின்றது.
கணிணி வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அங்கியின் உருவம்
பூமியில் மனிதன் இன்று ஆட்சியாக இருந்தாலும் வெவ்வேறு சூழல் தொகுதிகளில் வெவ்வேறு மிருகங்கள் முன்னைய காலத்தில் ஆட்சியாக வாழ்ந்து அழிந்துள்ளன என்பதற்கு மீண்டும் ஒரு பலமான ஆதாரம் கிடைத்துள்ளமை இட்டு ஆராச்சி உலகு மீ்ண்டும் ஒருமுறை சந்தேசப்பட்டுள்ளது.
நன்றி பிபிசி மற்றும் ரைம்ஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக