செவ்வாய், 13 அக்டோபர், 2009

சிறுத்தைகளின் அதிரடி





இலக்கு பார்க்கும் சிறுத்தை


தாக்குதலுக்கு தயாராகின்றனர் அண்ணன் தம்பிகள்





சிறுத்தைகள் உலகின் ஓட்ட வீரர்கள்.
அவர்களோடு போட்டி போட இன்னும் யாரும் இல்லை என்று தெரியும் நமக்கு.அத்துடன் அவர்கள் வீரர்களும் கூட. நாட்டு சிறுத்தைகளை இங்கு நான் கூறவில்லை அது நான் கூறித்தான் தெரியவேண்டும் என்னும் இல்லை காட்டு சிறுத்தைகளை கூறுகின்றேன்.இவர்கள் பயங்கரமான எதிரிகள் காட்டு வாழ் மிருகங்களுக்கு.
இந்த வகையில் தற்போது பிரித்தானியாவின் தொலைக்காட்சி குழு ஒன்று அண்மையில் காண அரிய காட்சி ஒன்றை படம் பிடித்துள்ளது.


மும்முரமான வேட்டையில்


அத்துடன் பலருக்கு இருந்தவந்த ஒருவகை சந்தேகத்தையும் தீர்த்துள்ளது.
பொருவாக சீத்தா புலியா அல்லது தீக்கோழியா ஓட்ட வீரர் என்றும் பலசாலிகள் என்னும் கோள்விக்கு பலர் பலமுறை விழித்தே பதில் தருவார் ஆனால் சிறுத்தை செய்து காட்டியுள்ளது நான்தான் ஓடவிட்டால் வெல்வேன் என்று எனக்கும் பலம் உள்ளது என்றும்.
அதாவது பயங்கரமான சிறுதாக்கள் மூன்று தீக்கோழி ஒன்றை கலைத்து வேட்டையாடும் படங்களை சேகரித்துள்ளது குறிப்பிட்ட தொலைக்காட்சி குழு.
கென்யாவின் லீவா சரணாலயத்தில் இதை படம்மாக்கியுள்ளனர் அவர்கள்.அத்துடன் பொதுவாக தனியே வேட்டையாடும் சிறுத்தைகளுக்கு மத்தியில் இவை மூன்று பேர் இணைந்து வேட்டையாடும் புதிய யுக்தியையும் கற்றுக் கொண்டுள்ளதை காணமுடிவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பொதுவாக சீத்தாக்கள் தம்மை விட சிறிய அங்கிளை வேட்டையாடும் தன்மை வாய்ந்தவை ஆனால் இவை எருதுகள் மற்றும் தம்மை விட மிகவும் பலம் வாய்ந்த தீக்கோழிகளை வேட்டையாடுவது பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மிருகங்களின் நடத்தையியல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.


கூர்ப்பின் விழைவா இல்லை அவை பழகிய சூழலின் தன்மையா இவற்றின் இவ் மாற்றத்துக்கு காரணம் என்று ஆராய தலைப்பட்டுள்ளது விஞ்ஞான உலகு.
அது மட்டு மல்ல உலகில் இரு போன்ற மாற்றங்கள் நிறைய வரவேண்டும் குறிப்பாக மனிதனிடத்தில் வரவேண்டும் அடிமைப்படுத்த நினைப்பவர்களுக்கு அவர்களை வேட்டையாடி கற்றுத் தரவேண்டும் நாம் யாரென்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக