வெள்ளி, 16 அக்டோபர், 2009

உயிரி எரிபொருளாலும் ஆப்பா. என்ன செய்யும் உலகு.


தற்போது ஏற்பட்டுள்ள புவியின் காலநிலை மற்றும் மாசுப்பிரச்சினைக்கு முக்கிய காரணம் சுவட்டு எரிபொருள் பாவனை என்றும் அதற்கு மாற்று வழி தெரிவு செய்யப்படின் காபனீரொட்சைட்டை வெளியிடுவது குறைந்து புவியின் மாசாக்க வீதம் குறைவதால் காலநிலைப்பிரச்சினை இல்லாமல் போய் விடும் இல்லை குறையும் என முன்னர் கூறி வந்த கருத்துக்கே விஞ்ஞானிகள் தற்போது மறு கருத்து வெளியிட்டு வருகின்றனர்.தற்போதைய நிலையில் இவ் உயிரி எரிபோருட்களே காபனீரொட்சைட் வெளியீட்டுக்கு காரணமாகிவிட்டது என்னும் திடுக்கிடும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதில் இருந்து அவதானமாக இருக்கும் படி கோரிக்கையும் விடுத்துள்ளனர்.பல விதாமன ஆராய்ச்சிகளை பல நாடுகளில் நடாத்தியதன் பின்னர் அதாவது இவ் உயிர் எரிபொருட் பாவனையால் காலநிலை சூழல் நிலம் நீர் விவசாயம் ஆகியவற்றில் ஏற்படும் தாக்கம் என்ன என்று ஆராயந்த விடத்தில் அது பயனுள்ளதாக இருந்தாலும் பெருமளவு காபனீரொட்சைட்டை வெளியிடுவதை தடுத்தாலும் வேறுபல பிரச்சினைக்கு காரணமாகி விடுகின்றது கண்டறியப்பட்ள்ளது.குறிப்பாக காடழித்து அந்த நிலத்தில் பயிர்களை வழர்த்து அதன் மூலம் பெறப்படும் உயிரி எரிபொருட்கள் பூமிக்கு தாக்கம் விழைவிக்கின்றதாக தெரிவிக்கின்றனர்.அதாவது பெருமளவு காட்டு பரப்புகள் அழிக்கப்படுவதால் நிலத்தில் இருந்தான காபன் சக்கரம் தடைப்டுவதுடன் காட்டு தாவரங்கள் அளவில் இவ் உயிரி எரிபொருளுக்கான தாவரங்கள் காபனீரொட்சைட்டை பதிக்காது போவதால் இது ஏற்படுகின்றது.தற்போதைய தரவுகளின்படி சுவட்டு எரிபொருள் பாவனையால் வெளிவிடப்படும் காபன் அளவை விட இவ் காடழித்தல் மூலம் தேங்கும் காபன் 2000 மடங்கால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதாவது உயிரி எரிபொருட்களை பாவிக்கும் போது அவை சாதாரண சுவட்டு எரிபொருட்களை விட 80 வீதத்தால் காபன் வெளியீட்டை குறைக்கின்றன ஆனால் அவை காடழித்து பயிர் செய்யப்பட்டு பெறப்பட்டால் காபன் வெளியீட்டை 800 வீதத்தால் கூட்டுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது மட்டுமல்லாமல் பூமியில் தற்போதைய போக்குவரத்து தேவையின் 10 வீதம் உயிரி எரிபொருளால் நிரப்ப பனய்தரு நிலத்தில் 41 சதவீதம் தேவைப்படுகின்றது இதனால் பெருமளவு விழை நிலங்கள் விழுங்கப்படலாம் என்பதும் பிறிதொரு கருத்துஎனவே பூமியைக் காக்க திட்டங்கள் வேறு வகையில் அமுல் படுத்தினாலும் அது பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக உள்ளது.ஆனால் இதற்கும் மாற்றுவழி தேடும் வல்லமை மரபணுப் பொறியலாளர்களின் கையில் உள்ளது. என்பது உண்மை.அதாவது பாழ்பட்டுப்போய் உள்ள நிலங்களில் விழையக்கூடிய பயிர்களை தேடி மரபணுப் பொறயியலில் உருவாக்கினால் எல்லாம் சரிவரும் பார்ப்போம் எத்தனையூ பண்ணி விட்டார்கள் இதையும் பண்ணுவார்கள் விஞ்ஞானிகள் என எதிர்பார்த்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக